என் மலர்
நீங்கள் தேடியது "Extension"
- சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வரும் 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டது. இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது.
நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக நவம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பயீர் காப்பீடு செய்ய நாளை, நாளை மறுநாள் வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 27 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.
- மகப்பேறு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் விரிவுப்படுத்த வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு சுகாதார மறுசீரமைப்பு திட்ட துணை இயக்குநர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது, திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய ங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், புதிய மருத்துவமனை கட்டடமாக தகவமைப்பு செய்து தர கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில், வரப்பெற்ற 204 கோரிக்கைகளில், 48 கோரிக்கைகள் வட்டார அளவிலும், 143 கோரிக்கைகள் மாவட்ட அளவிலுள்ள நிதியின் மூலமாக தீர்வு காணும் வகையிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இக்கோரிக்கைகளில் 13 கோரிக்கைகள் மட்டும் மாநில நிதி மூலம் மட்டுமே தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது. 13 கோரிக்கைகளுக்கு உரிய ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:
திருவாரூர் பழைய அரசு மருத்துவமனை கட்டிடம் செயல்பாடின்றி உள்ளது. அதனை அகற்றிவிட்டு 100 படுக்கைகள் கொண்ட புதிய மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண்டும். விஜயபுரம் மகப்பேறு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் விரிவுப்படுத்த வேண்டும்.
மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீரை என்பது சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். இதன்மூலம் திருவாரூர் பொதுமக்களின் மருத்துவ தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
- நெற்பயிருக்கு கடன் வழங்க 13-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களுக்கான சிறப்பு திறனாய்வுக் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
அப்போது அவர் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் 20 ஆயிரத்து 878 விவசாயிகளுக்கு ரூ.108.30 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டது. 30.12.2022 வரை 33ஆயிரத்து330 விவசாயிகளுக்கு ரூ.205.19 கோடி பயிர்கடனும், 5ஆயிரத்து661 விவசாயி களுக்கு ரூ.81.27 கோடி கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதன கடனும் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்பின் மூலமா கத்தான் இந்த ஆண்டு பயிர்கடன் வழங்குவதில் சாதனை படைத்துள்ளோம்.பயிர் கடன் ஆரம்ப காலத்தி லேயே கொடுக்கும் பட்சத்தில் மற்றும் ஆண்டுதோறும் இதே நடைமுறையை பின்பற்றுவதன் மூலம் விவசாயிகளிடம் கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மீது விவசாயிகளிடையே நம்பிக்கை வளரும்.
இதன் மூலம் இடைத்தர கர்களின்றி விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கும். விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் ஆரம்ப காலங்களில் பயிர் கடன் வழங்குவதால் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு மாவட்டத்தில் விவசாயத்தில் பெரிய மாற்றத்தை பார்க்க முடியும். கடன் வழங்குவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பளவு 4.51 லட்சம் ஏக்கர். மொத்த விவசாயிகள் 1.74 லட்சம். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் 5-ல் ஒரு பங்கு விவசாயிகளுக்கு இதுவரை பயிர்கடன் வழங்கி உள்ளோம். பயிர்கடன் அளவை உயர்த்தும் வகையில் மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுவின் மூலம் பயிர் கடன் அளவை அனைத்து பயிர்களுக்கும் 25 சதவீதம் உயர்த்தியும், பயிர் கடனை திரும்ப செலுத்தும் கால அளவை 1 வருடமாக உயர்த்தியும் மாநில தொழில்நுட்ப குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டிற்கான நெற்பயிருக்கு கடன் வழங்கும் காலத்தை 13.1.2023 வரை நீட்டித்து உத்திரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மனோகரன், வேளாண்மை துறை இணை இயக்குநர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ் கோடி, கூட்டுறவு சங்கங் களின் துணை பதிவாளர்கள் சுப்பையா (ராமநாதபுரம் சரகம்), கோவிந்தராஜன் (பொது விநியோகத் திட்டம்), முருகன் (தாம்கோ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை 13-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பயிற்சியின்போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்தது.
மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலை யத்தில் 2022-23ம் ஆண்டிற்கான பயிற்சி மாணவர்கள் நேரடி சேர்க்கை வருகிற 13-ந் தேதி வரை நீடிக்கப்பட்டு 2-ம் கட்டமாக நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.
மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலை யத்தில் உள்ள தொழிற் பிரிவுகளான கம்மியர் மோட்டர் வாகனம், நில அளவையாளர், மின்சாரப் பணியாளர், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய தொழிற் பிரிவுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் சேரலாம்.
மாணவர்கள் 13-ந்தேதி வரை மானாமதுரை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் வளாகம், பாப்பாமடையில் நேரில் வருகை தந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு விண்ணப்பிக்க வரும்போது தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், அசல் சாதிச் சான்றிதழ், அசல் மாற்றுச்சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பயிற்சியின்போது பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், உதவித்தொகை மாதம் ரூ.750 ஆகியவை வழங்கப்படும்.
பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்ததும் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
மேலும் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு 9865554672 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
மதுரை
செகந்திராபாத்-ராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் ஜனவரி மாத இறுதி வாரம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரெயில்களின் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் (07695) பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 22 வரை புதன்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் சேரும்.
மறு மார்க்கத்தில் ராமநாதபுரம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (07696) பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 24 வரை வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சேரும்.
இந்த ரெயில்கள் நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 3 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
- இந்த ரெயில் சேவை நாளை (15-ந் தேதி) மற்றும் 22-ம் தேதிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
தஞ்சாவூர்:
தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 4 சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் - 06035) எர்ணாகுளத்தில் இருந்து சனிக்கிழமை மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
இந்த ரயில் சேவை நாளை (15-ந் தேதி) மற்றும் 22-ம் தேதிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (வண்டி எண் -06036) வேளாங்கண்ணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
இந்த ரயில் 16 மற்றும் 23-ந் தேதிகளில் நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரத்தூர் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியதின் அவசர அவசியம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார்
- அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் பொது பணித் துறையால் நிறை வேற்றப்பட வேண்டியதுகுறித்து சிவகுமார் எம்.எல்.ஏ. பேசினார்
விழுப்புரம்,
சட்டமன்ற கூட்டத் தொடரில் மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் முண்டியம்பாக்கம் ஒரத்தூர் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியதின் அவசர அவசியம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார். அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் பொது பணித் துறையால் நிறை வேற்றப்பட வேண்டியது குறித்து சிவகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.
இது குறித்து தமிழக சட்ட சபையில் சிவக்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:- சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை முண்டி யம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமையுள்ள மேம்பா லத்தை ஒரத்தூர் பிரிவு சாலை வரை அமைக்கப்பட வேண்டும். இந்த மேம்பா லம் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளதாகவும், கூடுதலாக ரூ.17.245 கோடி நிலம் எடுப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முண்டியம்பாக்கம் மருத்துவமனை மட்டும் அல்லாமல் இதன் அருகே 300 மீட்டர் தொலைவில் ஒரத்தூர் பிரிவு சாலையும் 200 மீட்டர் தொலைவில் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆண்டுகளில் சாலை விபத்தில் 2100 பேர் மரணம் அடைந்துள்ளனர். 6300 விபத்துக்கள் நடை பெற்றுள்ளன. இப்பகுதியில் தொடர் விபத்தில் நடைபெறுவதால் முண்டியம்பாக்கம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை மேம்பாலம் ஒரத்தூர் பிரிவு சாலை வரை நீடிக்கப்பட வேண்டுமென தமிழக முதல்வரையும், பேரவை தலைவரையும் துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்த துறை அமைச்சர், இது சம்பந்த மாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரி களிடம் நேரடியாகவும் தொலை பேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு பேசப் பட்டுள்ளது. முண்டியம் பாக்கம் மேம்பாலம் நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று பதில் அளித்தார்.
- சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரெயில்க ளாக இயக்கப்பட்டு வரு கின்றன.
- இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரெயில்க ளாக இயக்கப்பட்டு வரு கின்றன. இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெங்களூரு-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06547) சனிக்கிழமை களில் காலை 7.50 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணரா ஜபுரம், பங்காருபேட்டை வழியாக காலை 11.50 மணிக்கு சேலம் வந்தடை யும். இங்கிருந்து 11.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர் திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் வழியாக இரவு 7 மணிக்கு வேளாங் கண்ணி சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் வேளாங் கண்ணி- பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06548) சனிக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு சேலம் வந்த டையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலம் தெரிவித்துள்ளது.
- வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
- இப்படிப்புகளில் சேர சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத் துடன் விண்ணப்பித்தனர்.
சேலம், ஜூன்.12-
தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இப்படிப்புகளில் சேர சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத் துடன் விண்ணப்பித்தனர். மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி கடந்த 9-ந்தேதி வரை எனவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள், பொதுமக்கள் பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ெதாடர்ந்து வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 1-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும் www_skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
- பெண் பயிற்சியாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும் www_skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதில் வெல்டர், வயர்மேன் போன்ற பிரிவுக ளுக்கு 8-ம் வகுப்பிலும் எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைக ளின் நவீன தொழில்நுட்பத் திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள டெக்னா லஜி சென்டர் 40-ல் மானு பாக்சரிங் பிராசஸ் கண்ட் ரோல் அண்ட் ஆட்டோ மேசன், இண்டஸ்ட்ரியல் ரோபாட்டிக்ஸ் அண்டு டிஜிட்டல் மானுபாக்சரிங், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கிள், அட்வான்ஸ்டு சி.என்.சி. மெஷினிங் டெக்னீசியன் போன்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பி லும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கைபேசி எண், மின்அஞ்சல், ஆதார் அட்டை, சாதிச்சான் றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆகும்.
பயிற்சி பெறும் மாண வர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ் பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு பெண்கள் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண் பயிற்சியாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களின் மூலம் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற்றுத்தரப்படும்.
இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க தேதி வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரிவித்துள்ளார்.
- அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறி உள்ளார்.
- இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
விருதுநகர் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறி முறைகள் கடந்த 14.6.2018-ல் வெளியிடப்பட்டன.
இந்த திட்டத்தின் கீழ் இணையம் வழியாக 14.6.2018 முதல் 13.9.2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப் பங்களுக்கு இசைவு வழங்கு வதற்கு சென்னை ஐகோர்ட்டு விதிக்கப் பட்டிருந்த தடையை நீக்கி 10.2.2021 அன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 22.3.2021 முதல் 4.4.2021 வரை 2 வார காலத்திற்கு விண்ணப்ப ங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறிய வர்களுக்கு 31.12.2022 வரை 6 மாத காலம் அவகாசம் வழங்கப் பட்டது. தற்போது இதற்கான கால அவகாசம் 30.6.2023 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவல கங்களை அணுகலாம்.
மேலும் https://tcp.tn.gov.in என்ற இணைய முகவரி யில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜனவரி மாதம் 30-ந்தேதி முதல் திறக்கப்பட்டு மே மாதம் 31-ந்தேதி வரை கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
- மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காமல் விடுப் பட்டதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி வருகிற 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப் பட்டுள்ளது.
சேலம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக கல்லூரிகளுக்கான https://tnadtwscholarship.tn.gov.in/ இணையதளம் கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி முதல் திறக்கப்பட்டு மே மாதம் 31-ந்தேதி வரை கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதில் சில மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காமல் விடுப் பட்டதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி வருகிற 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்
பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப் பித்து பயன்பெறுமாறு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.