search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "APPRENTICESHIP"

    • தொழிற்பயிற்சி சான்று பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்களை பெறலாம்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    தொழிற்பயிற்சி நிலையங்களில் கடந்த மார்ச் 30-ந் தேதி பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப் பட்டுள்ளது. இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது, அகில இந்திய தொழிற்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையமான முத்துப் பட்டியிலுள்ள சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விண்ணப்பத்தி னை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிகேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று, இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்வி சான்றிதழ்க ளுடன் சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 3-ந் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும். மேலும், விவரங்களுக்கு 9944887754 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாளை முதல் நடைபெற உள்ளது.
    • 10-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாளை (வியாழக்கிழமை) முதல் நடைபெற உள்ளது.

    இதற்கு கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி/ 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற, தோல்வியுற்ற மாணவ- மாணவிகள் மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அந்தந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு 04365-250 129, 04369-276 060 மற்றும் 94871 60168 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார்‌ தொழிற்‌ பயிற்சி நிலையங்களில்‌ அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும்‌ www_skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
    • பெண்‌ பயிற்சியாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்‌.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும் www_skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    இதில் வெல்டர், வயர்மேன் போன்ற பிரிவுக ளுக்கு 8-ம் வகுப்பிலும் எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைக ளின் நவீன தொழில்நுட்பத் திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள டெக்னா லஜி சென்டர் 40-ல் மானு பாக்சரிங் பிராசஸ் கண்ட் ரோல் அண்ட் ஆட்டோ மேசன், இண்டஸ்ட்ரியல் ரோபாட்டிக்ஸ் அண்டு டிஜிட்டல் மானுபாக்சரிங், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கிள், அட்வான்ஸ்டு சி.என்.சி. மெஷினிங் டெக்னீசியன் போன்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பி லும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கைபேசி எண், மின்அஞ்சல், ஆதார் அட்டை, சாதிச்சான் றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆகும்.

    பயிற்சி பெறும் மாண வர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ் பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு பெண்கள் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண் பயிற்சியாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களின் மூலம் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற்றுத்தரப்படும்.

    இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க தேதி வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரிவித்துள்ளார்.

    • விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று 28-ந்தேதிக்குள் உரிய விண்ணப்பித்து சமர்ப்பித்து பயனடையலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி–யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தகவல் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில் மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 11, 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்–பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து, அரசு தேர்வுகள் இயக்க–கத்தால் ஆகஸ்ட்-2022-ல் நடத்தபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வழங்கலாம்.

    விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதனை பின்பற்றி விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28-ந்தேதிக்குள் உரிய விண்ணப்பித்து சமர்ப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2-வுக்கு இணையான தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி வழங்கப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து அரசு தேர்வு இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022-ல் நடந்த மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பபடிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழி காட்டுதல் www.skilltraining.tn.gov.in (http://www.skilltraining.tn.gov.in/) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

    மேற்கண்ட சான்றிதழ் பெற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 04562-252655 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் கணேசன் ஆண்கள் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஆய்வு செய்தார்.
    • தொழிற்பயிற்சி படிக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

    சேலம்:

    தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் சேலத்திற்கு இன்று வந்தார். அவரை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் வரவேற்றனர் தொடர்ந்து அமைச்சர் கணேசன் ஆண்கள் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு உள்ள தொழில் கூடங்களை பார்வையிட்ட அவர் தேவையானவை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தொழிற் பயிற்சிக்கு வளமான எதிர்காலம் உள்ளது.

    தொழிற்பயிற்சி படிக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். இதனால் மாணவர்கள் தொழிற்பயிற்சியை சிறப்பாக கற்று அதற்கான வேலை வாய்ப்புகளில் சேர வேண்டும் என்றார். அப்போது அவருடன் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தொழிலாளர் நலத்துறை இயக்குனர் வீரராகவர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வளாக சுற்றுச்சூழல் தனிக்கை பயிற்சிகள் போன்றவற்றை இணைந்து மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
    • அந்தந்த கல்வி நிறுனங்களின் துறைத்தலைவர்களும், ஆசிரியர்களும் உடன் இருந்து உதவி புரிந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் சுற்றுச்சூழல் அறிவியல் தொடர்பான கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள், மாணவர்களுக்கான பணிப்பயிற்சி திட்டங்கள் மற்றும் வளாக சுற்றுச்சூழல் தனிக்கை பயிற்சிகள் போன்றவற்றை இணைந்து மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்ப்ந்தம் செய்து கொண்டன.

    தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் முன்னிலையில் பதிவாளர் முனைவர் தியாகராஜன், பிஷப் ஹீபர் கல்லுரியின் முதல்வர் முனைவர் பால் தயாபரன் ஆகியோர் 5 ஆண்டுகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்நிகழ்வில் அந்தந்தக் கல்வி நிறுனங்களின் துறைத்தலைவர்களும், ஆசிரியர்களும் உடன் இருந்து உதவி புரிந்தனர்.

    • கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியுடன் கணினி மேலாண்மை மற்றும் நகைமதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான சான்றிதழ்கள் இப்பயிற்சியிலே வழங்கப்படும்.
    • இப்பயிற்சியில் சேர குறைந்த பட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் வெளியிட்ட அறிவிப்பில் மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ண ப்பங்கள் விநியோகம் 18.07.2022 முதல் தொடங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியுடன் கணினி மேலாண்மை மற்றும் நகைமதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான சான்றிதழ்கள் இப்பயிற்சியிலே வழங்கப்படும்.விண்ணப்பங்களை பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து அல்லது கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

    விண்ணப்பம் பெற கடைசி நாள் 28.7.2022 ஆகும் விண்ணப்பங்களை முதல்வர், பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், தாலுக்கா அலவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு, நாடிமுத்து நகர் அஞ்சல், பட்டுக்கோட்டை- 614602 என்ற முகவரிக்கு தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்க 1.08.2022 (மாலை 05.30 மணி) கடைசி நாள் ஆகும்.இப்பயிற்சியில் சேர குறைந்த பட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்டபடிப்பு முடித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரின் அலைபேசி எண்கள் 94860 45666, 97888 25339, 63811 46217 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • இலவச தொழில் பயிற்சியில் சேர வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் சுய வேலைவாய்ப்புபயிற்சி நிறுவனம் சார்பில் நடத்த–ப்படும் கீழ்கண்ட இலவச தொழிற் பயிற்சி பெற ஆர்வமுள்ள வேலை–வா–ய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது: எலக்ட்ரிக்கல், மோ–ட்டார் ரீவைண்டிங்,சிசிடிவி இன்ஸ்டாலேசன் மற்றும் சர்வீஸிங் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

    எவ்வித கட்டணமும் இன்றி 100 சதவீதம் செயல்மு–றை பயிற்சி, சீருடை, மூன்று வேலையும் உணவு, தேநீர், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உட்பட அனைத்தும் இலவச–மாக வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். மேற்கண்ட பயிற்சி வகுப்புகள் 25.07.2022 அன்று தொடங்க–ப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும். 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்தால் போதும்,

    பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4, ஆதார் மற்றும் ரேசன் கார்டு, மாற்றுச் சான்றிதழ், 100 நாள் வேலை அட்டை ஆகிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    முன்பதிவு தொடர்புக்கு : 9944850442, 9626497684, 7539960190, 7804202360, 9626644433, இயக்குநர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (ஆர்.டி.ஓ அலுவலகம் பின்புறம்), திருச்சி மெயின்ரோடு, கீழுப்பழுவூர், அரியலூர் என முகவரியை தொடர்பு–கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப–ட்டுள்ளது.

    ×