என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடக்கம்
- கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியுடன் கணினி மேலாண்மை மற்றும் நகைமதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான சான்றிதழ்கள் இப்பயிற்சியிலே வழங்கப்படும்.
- இப்பயிற்சியில் சேர குறைந்த பட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் வெளியிட்ட அறிவிப்பில் மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ண ப்பங்கள் விநியோகம் 18.07.2022 முதல் தொடங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியுடன் கணினி மேலாண்மை மற்றும் நகைமதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான சான்றிதழ்கள் இப்பயிற்சியிலே வழங்கப்படும்.விண்ணப்பங்களை பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து அல்லது கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பம் பெற கடைசி நாள் 28.7.2022 ஆகும் விண்ணப்பங்களை முதல்வர், பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், தாலுக்கா அலவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு, நாடிமுத்து நகர் அஞ்சல், பட்டுக்கோட்டை- 614602 என்ற முகவரிக்கு தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்க 1.08.2022 (மாலை 05.30 மணி) கடைசி நாள் ஆகும்.இப்பயிற்சியில் சேர குறைந்த பட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்டபடிப்பு முடித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரின் அலைபேசி எண்கள் 94860 45666, 97888 25339, 63811 46217 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






