10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்களை பெறலாம்

தொழிற்பயிற்சி சான்று பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்களை பெறலாம்.மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்களை பெறலாம்
Published on

சிவகங்கை

தொழிற்பயிற்சி நிலையங்களில் கடந்த மார்ச் 30-ந் தேதி பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப் பட்டுள்ளது. இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, அகில இந்திய தொழிற்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையமான முத்துப் பட்டியிலுள்ள சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பத்தி னை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிகேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று, இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்வி சான்றிதழ்க ளுடன் சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 3-ந் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும். மேலும், விவரங்களுக்கு 9944887754 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com