தொழிற் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்பு இணை சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று 28-ந்தேதிக்குள் உரிய விண்ணப்பித்து சமர்ப்பித்து பயனடையலாம்.
தொழிற் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்பு இணை சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி–யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தகவல் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில் மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 11, 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்–பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அரசு தேர்வுகள் இயக்க–கத்தால் ஆகஸ்ட்-2022-ல் நடத்தபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வழங்கலாம்.

விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதனை பின்பற்றி விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28-ந்தேதிக்குள் உரிய விண்ணப்பித்து சமர்ப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com