என் மலர்
நீங்கள் தேடியது "விண்ணப்பம்"
- விண்ணப்பங்களை கொடுக்காமலேயே தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர்.
- விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 50 சதவீதம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நிறைய வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார்.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் இதுவரை 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவத்தை வழங்குவோம் என்று கூறினார்கள், மூன்று முறை வீட்டு கதவை தட்டுவோம் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சரியான பயிற்சி இல்லை. இதன் காரணமாக வாக்காளர்களுக்குரிய விண்ணப்பபடிவங்கள் அவர்களை சென்று சேரவில்லை. மேலும், விண்ணப்ப படிவங்களை பெற்றவர்கள் குறைந்த அளவிலேயே, அதாவது 40 சதவீதத்திற்கு உள்ளேயே தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். இந்த நிலையில் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுக்குரிய வாக்காளர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விண்ணப்பங்களை கொடுக்காமலேயே இப்படி தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் பெரிய மோசடி நடந்துள்ளதாக கருதுகிறோம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம்.
ஆனால் கலெக்டர் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம் அப்படி ஏதாவது விடுபட்டவர்கள் இருந்தால் அடுத்த மாதம் 4-ந்தேதிக்கு மேல் அதற்குரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்கிறார். அது எப்படி முடியும் அது முடிகிற காரியமா? எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆளும் கட்சியான தி.மு.க. இந்த வாக்காளர் விண்ணப்ப படிவத்தை அதிகளவில் பெற்றுள்ளனர். அவர்களுடைய தலைவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். அப்போது அந்த நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொடுத்து வருகிறோம் என்று கூறுகிறார். அப்படி என்றால் அந்த விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
எனவே தேர்தல் அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு அனைத்து வாக்காளர்களிடம் அவர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற முடியும். இல்லாவிட்டால் அதில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனையும் மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஆகும்.
- விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
ஐ.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான 'கேட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன.
இது நுழைவுத்தேர்வாக மட்டுமன்றி இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேருவதற்கும் இதில் பெரும் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி, 'கேட் 2026' நுழைவுத்தேர்வு என்ஜினீயரிங், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட 30 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. ஒரு தேர்வர் ஒன்று அல்லது இரண்டு தாள்கள் தேர்வை தேர்வு செய்து எழுதலாம்.
இந்த தேர்வை என்ஜினீயரிங் இளநிலை பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு அல்லது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எழுத முடியும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஆகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 14, 15-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
- கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பங்களை மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என அறிவிப்பு.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2025-2026 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 25.06.2025 இன்று முதல் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, விண்ணப்பங்களை 29.06.2025 மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தி பிரசார சபா நடத்தும் 8 நிலை தேர்வுகளை கடந்த ஆண்டு, 3.50 லட்சம் பேர் எழுதினர்.
- சென்னை, மதுரை, திருச்சி, கோவை இடங்களில் இருந்து அதிகமானவர்கள் இந்தி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை (தமிழ், ஆங்கிலம்) பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு இருந்த நிலையிலும், விருப்பப்பட்டு படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் தடை ஏதுமில்லை. 3-வது மொழியான இந்தியை தமிழகத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்தி பிரசார சபா நடத்தும் 8 நிலை தேர்வுகளை கடந்த ஆண்டு, 3.50 லட்சம் பேர் எழுதினர். ஆந்திராவில் 1.15 லட்சம் பேரும், கர்நாடகம், கேரளாவில் 25 ஆயிரம் பேரும் இந்தி தேர்வை எழுதினர். தென் மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிகமானவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.
தற்போது, ஜூலை, ஆகஸ்டில் நடக்கும் தேர்வுக்கு தற்போது வரை 3.75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை இடங்களில் இருந்து அதிகமானவர்கள் இந்தி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன
- என்ஜினீயரிங் படிப்புக்கு வருகிற 6-ந்தேதி வரை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. ஜூன் 2-ந்தேதி (அதாவது நேற்று) மாலை 6 மணி நிலவரப்படி, என்ஜினீயரிங் படிப்புக்கு 2 லட்சத்து 81 ஆயிரத்து 266 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 மாணவர்கள், ஒரு லட்சத்து 579 மாணவிகள் என மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 386 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளார்கள்.
தமிழகத்தில் உள்ள 11 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரிகளிலும் தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்பவும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் 12 பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளன. இதனால், அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 54 கூடுதல் இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.
என்ஜினீயரிங் படிப்புக்கு வருகிற 6-ந்தேதி வரை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஏதேனும் விளக்கங்கள் தேவை இருந்தால், தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டு உள்ள 110 தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவும், tneacare@gmail.com என்ற இ-மெயில் முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எம்.பி.ஏ. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை சமீபத்தில் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு பேசியது.
- மாணவர்களுக்கான உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.
மும்பை:
மராட்டியத்தில் என்ஜினீயரிங், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சட்டம், பி.எட் உள்ளிட்ட படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வு அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் எம்.பி.ஏ. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை சமீபத்தில் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு பேசியது. அந்த கும்பல் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதாகவும், பிரபல கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாகவும் கூறி மாணவர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கேட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அமைக்கப்பட்டு இருந்த மாணவர்களுக்கான உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் டெல்லியை சேர்ந்த கும்பல் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவுகளை திருடி பிரபல கல்லூரிகளில் சீட்டு வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோசடி தொடர்பாக டெல்லியை சேர்ந்த அபிஷேக் ஸ்ரீவட்சாவ், சேத்தன் குமார், அம்பிரிஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
- எஞ்சிய 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளது.
- நேர்முகத்தேர்வு ஏப்ரல் 1-ந்தேதி நடத்தப்பட்டு, 2-ந்தேதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சியிலும், பிற இடங்களிலும் மொத்தம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 140 மையங்கள் உள்பட 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு ஜூன் 6-ந்தேதி முதலமைச்சர் திறந்துவைத்தார்.
ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் மாவட்ட சுகாதார சங்கங்களின் மூலம் பணியமர்த்தப்பட்டனர். காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும் இந்த மையங்களில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் அளிக்கப்படுகின்றன. நோயாளிகள் டாக்டர்களை காணொலி மூலமாக தொடர்பு கொண்டும் சிகிச்சை பெற முடியும்.
இந்த நிலையில், எஞ்சிய 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளது. அங்கு பணிபுரிய டாக்டர்கள், நர்சுகள் நியமனத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 டாக்டர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில், டாக்டர்களுக்கு மாதம், ரூ.60 ஆயிரம், நர்சுகளுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு வரும் 24-ந்தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். நேர்முகத்தேர்வு ஏப்ரல் 1-ந்தேதி நடத்தப்பட்டு, 2-ந்தேதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசின் உதவித்தொகைக்கு கல்லூரி மாணவிகள் நவம்பர் 11-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
தமிழக முதல்-அமைச்சரால் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல்படிப்பு மற்றும் தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைபெண்திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள்இந்த திட்டத்தில் உதவி
தொகையை பெற்று பயனடைந்துள்ளார்கள். தற்போது, இந்த வலைதளத்தில் (https://www.pudhumaipen.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும்மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
இந்த வலைத்தளத்தில், மாணவிகள் அனைவரும்சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக வருகிற 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரைபதிவுசெய்யலாம்.
அரசு பள்ளிகளில்பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமேவிண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.
இந்த திட்டதின்கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும்கல்வி பயிலும் நிறுவனங்களில் வருகிற 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள்நடைபெறும். மாணவிகள் தவறாமல் தங்களது ஆதார்அட்டை மற்றும் (கல்விமேலாண்மை தகவல்திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2,3 மற்றும் 4-ம்ஆண்டுகளில்படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநிலஅளவில் செயல்படும் உதவிமையத்தினை திங்கள்முதல் வெள்ளிவரை, காலை 10 மணிமுதல்மாலை 5 மணிவரை (91500 56809), (91500 56805), (91500 56801) மற்றும் (91500 56810) எண்களி ல்தொடர்புகொள்ளலாம். மேலும், mraheas@gmail.com என்றமுகவரிக்குமின்னஞ்சல்அனுப்பலாம்.
தொழில்நுட்பபடிப்புகளில்முதலாம்ஆண்டுபயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பமுறையினை சரியாகதெரிந்துகொண்டு, கடைசிதேதிக்கு முன்பாகதவறாமல்விண்ணப்பிக்குமாறுகேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
- சிறுபான்மை மக்களுக்கான கடன் வழங்கும் திட்டங்களுக்கு ரூ.7 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தகுதி அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பரிசீலனை செய்து கடன் வழங்கப்பட்டு வருகிறது.
கும்பகோணம்:
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்திருப்பனந்தாளில் நடைபெற்றது. முகாமிற்கு ராமலிங்கம், எம்.பி தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு தலைவர் தேவிரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் அண்ணாதுரை, பேரூராட்சி தலைவர்வனிதா ஸ்டாலின் , பேரூராட்சி துணை தலைவர்கலைவாணி சப்பாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்யாணசுந்தரம் எம்.பி. முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராகதலைமை அரசு கொறடா கோவி. செழியன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முகாமில்பொது கால கடன் திட்டம், சிறுதொழில் வியாபாரம், பெண்களுக்கான சிறு கடன் வழங்கும் திட்டம், சுயஉதவிக்குழு தனிநபர்கடன்பு திய பொற்காலத் திட்டம்,கறவை மாடு கடன் திட்டம், இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு சுயத்தொழில் தொடங்க கடன் திட்டம், நெசவாளர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான கடன் வழங்கும் திட்டங்களுக்கு ரூ.7 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.95 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உரிய முறையில் பரிசீலனை செய்து கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.முகாமில் மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா தேவி, பேரூராட்சி செயல் அலுவலர் சின்னதுரை, தி.மு.க பிரதிநிதிகள் மிசா மனோகரன், குமார், சாமிநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாலகுரு, ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், மகேஸ்வரி அருள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நிறுவனங்கள், விநியோகஸ்தராக 3 வருட அனுபவம் கொண்டிருப்பதுமுக்கியம்.
- விருப்பமுள்ள நிறுவனங்கள், வரும் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்:
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., சேவைகளை விற்பனை செய்ய விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து கோவை வணிக பொது மேலாளர் பால்வண்ணன் கூறியுள்ளதாவது:-
திருப்பூர், கோவை வர்த்தக பகுதிகளில் சிம் கார்டு, ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் இதர பி.எஸ்.என்.எல்., சேவைகளை விற்பனை செய்வதற்கு, நேரடி விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.டெலிகாம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எப்.எம்.சி.ஜி., (FMCG) எனும் வேகமாக விற்கக் கூடிய, நுகர்வோர் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.நிறுவனங்கள், விநியோகஸ்தராக 3 வருட அனுபவம் கொண்டிருப்பதுமுக்கியம்.
விருப்பமுள்ள நிறுவனங்கள், வரும் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை, http://www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 89034 18128 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
- பல்கலைக்கழகம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் தனித்தேர்வர்களுக்கான சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
- பல்கலைக்கழகம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் தனித்தேர்வர்களுக்கான சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
திருப்பூர்:
பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் 1982 - 83 ம்கல்வியாண்டு முதல் 2006 - 07 வரையிலான காலத்தில் பயின்று தேர்வில் தோல்வியான தனித்தேர்வர்களுக்கு, பிரத்யேக தேர்வுகள் நடத்த கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து பல்கலைக்கழகம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் தனித்தேர்வர்களுக்கான சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இந்த சிறப்பு தேர்வுகளில் பங்கேற்க அபராதம் இன்றி வரும், 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. அபராதத்துடன் செலுத்த, வருகிற 10-ந் தேதி இறுதிநாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 2007 - 08ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
- அருப்புக்ேகாட்டை அருகே உள்ள சமத்துவபுரத்தில் 21 வீடுகளுக்கு பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அருணாச்சலபுரம் கிராம ஊராட்சி, சின்ன செட்டிகுறிச்சி உட்கடை கிராமத்தில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. இவற்றில் 79 வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருந்து வருகின்றனர்.
மீதமுள்ள 21 வீடுகளுக்கு பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பதால் தற்போது 21 வீடுகளுக்கு தகுதியுள்ள பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அதன்படி எஸ்.சி./எஸ்.டி. பிரிவில் 2 பயனாளிகளும், எம்.பி.சி. பிரிவில் 6 பயனாளிகளும், பி.சி. பிரிவில் 3 பயனாளிகளும் மற்றும் ஓ.சி. பிரிவில் 10 பயனாளிகளும் தேர்ந்தெ டுக்கப்பட உள்ளனர்.
சின்னசெட்டிகுறிச்சி உட்கடை கிராமத்திற்கு 3 கி.மீ. சுற்றளவில் வசித்து வரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வீடற்ற தகுதியான பயனாளிகள் அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று விருப்ப மனுவினை தேவையான ஆவணங்களுடன் வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






