என் மலர்
நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் படிப்பு"
- நேற்று மாலைநேர தகவலின்படி, 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
- இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக ஆர்வம் காட்டும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை:
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
அதன்படி, விண்ணப்பப்பதிவு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மாலைநேர தகவலின்படி, 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
இவ்வளவு விண்ணப்பங்கள் வந்திருந்தாலும், அதில் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்பவர்கள்தான் அடுத்தகட்டமாக கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
அந்தவகையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 168 மாணவ-மாணவிகள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியிருக்கின்றனர். விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான போட்டியில் 2.44 லட்சம் இருக்கின்றனர். அவர்களில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 102 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர். சான்றிதழ்களை 9-ந்தேதி வரை (நாளை மறுதினம்) பதிவேற்றம் செய்யலாம்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக ஆர்வம் காட்டும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் அதாவது 2021-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரையில் முறையே 1,45,043, 1,69,083, 1,87,847, 2,09,653 பேர் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி படிப்புகளில் சேருவதற்காக காத்திருந்தனர்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள காலி இடங்களுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருப்பார்கள். இந்த ஆண்டு அதுபோல் இல்லை. அதாவது, அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் இடங்களுக்கு, 2 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் சார்ந்த படிப்புகளை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால், அந்த படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு 10-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்டு, 27-ந்தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.
கலந்தாய்வு குறித்த தற்காலிக அட்டவணை எப்போதும் முன்கூட்டியே வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு அப்படி வெளியிடப்படவில்லை. தரவரிசைப் பட்டியலை வெளியிடும்போது, கலந்தாய்வு குறித்த தேதி அறிவிக்கப்படும் எனவும், ஜூலை முதல் மற்றும் 2-வது வாரத்தில் கலந்தாய்வு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதவிர, பி.ஆர்க் படிப்புக்கான நாடா நுழைவுத்தேர்வு ஜூன் இறுதி வாரம் வரை நடைபெற இருப்பதால் பி.ஆர்க் படிப்புக்கான இணையதள விண்ணப்பப்பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 30-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 463 என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் (2025-26) 7 புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
- என்ஜினீயரிங் படிப்புக்கு இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
- என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. என்ஜினீயரிங் படிப்புக்கு இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 11 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரிகளிலும் தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்பவும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் 12 பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளன. இதனால், அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 54 கூடுதல் இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைய உள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஏதேனும் விளக்கங்கள் தேவை இருந்தால், தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டு உள்ள 110 தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவும், tneacare@gmail.com என்ற இ-மெயில் முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
- அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன
- என்ஜினீயரிங் படிப்புக்கு வருகிற 6-ந்தேதி வரை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. ஜூன் 2-ந்தேதி (அதாவது நேற்று) மாலை 6 மணி நிலவரப்படி, என்ஜினீயரிங் படிப்புக்கு 2 லட்சத்து 81 ஆயிரத்து 266 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 மாணவர்கள், ஒரு லட்சத்து 579 மாணவிகள் என மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 386 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளார்கள்.
தமிழகத்தில் உள்ள 11 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரிகளிலும் தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்பவும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் 12 பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளன. இதனால், அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 54 கூடுதல் இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.
என்ஜினீயரிங் படிப்புக்கு வருகிற 6-ந்தேதி வரை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஏதேனும் விளக்கங்கள் தேவை இருந்தால், தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டு உள்ள 110 தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவும், tneacare@gmail.com என்ற இ-மெயில் முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 7-ந்தேதி தொடங்கியது.
- பதிவு ஆரம்பித்ததில் இருந்தே மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
சென்னை:
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 7-ந்தேதி தொடங்கியது. பதிவு ஆரம்பித்ததில் இருந்தே மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் தினமும் குறைந்தது 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 28 ஆயிரம் பேர் வரை இதுவரை விண்ணப்பித்துள்ளனர். நேற்று வரையிலான தகவலின்படி, 2 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருக்கின்றனர்.
விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 404 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 210 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் இருப்பதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
- என்ஜினீயரிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியது.
- பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 8-ந்தேதி வெளியாகும் நிலையில் ஜூன் 6-ந்தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 2023-24-ம் கல்வி ஆண்டில் பி.இ., பி.டெக், பி.ஆர்க் போன்ற என்ஜினீயிரிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி என்ஜினீயரிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியது.
பிளஸ்-2 முடித்துள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதி விறக்கம் செய்து அதை நிரப்பி விண்ணப்பிக்க தொடங்கினார்கள்.
www.tneaonline.org மற்றும் www.tndte.gov.in ஆகிய இணைய தளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையத்திலும் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 8-ந்தேதி வெளியாகும் நிலையில் ஜூன் 6-ந்தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 7-ந்தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. ஜூன் 12-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும்.
ஜூலை 12-ந்தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் ஏதாவது குறைகள் இருந்தால் ஜூலை 13-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அணுகி சரி செய்து கொள்ளலாம்.
இதையடுத்து என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 2-ந்தேதி தொடங்குகிறது. அன்று முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பங்கேற்பார்கள். அதன் பிறகு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 7-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- வருகிற 26-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.
- ஜூலை 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு, தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி தொடங்க உள்ளது. ஜூலை 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. அதன் பிறகு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 24-ந்தேதி வரை நடக்கிறது.
என்ஜினீயரிங் படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ந் தேதி தொடங்கியது. விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. என்ஜினீயரிங் படிப்பில் சேர தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் விண்ணப்ப கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 20,306 பேர் அதிகம். விண்ணப்பங்களின் பதிவு நேற்று முடிவடைந்தாலும் விண்ணப்பங்களை பதிவேற்ற வருகிற 9-ந்தேதி வரை அவகாசம் உள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.
இந்நிலையில் என்ஜினீயரிங் மாணவர்களை தேர்வு செய்வதற்கான அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒதுக்கப்பட உள்ளது. மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் ஆன்லைன் மூலம் வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து தரவரிசை பட்டியல் வருகிற 26-ந் தேதி வெளியிடப்படும்.
மேலும் மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.
- ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
- கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பி.இ. மற்றும் பி.டெக். என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பபதிவு இன்று தொடங்கியது.
மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்தனர். விண்ணப்பங்களை நிரப்பி, அசல் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 6-ந்தேதி கடைசி நாள் ஆகும். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12-ந்தேதி ஆகும்.
அன்றே ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் ஜூன் 13-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை சேவை மையம் வாயிலாக இணையதளம் மூலம் சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதையடுத்து ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சேவை மையம் மூலம் மாணவ-மாணவிகள் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
அதன்பிறகு என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. முதலில் அரசு பள்ளிகளில் படித்த சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.
அதன் பிறகு பொது பிரிவில் சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.
அதனை தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுக்கல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது. அதன் பிறகு துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
பின்னர் எஸ்.சி.ஏ. காலியிடம் எஸ்.சி. வகுப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.
- வழக்கம் போல இ.சி.இ., இ.இ.இ. என்ஜினீய ரிங் பாடப் பிரிவுகளுக்கும் மவுசு குறையவில்லை.
- பொறியியல் கல்லூரிகளில் காலத்திற்கேற்ப புதிய பாடப்பிரிவுகளை தொடங்குகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 6-ந்தேதி தொடங்கியது.
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.
இன்று காலை நிலவரப்படி 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். 10 நாட்களாக பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க அடுத்த மாதம் 6-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்றும், வீடுகளில் இருந்தும் விண்ணப்பித்து வருகின்றனர்.
நேற்று மாலை வரை 91,877 பேர் பதிவு கட்டணம் செலுத்தியுள்ளனர். 55,324 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ், பாடப்பிரிவுகளில் சேர ஆர்வமாக உள்ளனர். வேலைவாய்ப்புக்கு எளிதாக வழி வகுப்பதால் இந்த பாடங்களை தேர்வு செய்கிறார்கள்.
அதே நேரத்தில் வழக்கம் போல இ.சி.இ., இ.இ.இ. என்ஜினீய ரிங் பாடப் பிரிவுகளுக்கும் மவுசு குறையவில்லை. பொறியியல் கல்லூரிகளில் காலத்திற்கேற்ப புதியபாடப்பிரிவுகளை தொடங்குகிறார்கள்.
இந்த நிலையில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 20-ந்தேதி கடைசி நாளாகும். கடந்த ஆண்டை விட இந்த வருடம் 3 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் சுயநிதி கலைக்கல்லூரிகளில் பி.காம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. தமிழ், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ. போன்ற பாடப்பிரிவுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். வணிகவியல் பாடத்தில் சதம் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பி.காம், பாடப்பிரிவுகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் அரசு கலைக்கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் சேர்ந்து படிக்கவே விரும்புகின்றனர்.
சட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பி.ஏ., எல்.எல்.பி. 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். 22 சட்டக் கல்லூரிகளில் 2,043 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு இதுவரையில் 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
சென்னை தரமணியில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் பி.ஏ., எல்.எல்.பி. (ஹானர்ஸ்) 5 ஆண்டு படிப்பு உள்ளது. இதில் உள்ள 624 மொத்த இடங்களுக்கு இதுவரையில் 3,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிக்க 31-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- பொதுப்பிரிவு கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது.
- முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள்.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 2 லட்சம் மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்தாய்வை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு இன்று தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கவுன்சிலிங் நடைபெறும்.
பொதுப்பிரிவு கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது. பல்வேறு கட்டங்களாக நடைபெறும் கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி வரை நடக்கிறது.
தமிழகத்தில் தற்போது 433 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2.41 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். எல்லோருக்கும் இடங்கள் கிடைக்கும். ஆனால் விரும்பிய கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் கிடைப்பதுதான் கடினம்.
பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாடங்கள் உள்ளன. 3 சுற்றுகளாக ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வு முடிந்த பிறகும் மாணவர்கள் விரும்பினால் கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த ஆண்டு 8 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது. புதிதாக 3 கல்லூரிகள் உருவாகி உள்ளன. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
- தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பி.இ. படிப்புகளில் சேர 2.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாளாகும்.
- பி.இ. படிக்க கடந்த 4 ஆண்டுகளைவிட நிகழாண்டு விண்ணப்ப பதிவு அதிகரித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 20-ந்தேதி தொடங்கியது. சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமானதால் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவை முடிக்காமல் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு கடந்த 22-ந்தேதி வெளியானது. இதையடுத்து கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. பொறியியல் படிப்புகளில் உள்ள 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்களுக்கு இதுவரை 2,11,905 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கலை அறிவியல் கல்லூரிகளில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு இதுவரை 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 பேர் விண்ணப்பித்துள்ளனர். பி.இ., கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பப்பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே அறிவித்தபடி கடந்த புதன்கிழமை நிறைவடைந்து விட்டது.
பி.இ. படிப்புக்கு மட்டும் வெள்ளிக்கிழமை மாலை வரை சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் பணம் செலுத்தலாம். 'நாட்டா' தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை பி.ஆர்க்., படிப்புக்கு தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். பி.இ. படிக்க கடந்த 4 ஆண்டுகளைவிட நிகழாண்டு விண்ணப்ப பதிவு அதிகரித்துள்ளது.
- தேர்ச்சி பெறாதவர்கள் கவலைப்பட வேண்டாம்.
- நம்பிக்கையோடு அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்.
சென்னை:
பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஜூன் 24-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் வரும் வரை இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிளஸ்-2 பரீட்சை முடிவுகளில் யார்-யாரெல்லாம் தேர்ச்சி பெற்றுள்ளனர், யார்-யாரெல்லாம் அடுத்த கட்டத்துக்கு நகர முடியவில்லை என்பது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தேர்ச்சி பெறாதவர்கள் கவலைப்பட வேண்டாம். தன்னம்பிக்கைதான் முக்கியம். மீண்டும் முயற்சி செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியும். அந்த நம்பிக்கையோடு அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்.
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதமே அடுத்த தேர்வை உடனே நடத்தி இந்த கல்வி ஆண்டே மாணவர்கள் உயர் கல்விகு செல்ல தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். அதற்கு நாங்கள் உறு துணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.






