என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineering Course"

    • நாளை வரை மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
    • 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 47 ஆயிரத்து 372 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.

    தமிழகத்தில் நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது.

    முதற்கட்டமாக 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு தொடங்கியது. மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நாளை வரை நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து பொதுப்பிரிவில் உள்ள சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளநிலையில், 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 47 ஆயிரத்து 372 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.

    விளையாட்டு பிரிவின் கீழ் 2 ஆயிரத்து 446 மாணவர்களும், ராணுவத்தினர் பிரிவின் கீழ் 473 பேரும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.

    • பொதுப் பிரிவுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடம் வகித்துள்ளார்.
    • பொதுப் பிரிவில் முதல் 10 இடங்களில் 7 மாணவிகளும், 3 மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்வதற்கான தர வரிசை பட்டியல் சென்னை கிண்டியில் உள்ள தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 2374. அதில் பதிவு கட்டணம் செலுத்திய மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 298. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 40,645 அதிகமாகும்.

    200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவர்களின் எண்ணிக்கை 144. அதில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் 139 பேர். பிற வாரியத்தின் கீழ் படித்த மாணவர்கள் எண்ணிக்கை 5 மாணவ மாணவிகள் தங்களது தரவரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். தரவரிசை பட்டியலில் மாணவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தலோ இன்று முதல் ஐந்து நாட்களுக்குள் (ஜூலை 2) தங்கள் அருகாமையில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தினை அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து கொள்ளலாம்.

    பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 641. சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஜூலை 7-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 14-ந் தேதி முதல் ஆகஸ்ட் 19-ந் தேதி வரை நடக்கிறது. துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    பொதுப் பிரிவுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடம் வகித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நாமக்கல் மாணவி கார்த்திகா 2-வது இடமும், அரியலூர் மாணவர் அமலன் ஆண்டோ 3-வது இடமும், தாராபுரம் மாணவர் கிருஷ்ணப்பிரியன் 4-வது இடமும் பிடித்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் ஜி.தீபா, ஜே.தீபிகா 5-வது மற்றும் 6-வது இடங்களையும், திருப்பூர் மாணவர் விஷால் ராம் 7-வது இடத்தையும், திண்டுக்கல் மாணவி பவித்ரா 8-வது இடமும், திருப்பூர் மாணவிகள் சுப ஸ்ரீ மற்றும் கோதை காமாட்சி ஆகியோர் 9-வது மற்றும் 10-வது இடங்களை பெற்றுள்ளனர்.

    இதே போல அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கடலூர் மாணவி தரணி 200க்கு 200 கட் ஆப் பெற்று முதலிடமும் சென்னை மாணவி மைதிலி 2-வது இடமும், கடலூர் மாணவர் முரளிதரன் 3-வது இடமும், திருவண்ணாமலை மாணவர் வெற்றிவேல் 4-வது இடமும், திருவண்ணாமலை மாணவி பச்சையம்மாள் 5-வது இடமும் பெற்றுள்ளனர்.

    கடலூர் மாணவி அக்ஷயா 6-வது இடமும், செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் மாணவர் நித்திஷ் 7-வது இடமும், சேலம் மாணவர் ரோஹித் 8-வது இடமும், நாமக்கல் மாணவி ஹரிணி 9-வது இடமும், திருவண்ணாமலை மாணவர் பிரவீன் 10-வது இடமும் வகித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுப் பிரிவில் முதல் 10 இடங்களில் 7 மாணவிகளும், 3 மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர். பொதுப்பிரிவு கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடைபெறுகிறது. முதல் சுற்று 200 கட் ஆப் மார்க்கில் இருந்து 179 மதிப்பெண் வரை நடக்கிறது.

    அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 47,372 பேர் தகுதி உடையவர்கள். 22 619 பேர் ஆண்களும் 24 752 பெண்களும் ஒரு மூன்றாம் பாலினத்தவரும் இடம் பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் செயல்பட்டு வரும் அழைப்பு மையத்தினை தொலைபேசி 18004250110 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

    தரவரிசை பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை செயலாளர் சங்கர், தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் இன்னசென்ட் திவ்யா, மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
    • கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பி.இ. மற்றும் பி.டெக். என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பபதிவு இன்று தொடங்கியது.

    மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்தனர். விண்ணப்பங்களை நிரப்பி, அசல் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 6-ந்தேதி கடைசி நாள் ஆகும். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12-ந்தேதி ஆகும்.

    அன்றே ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் ஜூன் 13-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை சேவை மையம் வாயிலாக இணையதளம் மூலம் சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    இதையடுத்து ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சேவை மையம் மூலம் மாணவ-மாணவிகள் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    அதன்பிறகு என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. முதலில் அரசு பள்ளிகளில் படித்த சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.

    அதன் பிறகு பொது பிரிவில் சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.

    அதனை தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுக்கல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது. அதன் பிறகு துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    பின்னர் எஸ்.சி.ஏ. காலியிடம் எஸ்.சி. வகுப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

    என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டை விட அதிகம்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள 564 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீதமும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் கல்லூரியாக இருந்தால் அரசு ஒதுக்கீட்டுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் தலா 50 சதவீதம் இடங்கள் ஆகும்.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அதேபோல், என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி, கடந்த மாதம் (மே) 3-ந் தேதி ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தொடங்கினார். இதன் மூலம் அவர்கள் வீட்டில் இருந்த படியே இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அப்படி இணையதள வசதி இல்லாதவர்களுக்கு என்று தமிழகத்தில் 42 உதவி மையங்கள் தொடங்கப்பட்டன. அதிலும் மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் கடந்த மாதம் 30-ந் தேதி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதால், அந்த பகுதியில் இருந்து என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிப்பவர்களுக்காக காலஅவகாசத்தை நீட்டியது.

    அந்தவகையில், நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 31-ந் தேதி வரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்திருந்தன. கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இரவு 12 மணி வரை நேரம் இருப்பதால், ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பார்த்தால், இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

    விண்ணப்பிப்பதற்கான பணிகள் முடிந்துள்ள நிலையில், விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி வருகிற 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு, மருத்துவ கலந்தாய்வு கால அட்டவணைக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
    ×