என் மலர்
நீங்கள் தேடியது "Consultation"
- நடைபாதைகளில் உள்ள செடி, கொடிகளை தூய்மைப்படுத்தினர்.
- நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடைபெற்றது.
சீர்காழி:
விழுதுகள் இயக்கத்தின் சார்பில் சீர்காழி ரெயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விழுதுகள் இயக்கத்தின் தலைவர் ஏ.கே.ஷரவணன் தலைமை வகித்தார். ரெயில் நிலைய அதிகாரி முன்னிலை வகித்தார்.
சீர்காழி எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ரயில் நிலையத்தில் நடைபாதைகளில் இருந்த செடி, கொடிகளை தூய்மைப்படுத்தினர்.
கடும் வெயிலிலையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிவில் விவசாய பயிர்களை அழிக்கும் எலிகளின் எதிரியான பாம்புகளை அடித்து கொல்லாமல் பாம்புகளை பாதுகாப்பான முறையில் பிடித்து கையாளுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாம்பு பாண்டியன், நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர்கள், விழுதுகள் இயக்கத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் விழுதுகள் இயக்கத்தின் காமராஜ் நன்றி கூறினார்.
- 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் அ.தி.ம.மு.க. நிர்வாகிகள் ஈரோட்டில் ஆலோசனை நடத்தினர்.
- ஈரோடு மாவட்ட செயலாளர், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறுகிறார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள், உயர்மட்டசெயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலைய செயலா ளர்கள் கூட்டம் வருகிற 22-ந்தேதி ஈரோட்டில் நடக்கிறது.கூட்டத்துக்கு அவைத்தலைவர் தாஜீதீன் தலைமை தாங்குகிறார். பொருளாளர் பூங்கா பி.கே.மாரி முன்னிலை வகிக்கிறார். துணைப் பொதுச்செயலாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர்
நெல்லை முத்துக்குமார் வரவேற்று பேசுகிறார்.
கழக வளர்ச்சிகப்பணிகள் மற்றும் பொருளாதார ரீதியிலான உயர்சாதி பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, தமிழக கவர்னரின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொ ன்பாண்டியன் பேசுகிறார்.
ஈரோடு மாவட்ட செயலாளர், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
- திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
திருப்பூர் :
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர் மற்றும் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தெரிவித்தாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, பால் வளத்துறை, கூட்டுறவுதுறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நல வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
ஆய்வு கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, சப்- கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- சீனியாரிட்டி தரவரிசை அடிப்படையில் தேர்வு
- போலீசார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற காவல்துறையினரை மாவட்டத்தில் உள்ள வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியமர்த்துவதற்கான வெளிப்படையான பணி மாறுதலுக்கான ஆலோசனைக் கூட்டம் பால்நாங்குப்பம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் 3 ஆண்டுகள் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த 138 போலீஸ் துறையினர் தாங்கள் பணிபுரிய விரும்பும் காவல்நிலையங்களை சீனியாரிட்டி தரவரிசை அடிப்படையிலும், காலி பணியிடங்களின் அடிப்படையிலும் தேர்வு செய்தனர்.
மேலும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், துணை போலீஸ் கண்காணிப்பாளர்கள் திருப்பத்தூர் கணேஷ், வாணியம்பாடி சுரேஷ் பாண்டியன், ஆம்பூர் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், அமைச்சுப் பணியாளர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், உள்ளிட்ட போலீசார் பலர் பங்கேற்றனர்.
- நிலுவை வழக்குகளை விரைவாக முடிக்க கலந்தாய்வு நடந்தது.
- போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கலந்தாய்வு செய்தார். இதில் போலீசார், மருத்துவத்துறையினர், சுகாதார துறையினர், போக்குவரத்து துறையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்பட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை ஆய்வு செய்தார்.
- சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- “சேலம் மாநகரில் கடந்த 2021- ம் ஆண்டில் 24 கொலை சம்பவங்கள் நடந்தது. 2022- ல் 15 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் "சேலம் மாநகரில் கடந்த 2021- ம் ஆண்டில் 24 கொலை சம்பவங்கள் நடந்தது. 2022- ல் 15 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. மாநகரின் அனைத்து பகுதிகளிலும் போலீசாரின் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் குற்றச் செயல்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநகரில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், வழக்குகள் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தி முடிக்க ஏதுவாக இருந்து வருகிறது.
மேலும் கேமிராக்கள் இல்லாத பகுதிகளில் அவற்றை பொருத்த நடவ–டிக்கைகள் எடுக்கப்படும். கஞ்சா, புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை–கள் எடுக்க வேண்டும். பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை சரியாக நடத்தி, அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி, உதவி கமிஷனர்கள் சரவணன், நாகராஜன், வெங்கடேசன், அசோகன், சரவண குமரன், லட்சுமி பிரியா, ஜெயந்தி, இன்ஸ்பெக்டர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் மண்டலம் சார்பாக மத்திய செயற்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
- இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முசிறி, தலைவாசல், ஆத்தூர், ராசிபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய பகுதிகளை சார்ந்த முட்டைக் கோழி பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல்:
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல மற்றும் மண்டலத்துக்குட்பட்ட 7 வட்டாரக்குழு உறுப்பி னர்கள் மற்றும் நாமக்கல் மண்டலம் சார்பாக மத்திய செயற்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முசிறி, தலைவாசல், ஆத்தூர், ராசிபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய பகுதிகளை சார்ந்த முட்டைக் கோழி பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் பேசும் போது, என்.இ.சி.சி. விலையை விட, முட்டை வியாபாரிகள் அளவுக்கு அதிகமான மைனஸ் விலையில் கொள்முல் செய்கின்றனர். இதனால் பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று கவலை தெரிவித்தனர். மைனஸ் விலையை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது அல்லது முழுமையாக நீக்குவது என ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் இன்று 12-ந் தேதி முதல் ஒரு முட்டைக்கு என்இசிசி விலையை விட, முட்டை வியாபாரிகளுக்கு 40 பைசா மட்டுமே மைனஸ் செய்து விற்பனை செய்வது என்று நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இந்த மைனஸ் 40 என்ற அளவிற்கு மிகாமல் விற்பனை செய்யவேண்டும். வியாபாரிகள் எவரேனும் 40 பைசா என்ற மைனசுக்கு மேல், விலை குறைத்து கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள், அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதையொட்டி, நாமக்கல் மண்டலத்திற்குட்பட்ட 7 வட்டார குழுத் தலைவர்க ளின் செல்போன் நம்பர்கள் அறிவிக்கப்பட்டன. என்.இ.சி.சி. நிர்ணயம் செய்த விலையை விட 40 பைசாவிற்கு மேல் மைனஸ் விலை கேட்டால் அந்த வட்டாரக் குழு தலைவர்களை தொடர்புகொண்டு புகார் செய்யலாம். இந்த பிரச்சினையில் பண்ணையாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று என்.இ.சி.சி. மண்டல தலைவர் செல்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- ஆ.ராசா எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கவுரி உள்பட பழங்குடியின சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் வன உரிமை பாதுகாப்புச் சட்டம் குறித்து ஆ.ராசா எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தார். மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, நகரமன்ற தலைவர்கள் வாணீஸ்வரி, சிவகாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பேரூராட்சி தலைவர்கள் வள்ளி, கவுரி உள்பட பழங்குடியின சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.
- முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் நகராட்சி சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, பேரணியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பேரணிக்கு முன்பாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக நடைமுறையில் உள்ள பீங்கான், கிளாஸ் மற்றும் மண் பாத்திரங்களும், பேப்பர் கப், பேப்பர் பிளேட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான அனைத்து பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அதனை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பார்வையிட்டதோடு தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.
பேரணியின் போது பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய துண்டு பிரசுரங்களும், விளம்பரப் பதாகைகளும் ஏந்தி சென்றனர்.
தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை பகுதி மாவட்ட கலெக்டர் துவங்கி வைத்தார்.
முதுகு தண்டுவடம் பாதிக்க ப்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் ஆலோச னைகளும் மருத்து வமனை மருத்துவர்களால் வழங்கப்பட்டது.
- வேளாண்மை விரிவாக்க மையக் கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.
- அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி நடந்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.
வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலை வகித்தார். விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.
அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி, போன்ற திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில், நாமக்கல் வட்டார கால்நடை உதவி மருத்துவர் வெள்ளைசாமி, பட்டு உதவி ஆய்வாளர் சாந்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கங்காதரன், உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்று துறை சார்ந்த மானியத்திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் நன்றி கூறினர்.
- கவர்னர் வருகையை முன்னிட்டு போலீசார்-அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் பொன் விழா மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் 60-வது ஆண்டு தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ராஜபாளையத்திற்கு நாளை (1-ந் தேதி) வருகிறார்.
அவர் காலை 7 மணியளவில் ஸ்ரீங்கேரி சாரதாம்பாள் கோயில் மற்றும் மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
இதையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, வட்டாட்சியர் ராமச்சந்திரன், நகராட்சி ஆணையர் பார்த்த சாரதி, ஆளுநரின் பாது காப்பு ஆய்வாளர் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளயும் பெற்று பயனடைந்தார்கள்.
புதுச்சேரி:
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், 2சனிக்கிழமைகளில் புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில், சிறப்பு மருத்துவ நிபுணர்களின் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில், நரம்பியல் மற்றும் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியிலிருந்து சிறப்பு டாக்டர்கள் குழு காரைக்கால் வருகை தந்து , பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள். காலை 9மணிக்கு தொடங்கிய இந்த சிறப்பு முகாம் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளயும் பெற்று பயனடைந்தார்கள்.






