என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்டுவட அறுவை கிசிச்சை முகாம் நடைபெற்ற காட்சி.
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம்
- காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளயும் பெற்று பயனடைந்தார்கள்.
புதுச்சேரி:
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், 2சனிக்கிழமைகளில் புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில், சிறப்பு மருத்துவ நிபுணர்களின் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில், நரம்பியல் மற்றும் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியிலிருந்து சிறப்பு டாக்டர்கள் குழு காரைக்கால் வருகை தந்து , பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள். காலை 9மணிக்கு தொடங்கிய இந்த சிறப்பு முகாம் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளயும் பெற்று பயனடைந்தார்கள்.
Next Story






