என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலந்தாய்வில் பங்கேற்ற போலீசார்.
138 போலீசாருக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு
- சீனியாரிட்டி தரவரிசை அடிப்படையில் தேர்வு
- போலீசார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற காவல்துறையினரை மாவட்டத்தில் உள்ள வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியமர்த்துவதற்கான வெளிப்படையான பணி மாறுதலுக்கான ஆலோசனைக் கூட்டம் பால்நாங்குப்பம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் 3 ஆண்டுகள் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த 138 போலீஸ் துறையினர் தாங்கள் பணிபுரிய விரும்பும் காவல்நிலையங்களை சீனியாரிட்டி தரவரிசை அடிப்படையிலும், காலி பணியிடங்களின் அடிப்படையிலும் தேர்வு செய்தனர்.
மேலும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், துணை போலீஸ் கண்காணிப்பாளர்கள் திருப்பத்தூர் கணேஷ், வாணியம்பாடி சுரேஷ் பாண்டியன், ஆம்பூர் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், அமைச்சுப் பணியாளர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், உள்ளிட்ட போலீசார் பலர் பங்கேற்றனர்.






