என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineering Counseling"

    • பொதுப் பிரிவுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடம் வகித்துள்ளார்.
    • பொதுப் பிரிவில் முதல் 10 இடங்களில் 7 மாணவிகளும், 3 மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்வதற்கான தர வரிசை பட்டியல் சென்னை கிண்டியில் உள்ள தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 2374. அதில் பதிவு கட்டணம் செலுத்திய மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 298. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 40,645 அதிகமாகும்.

    200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவர்களின் எண்ணிக்கை 144. அதில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் 139 பேர். பிற வாரியத்தின் கீழ் படித்த மாணவர்கள் எண்ணிக்கை 5 மாணவ மாணவிகள் தங்களது தரவரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். தரவரிசை பட்டியலில் மாணவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தலோ இன்று முதல் ஐந்து நாட்களுக்குள் (ஜூலை 2) தங்கள் அருகாமையில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தினை அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து கொள்ளலாம்.

    பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 641. சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஜூலை 7-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 14-ந் தேதி முதல் ஆகஸ்ட் 19-ந் தேதி வரை நடக்கிறது. துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    பொதுப் பிரிவுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடம் வகித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நாமக்கல் மாணவி கார்த்திகா 2-வது இடமும், அரியலூர் மாணவர் அமலன் ஆண்டோ 3-வது இடமும், தாராபுரம் மாணவர் கிருஷ்ணப்பிரியன் 4-வது இடமும் பிடித்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் ஜி.தீபா, ஜே.தீபிகா 5-வது மற்றும் 6-வது இடங்களையும், திருப்பூர் மாணவர் விஷால் ராம் 7-வது இடத்தையும், திண்டுக்கல் மாணவி பவித்ரா 8-வது இடமும், திருப்பூர் மாணவிகள் சுப ஸ்ரீ மற்றும் கோதை காமாட்சி ஆகியோர் 9-வது மற்றும் 10-வது இடங்களை பெற்றுள்ளனர்.

    இதே போல அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கடலூர் மாணவி தரணி 200க்கு 200 கட் ஆப் பெற்று முதலிடமும் சென்னை மாணவி மைதிலி 2-வது இடமும், கடலூர் மாணவர் முரளிதரன் 3-வது இடமும், திருவண்ணாமலை மாணவர் வெற்றிவேல் 4-வது இடமும், திருவண்ணாமலை மாணவி பச்சையம்மாள் 5-வது இடமும் பெற்றுள்ளனர்.

    கடலூர் மாணவி அக்ஷயா 6-வது இடமும், செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் மாணவர் நித்திஷ் 7-வது இடமும், சேலம் மாணவர் ரோஹித் 8-வது இடமும், நாமக்கல் மாணவி ஹரிணி 9-வது இடமும், திருவண்ணாமலை மாணவர் பிரவீன் 10-வது இடமும் வகித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுப் பிரிவில் முதல் 10 இடங்களில் 7 மாணவிகளும், 3 மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர். பொதுப்பிரிவு கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடைபெறுகிறது. முதல் சுற்று 200 கட் ஆப் மார்க்கில் இருந்து 179 மதிப்பெண் வரை நடக்கிறது.

    அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 47,372 பேர் தகுதி உடையவர்கள். 22 619 பேர் ஆண்களும் 24 752 பெண்களும் ஒரு மூன்றாம் பாலினத்தவரும் இடம் பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் செயல்பட்டு வரும் அழைப்பு மையத்தினை தொலைபேசி 18004250110 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

    தரவரிசை பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை செயலாளர் சங்கர், தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் இன்னசென்ட் திவ்யா, மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • ஆன்லைனில் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி கடந்த 20-ம் தேதி முடிவடைந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

    இந்தக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அனைவருக்கும் 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைந்தது.

    இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

    • இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக ஆர்வம் காட்டும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது.

    விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

    மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. நடப்பாண்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், என்ஜினீயரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
    • இந்தே ஆண்டே பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

    தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தகாய்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

    நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்படும் நிலையில், புதிய கலந்தாய்வுக்கான அட்டவணையை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

    அதன்படி, பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்காய்வு 4 கட்டங்களாக அக்டோபர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 10- 12ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு, செப்டம்பர் 25- 27 வரை இரண்டாம் கட்டமாகவும், அக்டோபர் 13- 15ம் தேதி வரை மூன்றாம் கட்டமாகவும், அக்டோபர் 29- 31ம் தேதி வரை 4ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தே ஆண்டே பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.

    செப்டம்பர் மாத இறுதியில் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    • பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை நடைபெறும்.
    • நீட் தேர்வு முடிவுகளால் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 20-ம் தேதி தொடங்கியது.

    விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19-ம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதால் ஜூலை 27-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வந்தது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வை தொடங்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை நடைபெறும். நீட் தேர்வு முடிவுகளால் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மட்டும் இல்லை, மாணவர்களின் நன்மையை கருதியும் பொறியியல் கலந்தாய்வு நீட்டித்திருக்கிறோம்.

    பொறியியல் கல்லூரியாக இருந்தாலும், கலை அறிவியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, கலந்தாய்வு சமூக நீதியின் அடிப்படையில் நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் அச்சத்திற்கு உள்ளாக வேண்டாம். சரியான முறையில் கலந்தாய்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவித்தார் .

    என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்த கால அவகாசம் கோரி அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கில் கால அவகாசத்தை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #EngineeringCounseling #AnnaUniversity #SC
    புதுடெல்லி:

    தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங்கை தொடர்ந்து என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். ஜூலை இறுதிக்குள் என்ஜினீயரிங் கலந்தாய்வு முடிந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்படும்.

    இந்த ஆண்டு நீட் தேர்வு குளறுபடி காரணமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கருணை மதிப்பெண் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மருத்துவ கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக என்ஜினீயரிங் கலந்தாய்வும் தாமதமானது.

    இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தி முடிக்க ஆகஸ்ட் 31-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது என்ஜினீயரிங் கலந்தாய்வை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #EngineeringCounseling #AnnaUniversity #SC

    என்ஜினீயரிங் கலந்தாய்வை தள்ளிவைக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. #TNGovernment #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பின்னர் என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்த அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் நீட் நுழைவுத்தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பு தவறுகளால் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு நடத்துவதற்கு ஆகஸ்டு 31-ந் தேதி வரை காலநீட்டிப்பு கோரி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், தமிழக அரசு இப்போது காலநீட்டிப்பு கோருவதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு தமிழக அரசு வக்கீல் விஜயகுமார், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை நீட் தேர்வு தொடர்பாக மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதித்துள்ளது. மருத்துவ கலந்தாய்வு முடிவடைந்த பிறகு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை நடத்துவது சரியாக இருக்கும். அங்கு இடம் கிடைக்காத மாணவர்கள் இதில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்க வசதியாக இருக்கும் என்று கூறினார்.

    இதற்கு நீதிபதிகள், ஐகோர்ட்டு மதுரை கிளையின் தீர்ப்பின் நகலை தாக்கல் செய்யுமாறு கூறி, இந்த மனுவை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். #TNGovernment #SupremeCourt
    பொறியியல் கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #EngineeringCounseling

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்விதுறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மருத்துவ படிப்பு கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். மருத்துவ கலந்தாய்வு தள்ளிப் போனால் பொறியியல் கவுன்சிலிங்கை தொடங்கி விடுவோம்.

    நிர்மலாதேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கையும், அரசின் விசாரணை அறிக்கையும் ஒன்றாக வெளியிடப்படும்.

    யூ.ஜி.சி. விவகாரத்தில், மாநில அரசுகளின் கருத்துக்களை தெரிவிக்க வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழக அரசின் கருத்தக்கள் அடங்கிய அறிக்கை சமர்பிக்கப்படும்.

    யூ.ஜி.சி.க்கு பதிலாக வேறு அமைப்பு வந்தாலும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #EngineeringCounseling

    முதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்க உள்ளது. முதல் கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு இடங்கள் மற்றும் கல்லூரியை தேர்ந்து எடுக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
    சென்னை:

    தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது.

    இந்த வருடம் ஆன்லைன் மூலம் முதன் முதலாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3-ந்தேதி முதல் கடந்த 2-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் நம்பர் வெளியீடு வழங்கப்பட்டது. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். சான்றிதழ் சரிபார்த்தல் 42 மையங்களில் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற்றது.



    அண்ணாபல்கலைக்கழகத்தில் மட்டும் 17-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சமர்ப்பித்த அனைத்து சான்றுகளும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

    இந்த மாதம் 4-வது வாரத்திற்குள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். மருத்துவ கலந்தாய்வு நடந்த பின்னர் தான் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும். என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு இடங்கள் மற்றும் கல்லூரியை தேர்ந்து எடுக்க வாய்ப்பு அளிக்கப்படும். பின்னர் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கலந்தாய்வு உத்தேசமாக அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.

    தொழில்கல்வி மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு அண்ணாபல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் நடந்தது போல நேரடியாக நடைபெற உள்ளது. #tamilnews
    ×