search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ranking list"

    • என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • என்ஜினீயரிங் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்க உள்ளேன். அதில் பல சாதனைகள் படைப்பது என்னுடைய நோக்கமாக உள்ளது.

    திருச்செந்தூர்:

    என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.நேத்ரா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

    மாணவி பா.நேத்ராவுக்கு சொந்த ஊர் சிறுத்தொண்டநல்லூர் ஆகும். இவரது பெற்றோர் பாலன், வித்யாகாந்தி. மாணவி கடந்த கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்வில் 598 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தற்போது, என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

    இதுகுறித்து மாணவி பா.நேத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய படிப்புக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த பள்ளியின் முதன்மை முதல்வர், முதல்வர், ஆசிரியர்கள், என்னுடைய பெற்றோர்கள் அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்ஜினீயரிங் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்க உள்ளேன். அதில் பல சாதனைகள் படைப்பது என்னுடைய நோக்கமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தர்மபுரி மாவட்டம் ஜடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஹரிணிகா என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளார்.

    இந்த மாணவி பிளஸ்-2 தேர்வில் 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி ஹரிணிகாவின் தந்தை மோகன் விவசாயம் செய்து வருகிறார். தாயார் திலகம். ஹரிணிகாவிற்கு மோனிஷ் என்ற அண்ணன் உள்ளார்.

    இதுதொடர்பாக மாணவி ஹரிணிகா கூறியதாவது:-

    என்ஜினீயரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மாநில அளவில் 2-வது இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. மாநில அளவில் 2-ம் இடம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக நான் நன்றாக படித்தேன். கணினி என்ஜினீயரிங் படிப்பை படித்து சாப்ட்வேர் என்ஜினீயர் ஆகி அந்த துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சி லால்குடி மேலவாளாடியை சேர்ந்த மாணவி ரோஷினி பானு என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளார். இவர் கல்லணைரோடு வேங்கூரில் உள்ள செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். பிளஸ்-2 தேர்வில் இவர் 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருடைய தந்தை ஷானவாஸ். இவர் பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தாய் ரெஹானா பேகம்.

    மாணவி ரோஷினிபானு கூறுகையில், "தரவரிசை பட்டியலில் 3-ம் இடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளியில் ஆசிரியர்கள் என்னை நன்றாக ஊக்குவித்தார்கள். தினந்தோறும் தேர்வு நடத்தினார்கள். தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்து பள்ளி செல்லும் வரை படிப்பேன். பின்னர் பள்ளி விட்டு வீடு திரும்பியதும் இரவு 10 மணி வரை படித்து வந்தேன். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க விரும்புகிறேன்" என்றார்.

    • பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார்1.5 லட்சம் இடங்கள் உள்ளன. அவை ஆண்டு தோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

    அதன்படி நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. இதற்கான இணைய தள விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி முதல் ஜூன் 9-ந்தேதி வரை நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,175 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீட்டான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31,445 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

    அவர்களுக்கான ரேண்டம் எண்கள் கடந்த 6-ந்தேதி ஒதுக்கப்பட்டன.

    அதை தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் இணைய வழியில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது.

    சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31 ஆயிரத்து 445 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் ஆவணங்களின் அடிப்படையில் 28,425 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.

    இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 5,842 அதிகம். இது 25.86 சதவீதம் அதிகம் ஆகும். இது தமிழக முதலமைச்சர் அறிவித்த புதுமைப் பெண் திட்டத்திற்கான வெற்றி ஆகும்.

    புதுமைப் பெண் திட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து பொறியியலில் சேர்ந்த 13,284 பேர் பயன் அடைகின்றனர்.

    நீட் தேர்வு முடிவுகள் வந்து விட்டாலும், மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்காததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு நடத்தியதும், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். அதை பொறுத்து கலந்தாய்வு தேதியை அறிவிப்போம். பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் 102 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இதில் நேத்ரா என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார்.

    இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் என்ற ஊரை சேர்ந்தவர் ஆவார். அவர் திருச்செந்தூரில் உள்ள காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.

    தர்மபுரியை சேர்ந்த ஹரிணிகா என்ற மாணவி 2-வது இடத்தை பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு என்ற மாணவி 3-வது இடத்தை பெற்றுள்ளார். முதல் 3 இடங்களை பெற்றவர்கள் மாணவிகள் ஆவர்.

    அரசுப் பள்ளியில் படித்தவர்களில் சைதாப்பேட்டையை சேர்ந்த மகா லட்சுமி என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். நாகப்பட்டினத்தை சேர்ந்த நிவேதிதா 2-வது இடத்தை பெற்றுள்ளார். கோவையை சேர்ந்த சரவணகுமார் என்ற மாணவர் 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

    மாணவர்கள் விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ இன்று முதல் 5 நாட்களுக்குள் அருகில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்தை அணுகலாம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

    • தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ந்தேதி வரை அவகாசம்.
    • பொறியியல் படிப்பில் சேர 1,87,847 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    * மாணவர்கள், தங்களது தரவரிசை பட்டியலை tneaonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    * பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா என்ற மாணவி முதலிடம்

    * தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ந்தேதி வரை அவகாசம்.

    * பொறியியல் படிப்பில் சேர 1,87,847 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    * அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காட்டின் கீழ் 28,425 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    * மாதம் 1000 ரூபாய் பெறும்திட்டம் மூலம் 13,284 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

    * ஜூலை 2-ந்தேதி தொடங்குவதாக இருந்த பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு இன்னும் தொடங்காததால் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைன் வாயிலாக கடந்த 20-ந்தேதி நிறைவு பெற்றது.
    • கலந்தாய்வுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

    தமிழகத்தில் உள்ள 440-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

    இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைன் வாயிலாக கடந்த 20-ந்தேதி நிறைவு பெற்றது.

    சான்றிதழை சரியாக பதிவேற்றம் செய்து, தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைப்படி தரவரிசை பட்டியல் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்பட உள்ளது.

    • இந்த தொடரில் 25 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
    • ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் முதல் இரு இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

    டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்த விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 7 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். ரிஷப் பண்ட் 9-வது இடத்திலும் ரோகித் சர்மா 10-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

    மேலும் இந்த தொடரில் 25 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் முதல் இரு இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

    • உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பிட்டு தேசிய நிறுவனங்களுக்குரிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • புதுவை மத்திய பல்கலைக்கழகம் கூட இந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய கல்வித்துறை அமைச்சகம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களை உள்ளடக்கிய உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பிட்டு தேசிய நிறுவனங்களுக்குரிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் உள்ள மொத்த நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மட்டுமே சிறந்த முதல் 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. புதுவை மத்திய பல்கலைக்கழகம் கூட இந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. பல்கலைக்கழ கங்களுக்கான தரவரிசை பட்டியலிலும் குறைந்துகொண்டே செல்கிறது. இந்த ஆண்டு 68-ம் இடத்தில் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் திறன் ஆண்டுக்காண்டு குறைந்து வருவதை காட்டுகிறது. புதுவை பொறியியல் கல்லூரி உட்பட்ட எந்த பொறியியல் கல்லூரியும், சட்டக்கல்லூரியும் இந்தியாவில் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

    கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதுவையில் உள்ள 20 கல்லூரிகளில் காஞ்சி மாமுனிவர் மேற்பட்ட படிப்பு மையம் 80-வது இடத்தையும், மாகியில் உள்ள மகாத்மா காந்தி கலைக்கல்லூரி 99 -வது இடத்தையும் பெற்றுள்ளன. புதுவை கல்லூரிகள் ஒன்று கூட முதல் 50 இடத்தில் வரவில்லை.

    புதுவையில் உள்ள எந்த பல் மருத்துவ, மேலாண்மை, மருந்தியல், மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் தரவரிசை பட்டியலில் இடம் பெறவில்லை. இதை எப்படி சரி செய்வது என்ற ஆழ்ந்த பரிசோதனையில் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உயர் கல்வியில் திராவிட மாடலின் மாட்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம்.
    • கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடும் இன்று தரவரிசை வெளியாகியிருப்பது பொருத்தமானது.

    2022ஆம் ஆண்டிற்கான தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் சிறந்த இடங்களைப் பெற்றதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மத்திய கல்வி அமைச்சகத்தின் NIRF தரவரிசைப் பட்டியல் 2022-இல் தத்தமது பிரிவுகளில் தலைசிறந்த இடங்களைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    உயர்கல்வியில் திராவிட மாடலின் மாட்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம், அதுவும் இத்தரவரிசைப் பட்டியலானது நாம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடும் இன்று வெளியாகியிருப்பது சாலப் பொருத்தமானது.

    குறிப்பாக, இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரி என்ற பெரிய பெருமையை நான் பயின்ற மாநிலக் கல்லூரி பெற்றிருப்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இச்சாதனைக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்துக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சர்வதேச கால்பந்து சம்மேளனம் அணிகளின் தரவரிசை பட்டியலில் பெல்ஜியம் அணி முதலிடத்தை பிடித்தது. #FIFA #Belgium
    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெல்ஜியம் அணி முதலிடத்தை பிடித்தது. அந்த அணி 1727 புள்ளிகளுடன் உள்ளது. 2-வது இடத்தில் உலக சாம்பியன் பிரான்சும் (1726), 3-வது இடத்தில் பிரேசிலும் (1676) உள்ளன. இந்த ஆண்டு ரஷியாவில் நடந்த 2-வது கோப்பை போட்டியில் பெல்ஜியம் சிறப்பாக விளையாடியது.

    ஆனாலும் 3-வது இடத்தையே பிடித்தது. அந்த அணி அரை இறுதியில் பிரான்சியடம் தோற்றது. குரோஷியா, இங்கிலாந்து, போர்ச்சுகல், உருகுவே, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10-வது இடத்தில் உள்ளன. #FIFA
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றால் மட்டுமே அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.#TNAssembly #TNMinister #Sengottaiyan
    சென்னை:

    சட்டசபையில் இன்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஆசிரியர்களாக நியமனம் பெறுவதற்கான ஒரு தகுதி தேர்வு மட்டுமே ஆகும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய இயலும். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சுயநிதி பள்ளிகளில் ஆசிரியராக சேர்ந்து பணியாற்றவும் வாய்ப்பு உள்ளது.

    அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது ஆண்டு தோறும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் ஏற்படும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட மதிப்பீட்டை கணக்கிட்டு அந்த காலிப் பணியிடங்களுக்கேற்ப, பணிநாடுநர்களது ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண், தேர்வர்கள் பெற்ற கல்வித் தகுதிக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இனசுழற்சி முறை அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படுகிறது.

    ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் அடுத்த முறை ஆசிரியர் நியமனத் தேர்வில் கலந்து கொண்டு காலிப் பணியிடங்களுக்கு ஏற்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றால் மடடுமே அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #TNMinister #Sengottaiyan
    ×