என் மலர்
நீங்கள் தேடியது "Renuka Singh"
- ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
- இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாகூர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாகூர் காயம் காரணமாக விலகியுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்தப் போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் காஷ்வீ கௌதம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரேணுகா, உள்நாட்டுப் போட்டிகளிலும், மகளிர் ஐபிஎல் தொடரிலும் தனது அபாரமான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேணுகா சிங் இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை பூஜா வஸ்த்ராகர் மற்றும் அறிமுக வீராங்கனை காஷ்வீ கௌதம் ஆகியோர் வழிநடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9-ல் இருந்து 10-வது இடத்துக்கு சரிந்தார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பெண்கள் 20 ஓவர் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
இதன்படி பேட்டர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை. ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, வெஸ்ட் இண்டீசின் மேத்யூ ஹெய்ன்ஸ், இந்தியாவின் மந்தனா, ஆஸ்திரேலியாவின் தாலியா மெக்ராத், தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் முதல் 5 இடங்களில் தொடருகின்றனர்.
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9-ல் இருந்து 10-வது இடத்துக்கு சரிந்தார்.
இதன் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் அனபெல் சுதர்லாண்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் சாதியா இக்பால் 3-வது இடத்திலும் உள்ளனர். இலங்கைக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 8 இடங்கள் எகிறி 6-வது இடத்தை தென்ஆப்பிரிக்காவின் மிலாபாவுடன் பகிர்ந்துள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி 17 இடங்கள் உயர்ந்து 52-வது இடத்தை பெற்றுள்ளார். இலங்கை தொடரில் அறிமுகம் ஆன இந்திய சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா 124-வது இடத்தை பிடித்துள்ளார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 112 ரன்கள் எடுத்தது.
திருவனந்தபுரம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் இரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், தீப்தி சர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 113 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 42 பந்தில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், இந்திய பெண்கள் அணி 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.
- இந்திய அணியின் ஹர்மன்பிரித் கவூர் 5 இடங்கள் பின் தங்கி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ரேணுகா சிங் 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
மகளிருக்கான டி20 பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை வீராங்கனை சமாரி அட்டபட்டு 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் ஹர்மன்பிரித் கவூர் 5 இடங்கள் பின் தங்கி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதேபோல பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அந்த வகையில் ரேணுகா சிங் 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை ராதா யாதவ் 7 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார். 3-வது இடத்தில் தீப்தி சர்மா தொடர்கிறார்.
- பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டானார்
- இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
315 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 26.2 ஓவர்கள் முடிவில் 103 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டாகி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.






