என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேணுகா சிங் தாகூர்"

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 112 ரன்கள் எடுத்தது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் இரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், தீப்தி சர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 113 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 42 பந்தில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், இந்திய பெண்கள் அணி 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.

    • இந்தியா சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட் கைப்பற்றினார்.
    • ரேணுகா சிங் ஐசிசி-யின் ஜூலை மாதத்திற்க்கான சிறந்த வீராங்கனை பட்டியலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் பார்படோஸ் அணியுடன் இந்தியா மோதியது.

    'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்தார். அவர் 46 பந்துகளில் 56 ரன்கள் அடித்தார். ஷபாலி வர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 34 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பார்படோஸ் அணி 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்தியா சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் 3 போட்டியில் இந்தியா 2 வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது பிரிவில் 2-வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்தது.

    ரேணுகா சிங் இன்சுவிங் மூலம் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்த போட்டியில் அவரின் பந்து வீச்சு மிரட்டலாக இருந்தது. அவர் 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் 3 விக்கெட்டுகள் போல்ட் முறையில் எடுக்கப்பட்டது. இதில் 2 போல்ட் இன்சுவிங் மூலம் எடுக்கப்பட்டது. இந்த பந்து வீச்சை பார்க்கும் போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் சுவிங் கிங் புவேனேஸ்வர் குமார் பந்து வீசுவது போன்று இருந்தது.


    அவர் விக்கெட் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவர் ஐசிசி-யின் ஜூலை மாதத்திற்க்கான சிறந்த வீராங்கனை பட்டியலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×