என் மலர்

  நீங்கள் தேடியது "Central Railway Station"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த சில நாட்களாக 4 கவுண்டர்களில் மட்டுமே முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
  • முன்பதிவில்லா டிக்கெட் வினியோக கவுண்டர்களும் ஊழியர்கள் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு விட்டது.

  சென்னை:

  சென்னையில் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களான எழும்பூர், சென்ட்ரலுக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் காலை, இரவு என எப்போதும் இந்த ரெயில் நிலையங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

  இங்கு பயணிகள் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய எழும்பூரில் 8 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டு வந்தது. அதேபோல் சென்ட்ரல் நிலையத்தில் 10 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டன. இதன் மூலம் பயணிகளுக்கு முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வந்தது.

  இந்த நிலையில் கணினி பழுது, ஊழியர்கள் பற்றாக்குறை என பல்வேறு கவுண்ட்டர்கள் மூடப்பட்டது. தானியங்கி டிக்கெட் எந்திரம், செல்போன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மேலும் சில கவுண்டர்கள் மூடப்பட்டது.

  கடந்த சில நாட்களாக 4 கவுண்டர்களில் மட்டுமே முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதே போல முன்பதிவில்லா டிக்கெட் வினியோக கவுண்டர்களும் ஊழியர்கள் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு விட்டது.

  இதனால் டிக்கெட் எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. ரெயிலை தவற விடும் நிலை உருவாகிறது. மேலும் முன்பதிவு டிக்கெட் எடுக்க வரும் பல பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:-

  சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

  ரெயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கெட் எடுக்க கூட்டம் எப்போதும் அலைமோதும். அவசர பயணமாக செல்லும் பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து அதிகஅளவில் பயணம் செய்வார்கள்.

  தற்போது முன்பதிவில்லா டிக்கெட் மைய கவுண்டர்கள் குறைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் பெரும் சிரமப்படுகிறார்கள்.

  டிக்கெட் வாங்க வரிசையில் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட் கவுண்டர்களில் விரைவில் ஊழியர்களை கூடுதலாக உடனடியாக நியமிக்க வேண்டும். அப்போது தான் முன்பதிவு டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டுகள் எளிதில் பெற முடியும்.

  தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் இருந்தாலும் அதில் ஒரே நேரத்தில் டிக்கெட் பெற வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

  செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதியை குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான பயணிகள் கவுண்டர்களில் டிக்கெட் பெறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே ரெயில் டிக்கெட்டை பயணிகள் சிரமம் இல்லாமல் பெற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ரூ.1.36 கோடி பணம் சிக்கியது. ஆந்திராவை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #LSPolls #ElectionFlyingSquad
  சென்னை:

  தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  சென்னையிலும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களுடன் மோட்டார் சைக்கிள்களும் சோதனைக்குட்படுத்தப்படுகிறது. பறக்கும் படை அதிகாரிகள் போலீசாரின் துணையுடன் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

  இதனால் பறக்கும்படை சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக பஸ்களிலும் பணம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஒரு சிலர் சைக்கிள்களிலும் பணத்தை பைகளில் போட்டு தொங்க விட்டுச் செல்கிறார்கள். இதுபோன்று பணத்தை எடுத்துச் செல்லும் நபர்களை பிடிக்கவும் போலீசார் இப்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

  சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் ரோட்டில் இன்று காலை 6.45 மணியளவில் சிட்டி டவர் ஓட்டல் அருகில் சந்தேகத்துக்கிடமாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வழியாக சென்ற போக்குவரத்து போலீஸ் ஏட்டுகள் மதியழகன், பரமசிவம் ஆகிய இருவரும் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

  உடனடியாக பூக்கடை போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது 4 பேரும் உடலில் எதையோ பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

  இதனையடுத்து போலீசார் அவர்களது சட்டையை கழற்றி சோதனை செய்தனர். அப்போது 4 பேரும் தங்களது உடலில் ரூ.1 கோடியே 36 லட்சம் பணத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தினர்.

  பிடிபட்ட 4 பேரும் பாஷா, சீனிவாசலு, ஆஞ்சநேயலு, ஷேக்சலீம் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஆம்னி பஸ் மூலம் சென்னைக்கு இந்த பணத்தை கடத்தி வந்துள்ளனர்.  4 பேரும் பணத்தை தனித்தனியாக பிரித்து தங்களது சட்டைக்குள் மறைத்து எடுத்து வந்துள்ளனர். இந்த பணம் எதற்காக எடுத்து வரப்பட்டது? யாருடைய பணம்? என்பது தெரியவில்லை. முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.1.36 கோடியை போலீசார் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். தேர்தல் செலவுக்காக இந்த பணம் கடத்தி வரப்பட்டதா? என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

  சென்னை திருநீர்மலை பகுதியில் பறக்கும்படை அதிகாரி கவிதா நடத்திய சோதனையில் ரூ.72 ஆயிரம் பணம் பிடிபட்டது. சந்திரமோகன் என்பவரின் காரில் நடத்திய சோதனையில்தான் இந்த பணம் பிடிபட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #LSPolls #ElectionFlyingSquad

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நதிநீர் பிரச்சனையில் விவசாயிகளின் நலனை பாதுகாக்க அனைத்து சட்ட நடவடிக்கையும் எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது என ஆளுநர் தெரிவித்தார். #TNAssembly #AssemblySession #WaterDispute
  சென்னை:

  தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையில் உள்ள சில அம்சங்களை பார்ப்போம்.

  சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிசைப் பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்.

  ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார்.

  புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க புதிய கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

  பாதுகாப்பு தளவாட உற்பத்திக்காக புதிய தொழிற்கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

  அடுத்த தலைமுறைக்கான மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு சலுகைகள் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.

  பழங்குடியினரின் எழுத்தறிவு நிலை குறைவாக உள்ளது; எனவே கூடுதல் பள்ளிகள் அமைப்பதற்காக புதிய திட்டம்.

  தமிழகத்திற்கான ரூ.7669 கோடி வரி வருவாய் இதுவரை வழங்கப்படவில்லை. ஜிஎஸ்டி வரி வருவாயில் மாநில பங்கினை வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது.


  சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு சாதகமாக பரிசீலிக்கும் என நம்புகிறோம்.

  அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

  உச்சநீதிமன்ற உத்தரவினை வெளிப்படையாக மீறுவதாக மத்திய அரசின் செயல் அமைந்துள்ளது. நீர் பகிர்வு உரிமையை பாரபட்சமின்றி பகிர்ந்துகொள்ளும் வகையில் செயல்பட்டால் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.

  நீர்ப்பகிர்வு உரிமையை நிலைநிறுத்த மீண்டும் மீண்டும் சட்டநடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அரசு தள்ளப்படுகிறது.  நதிநீர்ப் பிரச்சனையில் விவசாயிகளின் நலனை பாதுகாக்க அனைத்து சட்ட நடவடிக்கையும் எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

  இவ்வாறு கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNAssembly #AssemblySession #WaterDispute
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் குடிபோதையில் போலீசை தாக்கியதாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சென்னை:

  சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள போலீஸ் பூத் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

  நேற்று இரவு செந்தில்குமார் என்ற போலீஸ்காரர் பணியில் இருந்தார். இரவு 11 மணி அளவில் போலீஸ் பூத் அருகில் 3 பேர் குடிபோதையில் நின்று பேசி கொண்டிருந்தனர்.

  அவர்களை அங்கிருந்து போகும்படி செந்தில்குமார் கூறியுள்ளார்.ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் மூவரையும் போலீஸ்காரர் விரட்டி உள்ளார்.

  நள்ளிரவு 1 மணி அளவில் செந்தில்குமார் தனியாக பணியில் இருந்த போது 3 பேரும் மோட்டார் சைக்கிளில் மீண்டும் அங்கு வந்தனர். போலீஸ்காரரை இழுத்து கீழே தள்ளி தாக்கினர்.பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

  கை, கால், தலையில் காயம் அடைந்த போலீஸ்காரர் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி பூக்கடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

  எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சென்ட்ரல் நிலையம் பகுதியில் போலீஸ்காரரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசை தாக்கிய 3 பேர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

  அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த பதிவுகளை எடுத்து ஆய்வு செய்தனர். போலீசை தாக்கிய 3 பேரின் உருவமும் அதில் இடம்பெற்று இருந்தது. அவர்களை இன்று காலையில் போலீசார் கைது செய்தனர். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கேரள காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  சென்னை:

  சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் 16-வது பிளாட்பாரத்தில் நேற்று இரவு வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் மயங்கிய நிலையில் கிடந்தனர். போலீசார் அவர்களை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காதல் ஜோடியான இருவரும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரிய வந்தது.

  வாலிபரின் பெயர் அபிஜித். இளம்பெண்ணின் பெயர் ரூஷ்னா. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கூட்டுமடத்தைச் சேர்ந்த அபிஜித்தும், நெல்லிகுழி பகுதியைச் சேர்ந்த ரூஷ்னாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர்களது காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் சென்னை வந்து தற்கொலைக்கு முயற்சித்தது தெரிய வந்தது. இதுபற்றி அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CentralRailwayStation
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மத்திய போலீஸ் படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். #ChennaiCentral
  சென்னை:

  தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மாம்பலம் ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

  ஒவ்வொரு நடைமேடையிலும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ளதால் இதை பயன்படுத்தி திருடர்களும் உள்ளே புகுந்து கைவரிசை காட்டத் தொடங்கி விட்டனர்.

  இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  ரெயில் நிலையங்களுக்கு வரும் மக்கள் தொகையை கணக்கெடுக்கையில் அங்கு பாதுகாப்புக்கு நிற்கும் போலீசாரின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.

  இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே போலீசாருடன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

  இவர்களுக்கு உதவுவதற்காக மத்திய போலீஸ் படையினரும் கூடுதலாக பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ரெயில் நிலையங்களின் நுழைவாயில், பிளாட்பாரங்கள் ஆகிய இடங்களில் இவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை கூட்டம் இருக்கும்வரை மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ChennaiCentral
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 40 கிலோ கஞ்சா சிக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ganja

  சென்னை:

  சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கேரளாவிலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 1.10 மணிக்கு வந்து சேர்ந்தது.

  இந்த ரெயிலின் பொதுப் பிரிவு பெட்டியில் கேட்ப்பாரற்று மூன்று பேக்குகள் கிடந்தன. இந்த ரெயிலில் இரவுப் பணியில் இருந்த தலைமை காவலர் சோதனை மேற் கொண்டபோது மூன்று பைகள் சந்தேகப்படும்படி இருப்பதை பார்த்து அதை கைப்பற்றினார்.

  அந்த பைகளில் சோதனை நடத்தியதில் அதில் சிறு சிறு பொட்டலமாக கஞ்சா செடிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  மொத்தம் அதில் 40 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சா மூட்டைகளை சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசார் உடனடியாக அங்குள்ள ரெயில்வே பாதுகாப்புபடை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  ஆலப்புழா ரெயிலில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து கடத்தப்பட்டது? யார் கடத்தினார்கள் என்பது தெரியவில்லை. போலீசை பார்த்ததும் கடத்தல்காரர்கள் பைகளை போட்டு விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று தெரிகிறது. #ganja

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #CentralRailwayStation #MGR #EdappadiPalaniswami
  சென்னை:

  சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்றும், இதற்காக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்றும் சமீபத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேபோல் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதி உள்ளார்.  அதில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையம் என  பெயர் சூட்டப்பட வேண்டும்  என்றும், இதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

  இதேபோல் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். #CentralRailwayStation #MGR #EdappadiPalaniswami

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #RajivCaseConvicts #TNCabinet #ChennaiCentral #MGR #Jayakumar
  சென்னை:

  தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடியது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டது.

  இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு இன்றே பரிந்துரை கடிதம் அனுப்பப்படும்.
  தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்வார்.

  மேலும், சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டவும், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும்  மத்திய அரசுக்கு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். #RajivCaseConvicts #TNCabinet #ChennaiCentral #MGR #Jayakumar
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்ததில் கத்தியுடன் திரிந்த 8 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சென்னை:

  சென்னையில் இன்று கலைக்கல்லூரிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  மாணவர்கள் செல்லும் பஸ் வழித்தடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கத்திகள் சிக்கியது.

  இது தொடர்பாக 8 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் போலீஸ்காரரின் தலையில் கத்தியால் வெட்டிய கொள்ளையனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 செல்போனை பறிமுதல் செய்தனர்.
  சென்னை:

  சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் பயணிகளிடம் செல்போன்களை பறித்துக் கொண்டு 4 இளைஞர்கள் தப்பி ஓடினர்.

  அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் காரர்கள் யோகேஸ்குமார், ரத்தன்லால் இருவரும் கொள்ளையர்களை விரட்டினர்.

  ஆனால் 3 கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஒருவன் மட்டும் போலீசில் சிக்கினான். போலீசார் மடக்கி பிடித்தும் பிடியில் இருந்து தப்பிச்செல்ல அவன் முயற்சித்தான். இதனால் போலீஸ்காரர் யோகேஷ் குமாருக்கும் கொள்ளையனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

  இதில் தான் மறைத்து வைத்திருந்த பெரிய பட்டா கத்தியால் கொள்ளையன் திடீரென தாக்குதலில் ஈடுபட்டான். போலீஸ்காரர் யோகேஷ் குமாரின் தலையில் வெட்டு விழுந்தது.

  ரத்தம் கொட்டியது. அதற்குள் மற்ற போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு யோகேஷ் குமாருடன் சேர்ந்து கொள்ளையன் தப்பி செல்ல முடியாத வகையில் பிடித்து கைது செய்தனர்.

  காயம் அடைந்த யோகேஷ் குமார் சென்னை ராஜிவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட கொள்ளையன் பெயர் விஜய் (21).

  திருவல்லிக்கேணி விக்டோரியா ஆஸ்பத்திரி அருகில் வசித்து வந்த இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவனிடமிருந்த 4 செல்போன்களும் கைப்பற்றப்பட்டன. பெரிய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தேடிவருகிறார்கள்.#tamilnews
  ×