என் மலர்
நீங்கள் தேடியது "Platform ticket"
- தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட 8 ரெயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் உயர்த்தப்பட்டுள்ளது.
- பிளாட்பார டிக்கெட் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னை:
ரெயில்களில் பயணம் செய்பவர்களை வழியனுப்புவதற்காகவும், வரும் உறவினர்களை அழைத்துச் செல்வதற்காகவும் பலர் ரெயில் நிலையங்களுக்கு வருகை தருவார்கள். குறிப்பாக, பண்டிகை காலங்களில் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். இவ்வாறு வரும் அனைவரும் பிளாட்பார டிக்கெட் கட்டாயம் வாங்க வேண்டும். பிளாட்பார டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது பண்டிகை சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்ட்ரல், எக்மோர் உள்ளிட்ட 8 ரெயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட்டுகளை தெற்கு ரெயில்வே இரு மடங்காக உயர்த்தி உள்ளது.
பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் வரும் ஜனவரி 31-ம் தேதி வரை பிளாட்பார டிக்கெட் கட்டணம் 20 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.