search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படாது: பறக்கும் ரெயில் சேவை ரத்து
    X

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படாது: பறக்கும் ரெயில் சேவை ரத்து

    • இன்று பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வருகைதர உள்ளார்.
    • விமான நிலையத்துக்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும்.

    சென்னை

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையின் தொடக்க விழாவையொட்டி, 8-ந்தேதி (இன்று) பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வருகைதர உள்ளார்.

    எனவே, புறநகர் ரெயில் பயணிகள் வாகனங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மூர் மார்க்கெட் வளாகத்துக்கு அருகில் உள்ள அல்லிகுளம் சாலை வழியாக வந்து செல்ல வேண்டும்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள், நடைமேடை எண்.4 முதல் 6 வரை உள்ள பழைய கான்கோர்ஸ் பகுதி வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    மேலும், இன்று பிளாட்பாரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    * பிரதமர் நரேந்திர மோடி புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கும்போது, குறிப்பிட்ட நேரத்துக்கு விமான நிலையத்துக்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும்.

    * பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கிவைப்பது மற்றும் மெரினா காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டுவிழாவில் கலந்துகொள்ளும் நேரங்களில் பறக்கும் ரெயில் சேவைகள் நிறுத்தப்படும்.

    Next Story
    ×