search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தரவரிசை பட்டியலில் புதுவை கல்லூரிகள் -  முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்

    தரவரிசை பட்டியலில் புதுவை கல்லூரிகள் - முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்

    • உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பிட்டு தேசிய நிறுவனங்களுக்குரிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • புதுவை மத்திய பல்கலைக்கழகம் கூட இந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய கல்வித்துறை அமைச்சகம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களை உள்ளடக்கிய உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பிட்டு தேசிய நிறுவனங்களுக்குரிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் உள்ள மொத்த நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மட்டுமே சிறந்த முதல் 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. புதுவை மத்திய பல்கலைக்கழகம் கூட இந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. பல்கலைக்கழ கங்களுக்கான தரவரிசை பட்டியலிலும் குறைந்துகொண்டே செல்கிறது. இந்த ஆண்டு 68-ம் இடத்தில் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் திறன் ஆண்டுக்காண்டு குறைந்து வருவதை காட்டுகிறது. புதுவை பொறியியல் கல்லூரி உட்பட்ட எந்த பொறியியல் கல்லூரியும், சட்டக்கல்லூரியும் இந்தியாவில் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

    கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதுவையில் உள்ள 20 கல்லூரிகளில் காஞ்சி மாமுனிவர் மேற்பட்ட படிப்பு மையம் 80-வது இடத்தையும், மாகியில் உள்ள மகாத்மா காந்தி கலைக்கல்லூரி 99 -வது இடத்தையும் பெற்றுள்ளன. புதுவை கல்லூரிகள் ஒன்று கூட முதல் 50 இடத்தில் வரவில்லை.

    புதுவையில் உள்ள எந்த பல் மருத்துவ, மேலாண்மை, மருந்தியல், மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் தரவரிசை பட்டியலில் இடம் பெறவில்லை. இதை எப்படி சரி செய்வது என்ற ஆழ்ந்த பரிசோதனையில் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×