search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செப்டம்பர் 10ம் தேதி முதல் பி.இ பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்- அமைச்சர் பொன்முடி
    X

    செப்டம்பர் 10ம் தேதி முதல் பி.இ பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்- அமைச்சர் பொன்முடி

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
    • இந்தே ஆண்டே பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

    தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தகாய்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

    நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்படும் நிலையில், புதிய கலந்தாய்வுக்கான அட்டவணையை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

    அதன்படி, பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்காய்வு 4 கட்டங்களாக அக்டோபர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 10- 12ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு, செப்டம்பர் 25- 27 வரை இரண்டாம் கட்டமாகவும், அக்டோபர் 13- 15ம் தேதி வரை மூன்றாம் கட்டமாகவும், அக்டோபர் 29- 31ம் தேதி வரை 4ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தே ஆண்டே பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.

    செப்டம்பர் மாத இறுதியில் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×