என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர் சேர்க்கை"
- இன்றைய தமிழ்நாடு.... கல்வியில் சிறந்த தமிழ்நாடு அல்ல.... மாறாக கல்வியில் சீரழித்த தமிழ்நாடு.
- அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் அந்த பயன் கிடைக்க வேண்டும்;
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான தமிழக அரசு விடுத்த அறிவிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. தனியார் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்தத் திட்டத்தின்படி சேர்க்கப்பட வேண்டிய இடங்களில் பாதியளவுக்கும் குறைவாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது அரசின் அலட்சியம் மற்றும் தொலைநோக்குப் பார்வையற்ற தன்மைக்காக மாணவர்களுக்கு கிடைத்த தண்டனை ஆகும்.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளை சேர்ப்பதற்கான அறிவிக்கை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மே மாதம் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இந்த மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்த தமிழக அரசு, கடந்த இரண்டாம் தேதி தான் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை வெளியிட்டது. இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களும், ஏற்கனவே கட்டணப் பிரிவில் சேர்ந்த மாணவர்களும் இதன்படி விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.
ஆனால்,இதுவரை பள்ளிகளில் சேராத எந்த மாணவரும் புதிதாக விண்ணப்பித்து தனியார் பள்ளிகளில் சேர முடியாது. மாறாக, ஏற்கனவே சேர்ந்த மாணவர்களில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றவர்கள் இருந்தால், அவர்கள் செலுத்தியக் கல்விக் கட்டணம் திருப்பித் தரப்படும்; அவர்களின் எண்ணிக்கை 25%க்கும் கூடுதலாக இருந்தால், முதல் 25 விழுக்காட்டினருக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று அறிவித்தது தான் இப்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு காரணம் ஆகும்.
தனியார் பள்ளிகளில் நர்சரி பள்ளிகள் என்ற ஒரு பிரிவும், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என்று இன்னொரு பிரிவும் உள்ளன. நர்சரி பள்ளிகள் சற்று சாதாரணமானவையாகவும், ஏழைக் குழந்தைகள் அணுகும் வகையிலும் இருக்கக்கூடும். அதனால் அந்த பள்ளிகளில் மாணவர்கள் சற்று அதிக அளவில் சேர்ந்துள்ளனர். மாறாக உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டணம் அதிகம், மாணவர் சேர்க்கை விதிகள் கடுமையானவை என்பதால் குறைந்த எண்ணிக்கையில் தான் மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். நர்சரி பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி உள்ள 45,721 இடங்களுக்கு 65,306 விண்ணப்பங்கள் வந்திருப்பதில் இருந்தும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 34,666 இடங்களுக்கு வெறும் 16,006 பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதிலும் இருந்து இதை உறுதி செய்து கொள்ளலாம்.
மாணவர் சேர்க்கை அறிவிக்கையை கடந்த 2-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்த போதே, இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அவ்வாறு செய்திருந்தால் அனைத்து மாணவர்களும் அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ந்திருப்பார்கள். அதனால் சில பள்ளிகளில் உபரி இடங்களும், சில பள்ளிகளில் பற்றாக்குறை இடங்களும் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. இது அரசின் தவறான அணுகுமுறையால் ஏற்பட்ட குழப்பம் ஆகும்.
இப்போது நர்சரி பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட 20 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கான கட்டணத்தை அரசால் செலுத்த முடியாது. அதேநேரத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 18,600 இடங்களில் சேர மாணவர்கள் இல்லை. அதனால் அந்த இடங்களுக்குரிய பணம் தமிழக அரசிடம் உபரியாக இருக்கும். எனினும், அதை கல்விப் பணிகளுக்கு பயன்படுத்த முடியாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இதற்குத் தான் திமுக அரசு ஆசைப்பட்டதா? திமுக அரசு அதன் தவறான கொள்கைகளால் தான் தமிழகத்தில் பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி ஆகிய இரண்டையும் சீரழித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தமிழ்நாடு.... கல்வியில் சிறந்த தமிழ்நாடு அல்ல.... மாறாக கல்வியில் சீரழித்த தமிழ்நாடு.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் அந்த பயன் கிடைக்க வேண்டும்; அதே நேரத்தில் இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்படாமல் வீணாகி விடக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டு கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- அனைவரும் வருக! கல்வியின் வழியே அறிவுலகை ஆள்க!
தமிழ்நாடு அரசுத் தொடக்கப்பள்ளிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை 3.94 லட்சமாக அதிகரித்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் பலனாக நேற்று வரையிலும் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் வருக! கல்வியின் வழியே அறிவுலகை ஆள்க!" என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
- சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை:
மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக கொண்டு நமது இளைய சமுதாயம் உலகளவில் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உயர்கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதால் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முத்தான திட்டங்களை வழங்கியதுடன் திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக திறன் மேம்பாட்டு துறையின் மூலம் வழங்கி வருகிறார்.
இதனால் கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனை அறிந்திருந்த நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட ஆணையிட்டு, தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் உயர்கல்வி பயில பெருமளவில் மாண வர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அதேபோல் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15 சதவீதம் இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, இவ்வாண்டு மேற்படி கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாளை வரை மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
- 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 47 ஆயிரத்து 372 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது.
முதற்கட்டமாக 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு தொடங்கியது. மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நாளை வரை நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து பொதுப்பிரிவில் உள்ள சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளநிலையில், 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 47 ஆயிரத்து 372 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.
விளையாட்டு பிரிவின் கீழ் 2 ஆயிரத்து 446 மாணவர்களும், ராணுவத்தினர் பிரிவின் கீழ் 473 பேரும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.
- சென்னையில் 17,985, குறைந்தபட்சமாக நீலகிரியில் 1,327 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
- ஆங்கில வழிக் கல்வியில் சுமார் 52 ஆயிரம் பேரும் இணைந்துள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விவரங்களை அரசு தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை (3,12,881) கடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 17,985, குறைந்தபட்சமாக நீலகிரியில் 1,327 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கேஜி வகுப்புகளில் சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரும் ஆங்கில வழிக் கல்வியில் சுமார் 52 ஆயிரம் பேரும் இணைந்துள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை குறைந்த அளவில் சேர்க்கை நடைபெற்றுள்ள மாவட்டங்களில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
- மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் சேர்ந்துள்ளனர்.
- ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் 2025- 2026-ஆம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.
சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.
தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப்பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்.
இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
- 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார்.
- அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.
புதுடெல்லி:
மக்களவையில் நேற்று பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்த கேள்விகளுக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி துர்காதாஸ் உய்கி பதிலளித்தார். அப்போது தொடக்கப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை விகிதம் கடந்த 2023-24-ம் கல்வி ஆண்டில் குறைந்திருப்பதாக கூறினார்.
குறிப்பாக 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார். அதேநேரம் ஒப்பீட்டளவில் அனைத்து சமூக மாணவர்களும் தொடக்கப்பள்ளிகளில் சேரும் விகிதம் 100.13 சதவீதத்தில் (2021-22) இருந்து 91.7 (2023-24) ஆக குறைந்திருக்கிறது.
உயர்நிலைப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர் சேர்க்கை 78.1 சதவீதத்தில் இருந்து 76.9 ஆகவும், அனைத்து பிரிவினரின் விகிதம் 79.56-ல் இருந்து 77.4 ஆக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மேல்நிலைப்பள்ளிகளில் பழங்குடியினர் மாணவர் சேர்க்கை விகிதம் 52-ல் இருந்து 48.7 ஆகவும், அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.
முன்னதாக பள்ளிகளில் சமீபத்திய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி மக்களவையில் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக மோடி அரசை குறை கூறியிருந்த அவர், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.
- அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் கடந்த 1-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.
இதில் பெரும்பாலும் 1-ம் வகுப்புக்கு தான் மாணவர் சேர்க்கை நடக்கிறது. கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரையிலான 20 நாட்களில் வந்த 14 வேலை நாட்களில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 268 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5 லட்சம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வழங்கியுள்ளது.
- கொரோனாவுக்கு பிறகு பல குடும்பங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர்.
- மாநிலம் முழுவதும் உள்ள 58,801 பள்ளிகளில் 5,816 பள்ளிகளில் மட்டுமே கணினிகள் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 லட்சம் பேர் கூடுதலாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்ததற்கு காரணம் அதில் குறைந்த கல்வி கட்டணம் மட்டுமின்றி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் முறை படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதும் முக்கிய காரணம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனாவுக்கு பிறகு பல குடும்பங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர். அதனால் பல பேர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்றினார்கள்.
இப்போது நடுத்தர குடும்பத்தினரும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் உள்ள 58,801 பள்ளிகளில் 5,816 பள்ளிகளில் மட்டுமே கணினிகள் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
மாநில அளவில் 37,636 அரசுப் பள்ளிகளில் 81 சதவீதம் கணினிகளை கொண்டிருந்தாலும் 79 சதவீத பள்ளிகளில்தான் அவை இயங்கும் நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
- அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
இந்தியா முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வு 2023 ஜனவரி 8ந் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைனில் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி நவம்பா் 30ந் தேதி ஆகும். வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் மேலும் முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை 13-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பயிற்சியின்போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்தது.
மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலை யத்தில் 2022-23ம் ஆண்டிற்கான பயிற்சி மாணவர்கள் நேரடி சேர்க்கை வருகிற 13-ந் தேதி வரை நீடிக்கப்பட்டு 2-ம் கட்டமாக நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.
மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலை யத்தில் உள்ள தொழிற் பிரிவுகளான கம்மியர் மோட்டர் வாகனம், நில அளவையாளர், மின்சாரப் பணியாளர், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய தொழிற் பிரிவுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் சேரலாம்.
மாணவர்கள் 13-ந்தேதி வரை மானாமதுரை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் வளாகம், பாப்பாமடையில் நேரில் வருகை தந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு விண்ணப்பிக்க வரும்போது தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், அசல் சாதிச் சான்றிதழ், அசல் மாற்றுச்சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பயிற்சியின்போது பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், உதவித்தொகை மாதம் ரூ.750 ஆகியவை வழங்கப்படும்.
பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்ததும் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
மேலும் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு 9865554672 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கோவை,
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் நடப்பாண்டில் இளங்கலையில் காலியாக உள்ள 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை வருகிற 20-ந் தேதி நடக்கிறது.
இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:-
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில், 18 உறுப்பு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 567 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 4 ஆயிரத்து 413 இடங்களும் உள்ளன.இதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 20-ந் தேதி வரை பெறப்பட்டது. மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்தது.
இதில், பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் 1,400 இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை உடனடிமாணவர் சேர்க்கையின் (ஸ்பாட் அட்மிஷன்) மூலம் வரும் 20-ந் தேதி நிரப்ப பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உடனடி கலந்தாய்வில், பொதுகலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று அதனை தவறவிட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் மற்றும் புதிதாக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்கள் பங்கேற்கலாம். மாணவர்களின் தரவரிசையின் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
மேலும், மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக் கீடு, கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், காலியிடங் களுக்கான அட்டவணை ஆகியவை பல்கலைக்கழகத்தின் www.tnau.ucanapply. com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் காலதாமதம் இருக்காது. ஜூலை 15-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் வகுப்புகள் திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






