என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு பள்ளிகள்"

    • கல்விக்கு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு 22-ஆம் இடத்தில் உள்ளது.
    • பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வௌயிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா?

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு நாளை மறுநாள் நவம்பர் 3-ஆம் தேதிக்குள் ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் கட்டாயப்படுத்தப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கவலையளிக்கின்றன. அரசின் தோல்விக்காக புனிதப்பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது.

    ஒரு மாநிலத்தில் கல்வித்துறை செழிக்க வேண்டும் என்றால் அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் கல்வித்துறைக்கு ஆண்டுக்கு ரூ.2.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் 1.31%, அதாவது ரூ.46,767 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு 22-ஆம் இடத்தில் உள்ளது.

    இந்த நிதியைக் கொண்டு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த முடியாது என்பது உண்மை தான். இத்தகைய சூழலில் அதற்குத் தேவையான நிதியை கவுரவமான, கண்ணியமான வழிகளில் திரட்ட வகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளிடம் தத்துக் கொடுப்பதும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை நன்கொடைக்காக கையேந்த வைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

    ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை கையேந்த வைக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். அரசு பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னையில் 17,985, குறைந்தபட்சமாக நீலகிரியில் 1,327 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
    • ஆங்கில வழிக் கல்வியில் சுமார் 52 ஆயிரம் பேரும் இணைந்துள்ளனர்.

    தமிழக அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விவரங்களை அரசு தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை (3,12,881) கடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 17,985, குறைந்தபட்சமாக நீலகிரியில் 1,327 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

    கேஜி வகுப்புகளில் சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரும் ஆங்கில வழிக் கல்வியில் சுமார் 52 ஆயிரம் பேரும் இணைந்துள்ளனர்.

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை குறைந்த அளவில் சேர்க்கை நடைபெற்றுள்ள மாவட்டங்களில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • கடந்த ஏப்ரல் 25ம் தேதி (மறுநாள்) முதல் கோடை விடுமுறை தொடங்கியது.
    • ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் திட்டவட்டமா தெரிவித்தார்.

    தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு ஏப்ரல் 24ம் தேதி முடிவடைந்த நிலையில் 25ம் தேதி (மறுநாள்) முதல் கோடை விடுமுறை தொடங்கியது.

    இதனால், விடுமுறை நாட்களை இனிதே செலவிட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

    இதனால், தமிழகத்தில் உள்ள பல முக்கிய சுற்றுலா தலங்கள் பொது மக்களின் கூட்டத்தால் அலைமோதியது.

    இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலும் அதிகமாக இருந்தது.

    இதனால், பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு," பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்" என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    மேலும் அவர் "அரசு- அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நாளை அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் உள்ளிட்ட பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    இதை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளியில் வாழை மரம், தோரணம் என மாணவர்களை கவரும் வகையிலும், அவர்களை வரவேற்கவும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
    • மாணவர்களுக்கு கற்கும் திறன் இல்லை என்றாலும் பட்டம் வழங்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 'எண்ணி துணிக' நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார்.

    பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தரம் குறைந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    கஞ்சா மட்டுமின்றி, ஹெராயின், பெத்தபெட்டமைன் பயன்பாடு அரசுப் பள்ளிகளில் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    இதனால், தமிழகத்தில் மாணவர்களின் கல்வி கற்கும் திறனும் குறைந்து விட்டதாகவும், கற்கும் திறன் இல்லை என்றாலும் பட்டம் வழங்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

    அரசு பள்ளிகளன் தரம் குறைந்து 70 சதவீத மாணவர்களால் எண்களையும், 40 சதவீத மாணவர்களால் எழுத்துகளையும் படிக்க முடியவில்லை" என்றார்.

    • திமுக, நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
    • தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி.

    தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை அன்பில் மகேஷ் வரவேற்றிருப்பதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும், 500 அரசு பள்ளிகளை மேம்பாடுத்த தமிழக அரசிடம் நிதியில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நேற்றைய தினம் நடைபெற்ற, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் வரவேற்றிருக்கிறார். 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

    தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி. இது தவிர, ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனது தேர்தல் வாக்குறுதிகளில், சிதிலமடைந்த 10,000 அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் புதிதாகக் கட்டிக் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    சமீபத்தில், மாவட்டக் கல்வி அலுவலகங்களின் இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.5 கோடியைக் கூட கட்டாமல், இணைப்பு துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்றது பள்ளிக் கல்வித் துறை. கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? நாட்டின் நாளைய தூண்களான மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு ?

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு பள்ளியில் வட மாநிலத்தவர்கள் குழந்தைகள் தமிழ் மொழியை கற்க தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.
    • அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வலியுறுத்தல்.

    தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

    வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும், அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியை படிக்க வைப்பதாகவும் மாணவர்கள் விரும்பி படித்து நன்கு புலமை பெற்றுள்ளதாகவும் வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்குமாறும் அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவி தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் பயந்து தயங்குகின்றனர்.
    • அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய உங்கள் இரும்புக்கரம் எங்கே முதல்வரே?

    பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகி வருவது ஏன் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் மு.க.ஸ்டாலின் அவர்களே..!

    புதுக்கோட்டை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அப்பள்ளிகளின் ஆசிரியர்களே அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகியுள்ள செய்திகள், தமிழகத்தின் கல்வித்துறை தரம்தாழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தான் நமக்கு உணர்த்துகிறது.

    "பிச்சைப் புகினும் கற்கை நன்றே" என்று கல்வியின் அவசியத்தை உலகிற்கு எடுத்துக் கூறிய நமது தமிழகத்தில், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்களால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் பயந்து தயங்குகின்றனர் என்பது வேதனைக்குரியது.

    பள்ளி முதல் கல்லூரி வரை தொடரும் இந்த பாலியல் வன்கொடுமைகளால் பெண் பிள்ளைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லையா? அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய உங்கள் இரும்புக்கரம் எங்கே முதல்வரே?

    எனவே, "எந்தக் கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சி" என்று இனியும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாமல், அரசுக் கல்வி நிலையங்களில் தலைவிரித்தாடும் பாலியல் குற்றங்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

    தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    சமீபத்தில், கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள், தொல்லை இருந்தால் தெரிவிக்க வேண்டிய புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பாலியல் தொடர்பாக புகார்கள் பள்ளி மாணவ, மாணவிகள் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    தயக்கமின்றி புகார் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல், தேர்வு, உயர்கல்வி வழிகாட்டுதலுக்கும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×