என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆளுநர் ஆர்என் ரவி"
- மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- விக்னேஷ் மீத 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்திய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
டாக்டர். பாலாஜி ஜெகநாதன் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மருத்துவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை, குறிப்பாக மருத்துவமனைகளில் உறுதிப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம். மருத்துவர் பாலாஜி விரைவாக உடல்நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
- மாணவர்களுக்கு கற்கும் திறன் இல்லை என்றாலும் பட்டம் வழங்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 'எண்ணி துணிக' நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார்.
பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தரம் குறைந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கஞ்சா மட்டுமின்றி, ஹெராயின், பெத்தபெட்டமைன் பயன்பாடு அரசுப் பள்ளிகளில் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால், தமிழகத்தில் மாணவர்களின் கல்வி கற்கும் திறனும் குறைந்து விட்டதாகவும், கற்கும் திறன் இல்லை என்றாலும் பட்டம் வழங்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு பள்ளிகளன் தரம் குறைந்து 70 சதவீத மாணவர்களால் எண்களையும், 40 சதவீத மாணவர்களால் எழுத்துகளையும் படிக்க முடியவில்லை" என்றார்.
- தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலாளராக நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.
- தலைமைச் செயலாளர் உடன், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் உடன் இருந்தார்.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
இதன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்துள்ளார். தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, தலைமைச் செயலாளர் உடன், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் உடன் சென்றுள்ளார்.
- விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை.
- இதே வளாகத்தில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கியிருந்தார்.
விருதுநகரில் சிமெண்ட் ஆலையின் துணை மேலாளர்கள் வீடுகளில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிமெண்ட் ஆலை வளாக குடியிருப்பு பகுதியில் துணை பொது மேலாளர்கள் பால முருகன், ராமச்சந்திரன் ஆகிய இருவரின் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இருவரும் விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
இதே வளாகத்தில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- புதன்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
3 நாட்கள் பயணமாக டெல்லி சென்று உள்ள அவர் வருகிற செவ்வாய்க்கிழமை சென்னை திரும்புவார் என்று ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் அவரது பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை வந்த பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
- திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தெரிவித்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
நீதிமன்ற தீர்ப்பின் நகல் வந்தவுடன் திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தெரிவித்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து, அமைச்சரவையில் மீண்டும் பொன்முடியை சேர்க்க பரிந்துரைத்து ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், திமுக எம்எல்ஏ பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பொன்முடி மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
- அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக வெளியீடு.
- தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பரேவையில் பேசிய வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
- காலியிடங்களை நிரப்ப ஒப்புதல் தர வேண்டும் என கோரியுள்ளோம்.
கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் சந்தித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன் ஆகியோரும் சந்தித்துள்ளனர்.
பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில் நிறைவு பெற்றது.
சந்திப்பின்போது, கிடப்பில் உள்ள மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:-
ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 அமைச்சர்களுடன் ஆளுநரை சந்தித்தார்.
10 சட்ட முன்வடிவு இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. ஆனால், அதை ஆளுநர் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பினார்.
முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் தொடர்பாக கோப்புகளுக்கு அனுமதி கோரியுள்ளோம்.
அண்ணாவின் பிறந்தநாளன்று கைதிகள் விடுதலை தொடர்பாக 68 கோப்புகளுக்கு மட்டுமே ஆளுநர் அனுமதி அளித்திருந்தார். எஞ்சிய கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி தரவில்லை. நிலுவையில் உள்ள 49 கோப்புகளுக்கு அனுமதி வழங்குமாறு ஆளுநரிடம் கோரியுள்ளோம்.
டிஎன்பிஎஸ்சியில் 4 பேர் தான் உள்ளனர். காலியிடங்களை நிரப்ப ஒப்புதல் தர வேண்டும் என கோரியுள்ளோம்.
கோரிக்கைகளை மனுக்களாக ஆளுநரிடம் வழங்கியுள்ளோம்.
20 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு, ஆளுநர் அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற அறிவுரைபடி மசோதாக்களை ஆளுநர் பரிசீலிக்க வேண்டும். மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியதில்லை என்பதே எங்களின் கருத்து.
மசோதாக்களுக்கு நீங்களே அனுமதி தரலாம் என ஆளுநரிடம் தெரிவித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசு வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
- கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர், கவர்னரிடையே பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது. எனவே முதலமைச்சரை கவர்னர் அழைத்து பேசி இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காண வேண்டும். அப்படி செய்தால் இந்த நீதிமன்றம் வெகுவாக பாராட்டும் என்று நீதிபதிகள் கருத்து வெளியிட்டனர்.
அதன்பிறகு தமிழக அரசு வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.
இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) மாலை 5மணியளவில் சந்தித்து பேசினார்.
அப்போது தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் பற்றி கவர்னர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.
குறிப்பிட்ட சில மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதால் மக்கள் நல பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆளுநர் ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.
- உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணை.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை, நேற்று சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் ரவி தீடிரென டெல்லி புறப்படுகிறார்.
அதன்படி, இன்று மாலை 5.15 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். ஆளுநர் ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தின விழா நடந்தது.
- இதில் அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடி ஏற்றி வைத்தார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று சுதந்திர தின விழா நடந்தது. இதில் அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நீட் தேர்வு குறித்து ஆளுநர் வரம்பு மீறி பேசுகிறார். சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவை, ஒருமுறைக்கு இருமுறை அனுப்பியும், ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அவர் கைது செய்யப்படலாம். இதற்கு மாநில அரசுக்கு உரிமை உள்ளது.
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சி.பி.ஐ. அதிகாரியை கைதுசெய்து, போலீஸ் நிலையத்தில் அமர வைத்தாரா இல்லையா?
ஆளுநரின் பேச்சும் செயலும் தவறானது. எங்கள் கூட்டணி கட்சிகள், அவரது தேநீர் விருந்துக்கு வரமாட்டோம் எனக் கூறினோம். அவர் மழையே பெய்யாத போதும், மழை காரணமாக தேநீர் விருந்தை தள்ளி வைத்திருப்பதாக கூறியிருக்கிறார் என தெரிவித்தார்.
- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.
- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் ஆளுநர் மாளிகைக்கு சென்றடைந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கவர்னரின் 5 பக்க கடிதத்துக்கு, மு.க.ஸ்டாலின் பதில் அளித்து 6 பக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-
செந்தில் பாலாஜியை 'டிஸ்மிஸ்' செய்வதாக ஜூன் 29-ந்தேதி இரவு 7 மணிக்கு எனக்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு, பின்பு அதே நாளில் இரவு 11.45 மணிக்கு இடைக்காலமாக நிறுத்தி வைத்திருப்பதாக மற்றொரு கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் உண்மை என்னவென்பதையும், சட்டம் சொல்வதையும் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
உங்கள் கடிதங்கள் வாயிலாக நீங்கள் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சரவையில் இருந்து எந்தவொரு உதவியையோ ஆலோசனையோ கேட்கவில்லை.
நீங்கள் மிகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி எழுதிய கடிதத்தில், அட்டர்னி ஜெனரலின் கருத்தை பெற இருப்பதாகவும், அதுவரை முந்தைய உத்தரவை 'வாபஸ்' பெற்றுவிடுவதாகவும் கூறியுள்ளீர்கள். இது எதை காட்டுகிறது என்றால், இவ்வளவு பெரிய முக்கியமான முடிவை நீங்கள் சட்ட ஆலோசனை கேட்காமலேயே எடுத்திருக்கிறீர்கள். மத்திய மந்திரியின் தலையீடு வரும் அளவுக்கு இந்த விஷயம் சென்றிருப்பதால், நீங்கள் அவசர கதியில் செயல்பட்டிருக்கிறீர்கள் என்பதையும், அரசியல் சாசன சட்டங்களை போதிய அளவில் நீங்கள் பின்பற்றவில்லை என்பதையும் காட்டுகிறது.
எனது அமைச்சர்களும், எங்கள் எம்.எல்.ஏ.க்களும் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். மக்களின் நம்பிக்கையே எங்களின் அசைக்க முடியாத சொத்தாக உள்ளது. அவர்கள் எங்களுக்கு பின்னால் உறுதியுடன் நின்றுகொண்டிருக்கிறார்கள். எனவே அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பதவி ஏற்றுள்ள கவர்னர் போன்ற அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் நிர்வாகத்தை மேற்கொள்ளும்போது கண்ணியத்துடனும், தேவையற்ற அச்சுறுத்தல்களை செய்யாமலும் நடந்துகொள்ள வேண்டும்.
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடருவதில் நீங்கள் கூறியுள்ள கருத்துக்கும் சேர்த்து பதில் அளிக்க விரும்புகிறேன். உங்களுக்கு 1-6-2023 அன்று எழுதிய கடிதத்தில், விசாரணையை எதிர்கொள்ளும் ஒருவருக்கும், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட ஒருவருக்கும், கோர்ட்டினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான வித்தியாசங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
கோர்ட்டினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்குத்தான் அமைச்சர் பதவி அல்லது மக்கள் பிரதிநிதி என்ற பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்ய முடியும். இதை லில்லி தாமஸ் வழக்கில் 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தெளிவுப்படுத்தி உள்ளது.
நீங்கள் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள கருத்தில் சில கருத்துகளை தேர்ந்தெடுத்து கூறியிருப்பதால், அதுபோலவே லில்லி தாமஸ் வழக்கில் இருந்தும் உங்களுக்கு குறிப்பிட்ட கருத்தை எடுத்து கூற விரும்புகிறேன்.
அதில் கூறியுள்ளபடி, தகுதி இழப்பு என்பது கோர்ட்டினால் தண்டனை விதிக்கப்பட்டப்பிறகே நிகழ்கிறதாக உள்ளது. ஆனால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை அவரை கைது செய்திருக்கிறதே தவிர, அவர் மீது இன்னும் குற்றபத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. அதுபோல, குற்ற வழக்குகளை எதிர்கொண்டு வரும் நபர்களின் அமைச்சர் பதவி தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, 2014-ம் ஆண்டு மனோஜ் நருல்லா வழக்கில் பிறப்பித்த உத்தரவையும் சுட்டிக்காட்டுகிறேன். அதில், குற்ற வழக்கை எதிர்கொள்ளும் ஒருவர் அமைச்சரவையில் இருக்க வேண்டுமா? அல்லது நீக்கப்பட வேண்டுமா? என்பது பிரதமரோ அல்லது முதல்-அமைச்சரோ முடிவு செய்ய வேண்டிய விஷயமாக உள்ளது என்று கூறியிருக்கிறது.
எனவே ஒரு விசாரணை முகமை ஒருவர் மீது ஒரு வழக்கை தொடர்ந்திருப்பதால் மட்டுமே அவர் சட்டப்படி அமைச்சராக தொடர முடியாது என்று கூறிவிட முடியாது. 16-5-23 அன்று செந்தில் பாலாஜி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கூறிய கருத்தை உங்களுக்கு நான் ஏற்கனவே விளக்கமாக கூறியிருக்கிறேன். அது குற்றத்தை கண்டறிந்து முடிவெடுத்து அளிக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. எனவே அது செந்தில் பாலாஜியை தகுதி இழக்கச்செய்வதற்கான உத்தரவாக ஏற்றுக்கொள்ள முடியாது.
வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையின்போது, சிலர் தாக்கியதாக கூறப்பட்டுள்ள சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோர்ட்டிலும், விசாரணை அதிகாரிகளிடமும் உள்ள அந்த விவகாரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நீங்கள் எழுப்புவது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதுபோல் உள்ளது. மேலும் நீங்கள் இதுதொடர்பான விசாரணையில் செந்தில் பாலாஜி தலையிட்டிருப்பதாக கூறும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் 5 பக்க கடிதம் எழுதியிருக்கும் நீங்கள், முந்தைய அ.தி.மு.க. அரசின் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் செய்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை அனுமதியை அளிக்கும்படி எனது அரசு வைத்துள்ள கோரிக்கைளை கிடப்பில் போட்டு, விளக்கமுடியாத மவுனத்தில் இருக்கிறீர்கள். பல மாதங்கள் அந்த கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன.
குற்ற வழக்கில் நடவடிக்கைகளுக்கு அனுமதி கேட்டு சி.பி.ஐ. வைத்த கோரிக்கை மீது கூட எந்த நடவடிக்கையும் இல்லை. இதுபோன்ற பாரபட்ச நடவடிக்கைகள், உங்களது ஆரோக்கியமற்ற ஒருதலைபட்ச செயல்பாட்டை வெளிக்காட்டுவதோடு மட்டுமல்ல, நீங்கள் மேற்கொண்டுள்ள இரட்டை நடவடிக்கையின் பின்னால் இருக்கும் உள்நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
நான் வரம்பு கடந்த வார்த்தைகளை பயன்படுத்தியதாக என் மீது குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். தமிழக அரசு எப்போதுமே உங்களுக்கும், உங்கள் அலுவலகத்துக்கும் உள்ள மரியாதையை தந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் கலாசாரம் கற்றுக்கொடுத்த அந்த மரியாதையை நாங்கள் எப்போதுமே வழங்கிக்கொண்டிருக்கிறோம். அதனால் உங்களால் எங்களுக்கு அளிக்கப்படும் சட்டவிரோத உத்தரவுகளுக்கு நாங்கள் பணிவதாக நினைத்துவிடக்கூடாது. எனவே மீண்டும் நான் வலியுறுத்துவது என்னவென்றால், அரசியல் சாசனத்தின் 164 (1) பிரிவின்படி ஒரு அமைச்சரை நியமிக்கவோ அல்லது நீக்கவோ முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படிதான் கவர்னர் செயல்படமுடியும்.
அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும்? யார் நீக்கப்பட வேண்டும்? என்பதை முடிவு செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அது முழுக்க, முழுக்க முதல்-அமைச்சரின் தனிப்பட்ட சிறப்பு உரிமையாக உள்ளது. அரசியல் சாசனம் 164 (2) -ன்படி முதல்-அமைச்சரும், அமைச்சரவையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கு பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். எனவே செந்தில் பாலாஜியையோ, எனது அமைச்சர்களையோ 'டிஸ்மிஸ்' செய்யவேண்டும் என்று உத்தரவிடுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது, முழுக்க, முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரின் சிறப்பு உரிமையாகும். எனவே எனது ஆலோசனை இல்லாமல், செந்தில் பாலாஜியை 'டிஸ்மிஸ்' செய்ததாக நீங்கள் அளித்துள்ள அரசியல் சாசனத்துக்கு எதிரான தகவல், சட்டப்படி செல்லாததாகவும், புறக்கணிக்கத்தக்கதாகவுமே உள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்