என் மலர்
நீங்கள் தேடியது "செந்தில் பாலாஜி"
- சட்டசபையில் முன்வரிசையில் 6-ம் நம்பர் இருக்கையில் பொன்முடி அமர்ந்து வந்தார்.
- செந்தில் பாலாஜிக்கு 3-வது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு சட்டசபையில் 2-வது வரிசையில் கடைசிக்கு முந்தைய இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் முன்வரிசையில் 6-ம் நம்பர் இருக்கையில் பொன்முடி அமர்ந்து வந்தார். தற்போது அந்த இருக்கை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியை இழந்த பொன்முடிக்கு சட்டசபையில் மூன்றாவது வரிசையில் கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கும் 3-வது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பண மோசடி வழக்கில் விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும்.
- செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என்ற வாதத்தை ஏற்கிறோம். அந்த வகையில் புதிய கட்டுப்பாடு தேவையில்லை என நீதிபதிகள் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி அமைச்சராகவோ அல்லது எந்த அரசு பதவிகளும் வழங்கக்கூடாது. டெல்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும். பண மோசடி வழக்கில் விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும். செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில்,"அமலாக்கத்துறையின் வழக்கு முடிய 15 ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை எந்த பதவியும் வகிக்கக் கூடாதா? மீண்டும் அமைச்சராக முடியாது என உச்சநீதிமன்றம் கூற அதிகாரம் இல்லை" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், " லஞ்ச வழக்கில் விசாரணை முடியாமல் பண மோசடி வழக்கு விசாரணையை எப்படி தொடங்க முடியும் ? செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றால் அவரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்று நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையில் 6வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, பதவியில் இருக்கும் அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் ஜாமினா? அமைச்சர் பதவியா ? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சைவம், வைணவம் என குறிப்பிட்டு பெண்களை இழிவாக பேசியதால் பொன்முடிக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்களுக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் முத்துச்சாமிக்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுத்லாக கைத்தறித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மனோ தங்கராஜூக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா குறித்து அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் நாளை மாலை 6 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓரிரு நாளில் மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
- செந்தில் பாலாஜி முடிவெடுக்க வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) வரை கெடு விதித்திருந்தது.
2011 முதல் 2015-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக தொடர்பாக பணமோசடி வழக்கு தொடரபட்டது. இதையடுத்து அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டு அவர் மோசடி செய்ததற்காக முகாந்திரம் இருப்பதாக கூறி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர் திமுக அமைச்சர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து வாதம் செய்தது. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்பே அவருக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் வந்தது.
சுமார் ஒன்றை வருடம் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நீண்ட போராட்டத்தின்பின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது. இதையடுத்து அவர் ஓரிரு நாளில் மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி போக்குவரத்துத் துறையில் வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி இருப்பதால் சாட்சிகள் கலைக்கப்படலாம் என்று வாதங்கள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில்தான் அமைச்சர் பதவியை? ஜாமீனா? இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி முடிவெடுக்க வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) வரை கெடு விதித்திருந்தது. இதைத்தொடர்ந்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனைக்கு பின் செந்தில் பாலாஜி பதவி விலகுவதே நல்லது என முடிவெடுத்துள்ளாராம்.
இன்று ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்தித்து பேசியப்பிறகு இதில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் திங்கள்கிழமை செந்தில் பாலாஜி ராஜினாமா முடிவு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தகவல்கள் மூலம் ஊர்ஜிதமாகியள்ளது.
- இந்த மாதம் முதல் 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
- 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் பயனடைவார்கள்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப் பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 2000, விற்பனையாளர்களுக்கு
ரூபாய் 2000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, 01.04.2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 64.08 கோடி கூடுதல் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
- சபாநாயகரின் பதிலால் அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு
3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு ஆகிய 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம் என அதிமுகவினர் சபாநாயகரிடம் முறையீடு செய்தார்கள்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "அரைமணி நேரத்திற்கு முன்னதாக கடிதம் கொடுத்தீர்கள், அது பரிசீலனையில் உள்ளது. நான் என்னுடைய முடிவை சொல்லவில்லை. ஏற்கனவே அலுவல் நிறைய இருக்கிறது அதனால் இன்று எடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
சபாநாயகரின் பதிலால் அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
- ஏப்ரல், மே மாதங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
- கோடைக்காலத்தில் 22 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படும்.
கோடைக்காலத்தில் தடையின்றி சீரான மின்சார விநியோகம் செய்வது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
* கோடைக்காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
* கோடைக்காலத்தில் தடையில்லாமல் சீரான மின் விநியோகம் செய்ய ஏற்பாடு.
* ஏப்ரல், மே மாதங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
* கோடைக்காலத்தில் 22 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படும்.
* தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 78 ஆயிரம் மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன.
* 3-ல் ஒரு பங்கு காலிப்பணியிடங்கள் உள்ளன.
* மின்சாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் அவசியமான இடங்கள் நிரப்பப்படும்.
* துணை மின்நிலையங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
* 2030ஆம் ஆண்டுக்குள் மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
- சோலார் பேனல் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் பேசினார்.
- சாரி... சாரி.. பழக்க தோஷத்தில் பேசிட்டேன்" என்று கருப்பண்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள், விடைகள் நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் "தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல் நிறைய அமைத்து வருகிறார்கள். அதில் EB கொள்திறன் 100 கிலோவால்ட் தான் அனுமதி வழங்குகிறார்கள். வெயில் காலங்களில் 100 கிலோவால்ட் போதுமானதாக இல்லை ஆகவே 120 கிலோவால்ட் அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும். இது மாப்பிள்ளைக்கு (செந்தில் பாலாஜி) தெரியும்" என்று பேசவே அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதனையடுத்து, சாரி... சாரி.. பழக்க தோஷத்தில் பேசிட்டேன்" என்று கருப்பண்ணன் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "இது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும்" என்று தெரிவித்தார்.
- சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சாராய அமைச்சர், சிறையில் ஜாமீன் கிடைப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி, ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை, உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் சாராய அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே சாராய அமைச்சர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஜாமீன் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர், அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும் என பதில் அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவு.
- 10 நாள் அவகாசம் கொடுத்த நீதிமன்றம் இதற்கு மேல் வழங்கப்படாது என கண்டிப்பு.
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என கேள்வி எழுப்பியிருந்தது. இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்யக்கோரி முறையாக நோட்டீஸ் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் அவகாசம் தேவை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிப்பட்டது.
இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததது. இந்த வழக்கு பல நாட்களாக நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
அவகாசம் கேட்பது நியாயமற்ற முறையாக இருந்தாலும் கூட, இன்னும் 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.
போக்குவரத்துத்துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.
இந்த ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த 12-ந்தேதி நடந்த விசாரணையின்போது, அமைச்சராக தொடர விருப்பமா? என செந்தில் பாலாஜியிடம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் என அவர் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் அது பக்ரீத் காலம்.
- ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, "ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் அது பக்ரீத் காலம். அதுவே ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்
எத்தனை ஆடுகள் வந்தாலும் பள்ளபட்டிக்கு உள்ளேயும் வரமுடியாது, வந்துவிட்டால் வெளியேயும் செல்ல முடியாது என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள். உங்கள் ஆதரவை எங்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கனவே கூறியது போல அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி.
- தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவைக்கு வருகிறார்.
கோவை:
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் இருப்பு உள்ளது. புதிதாக 7000 தெர்மல் பிளான்ட் மூலம் மின்சாரம் உற்பத்தி, 14 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி, 2000 பேட்டரி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. 2030-ம் ஆண்டு வரை பிரச்சனை இருக்காது.
எங்காவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்பட்ட மின்தடை உடனே சரி செய்யப்பட்டு இருக்கும்.
பொதுமக்கள் இதுகுறித்து உடனே புகார் கூறினால் மின்சார வாரிய ஊழியர்கள் வந்து நடவடிக்கை எடுத்து சரி செய்வார்கள். இதற்காக மின்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சிலர் இந்த அரசு குறித்து ஏதையாவது தெரிவித்து, இவர்கள் கீழே விழமாட்டார்களா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது நடக்காது. தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்காக புதிய திட்டங்களை செயல்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலமைச்சர் எடுத்து வரும் சீரிய திட்டங்களால் தமிழகம் விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கனவே கூறியது போல அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி. இதை வெல்ல தமிழக முதலமைச்சர் மாநில முதல்-மந்திரிகள், அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். இதிலும் வெற்றி பெறுவோம்.
மதுவிலக்கு பொறுத்தவரை ஒரு தலைவர் 2023-ம் ஆண்டில் கூறிய கருத்தையும், இப்போது அவர் கூறிய கருத்தையும் நாம் பார்த்து வருகிறோம். அடிக்கடி பேச்சை மாற்றிக் கொள்ளக் கூடாது.
இன்று நடைபெறும் போராட்டம் குறித்து கேட்கிறீர்கள். கோமாளிகள் செயல்களுக்கு நான் பதில் கூற முடியாது. அரசு நிகழ்ச்சி இதில் அரசியல் பேச வேண்டாம்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவைக்கு வருகிறார். கோவை வனத்துறை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.108 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.67 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 39 ஆயிரத்து 494 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் பவன் குமார், மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.