search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government schools"

    • மாணவர்கள் உருவாக்கிய 167 அறிவியல் படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.
    • அனைத்து ஆசிரியர்கள்-ஆசிரியைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர்.

     புதுச்சேரி:

    புதுவை தமிழ் தென்றல் திரு.வி.க.அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து அறிவியல் கண்காட்சியை நடத்தியது.

    தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மரூபஸ், தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பிரெஞ்சு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மனோஜ் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் உருவாக்கிய 167 அறிவியல் படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

    கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஞானமணி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காட்சி படைப்புகளை மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தார்.

    பள்ளி அளவில் நடைபெற்ற இக்கண்காட்சிக் கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்கள்-ஆசிரியைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்கிறது.
    • தலைமை ஆசிரியர் குழு மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    தாராபுரம்:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மத்திய கல்வி அமைச்சகத்தின், தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக மையம் (என்.ஐ.இ.பி.ஏ.,) ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்கிறது. 2017 முதல் ஆண்டுதோறும் மதிப்பீட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஒவ்வொரு பள்ளி நிர்வாகங்களும், அடிப்படை வசதி குறித்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பாக இது அமைகிறது. நடப்பாண்டுக்கான சுயமதிப்பீட்டு பணிகளை ஒவ்வொரு பள்ளிகளும் துவங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாநில திட்ட இயக்குனரிடம் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    அதில் பள்ளியில் உள்ள வகுப்பறை, நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், கம்ப்யூட்டர், மின்சார வசதி, மதிய உணவு பொருட்கள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்டவை குறித்து இம்மாதம் 30-ந் தேதிக்குள் சுயமதிப்பீடு செய்ய வேண்டும். மேலாண்மை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து வட்டார அளவிலான கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் குழு மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    அதற்கேற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளை தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க அரசு திட்டமிப்பட்டுள்ளது.
    • 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     ஈரோடு:

    பள்ளிகளில் மரக்க ன்றுகள் நடுதல், மூலிகை தோட்டங்கள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைக ளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பா ண்டில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் பள்ளிகல்வி த்துறை சார்பில் இந்தாண்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சம் மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே மாணவர்க ளுக்கு இயற்கை மீதான பற்றினை உருவாக்கவும், மூலிகை தாவரங்கள் குறி த்தும், அதன் பயன்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை தாவரத்தின் பெயர், பயன்கள், அவற்றை பராமரிக்கும் முறைகளை எடுத்துக்கூறும் வகையில் பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க அரசு திட்டமிப்பட்டுள்ளது.

    தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அமைக்கப்படும் இந்த மூலிகை தோட்டத்தை தொண்டு சம்மந்தப்பட்ட தொண்டு நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளது.

    12 சென்ட் காலி இடம், சுற்றுச்சுவர் வசதி, தண்ணீர் வசதி உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகள் மூலிகை தோ ட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    பள்ளி வளாகத்தில் காலி இடம் இல்லாவிட்டாலும், மாடியில் இடமிருந்தாலும் மூலிகை தோட்டம் அமைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் செலுத்தினார்.
    • கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள வடபழஞ்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வன்னிச்செல்வி மணி தலைமை வகித்தார். ஆனந்த வள்ளி ராஜாங்கம் முன் னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வடபழஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் அவர்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் பயணப்படி மற்றும் அமர்வுப்படியில் இருந்து கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டது.

    கிராம சபை சிறப்பு கூட்டத்தில் வடபழஞ்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் 30 பேர் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தனர். அவ்வாறு சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்றம் செலுத்தியதற்கான ரசீதை பயனாளிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வன்னிச்செல்வி மணி வழங்கினார்.

    கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் தொகுதியில் 6 பள்ளிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் மேஜைகள் வழங்கப்பட்டு உள்ளது.
    • நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தெய்வப்பிரியா தலைமை தாங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள 6 பள்ளிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் மேஜைகள் வழங்கப்பட்டு உள்ளது. சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து பள்ளிகளுக்கு பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தெய்வப்பிரியா தலைமை தாங்கினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் செய்யது அலி, முத்துக்குமார், நகர அவை தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புதாய், மாவட்ட ஆதி திராவிட அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சை, மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ராஜ், அன்சாரி, மாவட்ட வக்கீல் துணை அமைப்பாளர் காளிராஜ், உதவி தலைமை ஆசிரியர் பூமாரி, உடற்கல்வி இயக்குனர் நாராயணன், தமிழ் ஆசிரியர் சங்கர்ராம், என்.சி.சி. அலுவலர் பாலமுருகன், ஆசிரியர் ராமநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் குமார், துணை தலைவர் குமார், உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, மனோகரன், வேல்ராஜ் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த அஜய்மகேஷ்குமார், கணேஷ், ஜெயக்குமார், நகராட்சி கவுன்சிலர் ராஜா ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், சங்கர், குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் தொடங்கப்பட்டது.
    • இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் என ரூ. 4 லட்சம் நிதியில் உயர்தர (ஸ்மார்ட்) வகுப்பறை அமைக்கப் பட்டது. அதனை எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனும், யூனியன் சேர்மன் சிங்கராஜூம் மாணவ மாணவிகளின் பயன் பாட்டிற்கு திறந்து வைத்த னர்.

    அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாகவும், ஏழை எளிய குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் முதல்கட்டமாக ராஜ பாளையம் தொகுதியிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு தலா ரூ. 2 லட்சம், 30 லட்சம் நிதி ஒதுக்கி ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது அதில் முதல் பள்ளியாக சோலைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டுமெனும் நோக்கில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்து நல்லதொரு வழிகாட்டுதலை அடுத்த தலைமுறைக்கு உருவாக்கி தந்துள்ளார். இந்தியாவில் கல்வியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்திலும் உள்ளது.

    ராஜபாளையம் தொகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்கையில் மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கும் ஆண்டு விழா நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதன்படி அந்த பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தியிருந்தோம் இதேபோல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் கல்வித்துறையின் மானியக்கோரிக்கையில் ரூ. 12கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் அழகு ராஜலட்சுமி, கவுன்சிலர் அனுசுயாகண்ணன், கிளைச்செயலாளர்கள் ரத்தினக்கனி, பிள்ளையார், வைரமுத்து ,ரமேஷ், கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து தகவல் சேகரிக்க வேண்டும்.
    • மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.

    சென்னை:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்க வேண்டும்.

    மத்திய அரசின் திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல்நல சோதனை நடத்தப்படுகிறது.

    இதில் மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.

    ஆய்வின்போது மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சைகள் அளிப்பதற்கு அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 64 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • கல்வித்தரம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 71 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 138 பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மே மாதம் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை நடந்தது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணி மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் பெற்றுச்சென்றனர்.

    இப்பணி மாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர் மாவட்டத்தில் 42 அரசு மேல்நிலை பள்ளிகளிலும், 22 அரசு உயர்நிலை பள்ளிகளிலும், ஆக மொத்தம் 64 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின. ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய வெளி மாவட்டத்தை சேர்ந்த தலைமையாசிரியர்கள் அவர்களது சொந்த மாவட்டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பணி மாறுதலில் சென்றதே இதற்குக் காரணமாகும்.

    தற்போது இந்த 64 பள்ளிகளில் மூத்த ஆசிரியர் கள் தலைமையாசிரியராக பொறுப்பு வகிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவால் ஆசிரியர்கள் கலந்தாய்வில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வில்லை. அதனால் தலைமை யாசிரியர் பணியிடங்களும் நிரப்பப் படவில்லை.

    நிரந்தர தலைமையாசிரியர் இல்லாமல் பள்ளிகள் திறம்பட செயல்பட முடியாது. மேலும் தலைமையாசிரியர் பணியை மற்றொரு ஆசிரியர் பொறுப்பு வகிப்பதால் அவரும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறையும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் 10-ம் வகுப்பு, மேல்நிலை அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நடந்து முடிந்த பிளஸ்-2 அரசு பொது தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் 96.3 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. ஆனால்

    கடந்த 2022-ம் ஆண்டில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்திருந்தது. மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.86 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடத்திற்கு பின் தங்கியது. கடந்த 2022-ம் ஆண்டில் 5-ம் இடம் பிடித்தி ருந்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏற்கனவே கல்வித்தரத்தில் பின்தங்கி வரும் நிலையில், 64 பள்ளிகள் தலைமை ஆசிரியர் இல்லாமல் செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக கல்வி அமைச்சர் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலியாக உள்ள அரசு பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணி அடித்து தண்ணீர் குடிக்க அறிவுறுத்தல்
    • காலையில் இறை வணக்க கூட்டத்தில் நீர்ச்சத்து குறைபாடால் ஏற்படும் விளைவுகளை ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பள்ளி திறப்பு 2 முறை நீட்டிக்கப்பட்டது. இன்று கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

    அரசு பள்ளிகளில் மாணவர்களை வரவேற்க விதவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பள்ளியின் வாயில்களில் தோரணங்கள் கட்டப்பட்டு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

    வாசலில் கலை நிகழ்ச்சிகள், மேளதாளங்களுடன் பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்களுக்கு சாக்லெட், பூக்கள் வழங்கியும், பன்னீர் தெளித்தும் வரவேற்றனர். முதல் நாளான இன்று மாணவர்களோடு பெற்றோர்களும் பள்ளிக்கு வந்திருந்தனர். நீண்ட நாளைக்கு பிறகு நண்பர்களோடு மாணவர்கள் பேசி மகிழ்ந்தனர். இன்று பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே இருந்தது. இன்று காலை 7 மணி முதலே கடுமையான வெப்பம் நிலவியது.

    இதனால் மாணவர்கள் அடிக்கடி தண்ணீர் அருந்த சொல்லும்படி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதற்காக பள்ளிகளில் தினமும் 3 முறை வாட்டர் பெல் அடிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி காலையில் இறை வணக்க கூட்டத்தில் நீர்ச்சத்து குறைபாடால் ஏற்படும் விளைவுகளை ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

    கோடை காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மாணவர்கள் தண்ணீர் அருந்த காலை 10.30, 11.45, 2.30 மணிக்கு வாட்டர் பெல் அடிக்கப்பட்டது. அந்நேரத்தில் ஆசிரியர்கள், மாணவர்களை தண்ணீர் குடித்து வரும்படி அறிவுறுத்தினர். பள்ளி திறப்பால் புதுவை நகரத்தில் காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    போக்குவரத்து போலீசார் நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    இந்திராநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு கை கடிகாரம் பரிசாக வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஏ.கே.டி.ஆறுமுகம் எம்எல்ஏ, இணை இயக்குனர் சிவகாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • நேரு எம்.எல்.ஏ. சமரசம்
    • அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை உருளை யன்பேட்டை தொகுதிக் குட்பட்ட சவரிராயுலு வீதியில் உள்ள திரு.வி.க. அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திரு.வி.க. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவலறிந்த நேரு எம்.எல்.ஏ. அங்கு சென்று கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

    பள்ளி இடமாற்றம் குறித்து எம்.எல்.ஏவிடம் கூட தகவல் தெரிவிக்காதது ஏன்? என வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி தற்போதைய இடத்திலேயே செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    • சென்னை டிபிஐ., வளாகத்தில் கடந்த மே 22 -ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினோம்.
    • ஊதியம் வழங்க முடியாது என்று பள்ளி கல்வி திட்ட இயக்குநா் ஜூன் 9-ந் தேதி தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர் :

    அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது தொடா்பாக ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பழ.கெளதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களின் பணி நிரந்தரம் மற்றும் மே மாத ஊதியம் வழங்கக்கோரி, சென்னை டிபிஐ., வளாகத்தில் கடந்த மே 22 -ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினோம். போராட்டம் மே 24 -ந் தேதி வரை நீடித்த நிலையில், பள்ளிகல்வித்துறை இயக்குநா், சங்க நிா்வாகிகளை அழைத்துப்பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

    அப்போது 2022 - 23 ம் ஆண்டுக்கான மே மாத ஊதியம் வழங்குவதாக உத்தரவாதம் அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்க முடியாது என்று பள்ளி கல்வி திட்ட இயக்குநா் ஜூன் 9 -ந் தேதி தெரிவித்துள்ளாா்.

    எனவே போராட்டத்தின் போது அளித்த உத்தரவாதத்தின்படி மே மாதத்துக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும் பகுதிநேர ஆசிரியா்களின் நீண்டநாள் கோரிக்கையான பணி நிரந்தரம் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 12ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
    • பல்லடம் வட்டாரத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 12ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.இந்நிலையில் அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இதன்படி பல்லடம் வட்டாரத்தில் உள்ள 85 பள்ளிகளில், 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.இவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், அறிவியல், உள்ளிட்ட 5 புத்தகங்கள், மற்றும் நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை உள்ளிட்டவைகள் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.அரசு பள்ளி மாணவர்கள், ஜூன் 12-ந் தேதி பள்ளிக்கு செல்லும்போது முதல் நாளிலேயே அவர்களுக்கான பாடப்புத்தகங்கள், புத்தக பைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    ×