என் மலர்
உள்ளூர் செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டி கே.வி.கே. அரசு பள்ளியில் இரவு காவலாளியை பணி அமர்த்த வேண்டும்
- பள்ளியின் நலன் கருதி இரவு காவலாளியை பணியமர்த்த வேண்டும்.
- பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டி பகுதியில் கே.வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இப்பள்ளியில் கணினி ஆய்வகங்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அனைத்து ஆவணங்களும் உள்ளது.
இங்கு 10 ஆண்டுகளாக இரவு காவலரை நியமிக்கப்படாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறினர்.
எனவே இப்பள்ளியின் நலன் கருதி இரவு காவலாளியை பணியமர்த்த வேண்டும்.
பள்ளி துறையும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story






