search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private schools"

    • கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.
    • வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மார்ச்சு முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது தலைமையிலும். கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தலைமையிலும் பல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், எதிர்வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால் பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள். சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
    • தமிழக கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை விழிப்புணர்வோடு எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய தீர்வினை காண வேண்டும்.

    எந்த நோக்கத்திற்காக கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற தமிழக கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை விழிப்புணர்வோடு எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வெடிகுண்டு தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.

    ஊட்டியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    பிரபல தனியார் பள்ளிகளுக்க இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே நேற்று கோவையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று ஊட்டியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை தீவிரமாக ‘சைபர் கிரைம்' போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் ஐ.பி. முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது. இந்த தகவல் சென்னை முழுவதும் பரவியது. அதிர்ச்சி அடைந்து பெற்றோர்கள் பள்ளிகளுக்கு விரைந்து வந்து தங்கள் பிள்ளைகளை பதற்றத்துடன் அழைத்து வெளியேறினார்கள். சென்னை முழுவதும் இதே பேச்சாக இருந்தது.

    இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை தீவிரமாக 'சைபர் கிரைம்' போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் போலீஸ் உதவியை நாட சென்னை காவல் துறை முடிவு செய்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் ஐ.பி. முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இன்டர்போல் போலீஸ் உதவியை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் முழுமையாக சோதனை நடத்தி உள்ளதால் அச்சமின்றி பள்ளிகளை நடத்தவும் அந்தந்த காவல் நிலைய போலீசார் உரிய பாதுகாப்பை வழங்கவும் சென்னை காவல் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை.
    • பெற்றோர்கள் பயப்படாமல் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப அறிவுரை.

    சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே

    கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே இ-மெயில் ஐடியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும், மிரட்டல் விடுத்த நபர் மீது அந்தந்த காவல் நிலையங்களில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் அச்சத்தால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர்.

    இந்நிலையில், சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும் நாளை வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

    மேலும், " காவல் துறையினர் உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். பெற்றோர்கள் பயப்படாமல் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இ-மெயில் ஐடியில் இருந்து 13 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்.
    • வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும் திட்டம்.

    சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் மிரட்டல் விடுத்த நபர் மீது அந்தந்த காவல் நிலையங்களில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம், திருமங்கலம், அண்ணா நகர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒரே இ-மெயில் ஐடியில் இருந்து 13 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    மேலும், வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை கூறுகையில்,

    பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

    வெடிகுண்டு மிரட்டல் செய்தியால் குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளிகளில் குவிந்து வரும் பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரே ஒரு நபர் தான் என்பது தெரிய வந்துள்ளது. அடையாளம் தெரியாக அந்த நபர் குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    மெயில் அனுப்பப்பட்ட ஐபி முகவரியை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ½ சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தை போல் புதுவையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் அரசின் இடங்களில் 7½ சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசை வலியுறுத்தி ஜென்மராக்கினி கோவில் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொண்டு வரப்பட்ட சட்டத்தை புதுவையிலும் கொண்டுவர வேண்டும் என சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திய போது அரசியல் காழ்புணர்ச்சியால் அந்த சட்டத்தை தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமல்படுத்த வில்லை.

    புதுவையில் தேசிய ஜனநாயக முன்னணியில் புதிய ஆட்சி ஏற்பட்ட பிறகு கவர்னர், முதல் அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து மீண்டும் வலியுறுத்தி னோம்.அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு இல்லாததால் ஒன்று அல்லது 2 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

    இந்த ஆண்டு சுமார் 389 மருத்துவ இடங்கள் அரசு இடங்களாக கிடைத்துள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7½ சதவீத உள் ஒதுக்கீடு அளித்தால் சுமார் 30 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    எனவே தான் உள்ஒதுக்கீடு கேட்கிறோம். ஆனால் தனியார் பள்ளிகளுக்கு சாதகமான நிலை பாட்டில் அரசு இருப்பதால் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு உள் ஒதுக்கீட்டை வழங்கவில்லை. புதுவை தி.மு.க.வுக்கு மாணவர்கள் பிரச்சனை உள்ளிட்ட எந்த பிரச்சனை களி லும் அக்கரை இல்லை. தங்களது தொழில் வளம் பாதிக்காத வகையில் அவ்வப்போது கவர்னர் பற்றி விமர்சனம் செய்தால் போதும் என்ற நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    • தனியாா் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
    • மாணவா்கள் விடுமுறை நாள்களில் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜிடம், அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பு பொதுச்செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை விதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இது தொடா்பாக மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் தனியாா் பள்ளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனா். தனியாா் பள்ளிகள் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனா். இதனால் மாணவா்கள் விடுமுறை நாள்களில் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனா்.

    ஆகவே, நேரடியாக கள ஆய்வு செய்து விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியாா் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம்.
    • 228 பள்ளிகளில் நாளை காலை 10 மணிக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக குலுக்ல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 013-2014-ம் கல்வி ஆண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

    மேலும் 2023-2024ம் கல்வி ஆண்டிற்கு இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள 228 பள்ளிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பித்த பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.9 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • வங்கி கணக்கில் மட்டுமே கட்டணங்களை மாணவர்கள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் திடம், அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பினர் பொது ச்செயலாளர் சரவணன் கொடுத்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட மிக அதிகமாக பல மடங்கு கட்ட ணம் வசூலித்து வருகின்றனர்.

    தற்போது நடப்பு ஆண்டுக்கான கல்வி கட்டண வசூல் தொடங்கி விட்டது. ரூ.9 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக

    பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வங்கி கணக்கில் மட்டுமே கட்டணங்களை மாணவர்கள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கும் செயல்பாடு நாளையுடன் முடிவடைகிறது.
    சேலம்:

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி சேலம் மாவட்டத்தில்  உள்ள  அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்,  நலிவடைந்த பிரிவினரின்  குழந்தைகளுக்கு ஆரம்ப நிலை வகுப்பில் (எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பு) 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது. 
     
    அதன்படி வருகிற கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேருவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு கல்வித்துறை வெளியிட்டது.  விண்ணப்பிப்பதற்கான செயல்முறை  தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின்  கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) இணையதளத்தில்   கடந்த  ஏப்ரல் மாதம் 20-ந்தேதி  தொடங்கியது.  

    விண்ணப்பிப்பதற்கான  கடைசி நாள் இந்த மாதம்  18-ம் தேதி என அறிவித்து இருந்தது.  அதனை தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தையின் புகைப்படம், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை கொண்டு இந்த இணையதளம் வழியாக    விண்ணப்பித்து வந்தனர்.

    இதனிடையே  இலவச கல்வி இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க உரிய ஆவணங்களான  வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்,  ஆதார்   உள்ளிட்டவைகள் அரசிடம இருந்து பெறுவதற்கு பல நாட்கள் ஆனதால்   ஏழை, எளிய பெற்றோர் பலர் விண்ணப்பிக்கவில்லை. இது அரசின் கவனத்திற்கு வந்தது.
     
    இதையடுத்து,  தமிழக அரசு, ஏழை, எளிய குழந்தைகளின் நலன் கருதி  விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்து உத்தரவிட்டது. அதாவது 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை என 7 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் வழங்கியது.  இந்த நிலையில், 25 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் முறை   நாளை (25-ந்தேதி) யுடன் முடிவடைகிறது.  

    நாளை கடைசி நாள் என்பதால் சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெற்றோர் பலர் ஆர்வமுடன்  விண்ணப்பித்து  வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில்  கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் வரும் 353 பள்ளிகளிலும் கடந்த ஆண்டை விட விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்துள்ளன. 
    ×