

வியாசர்பாடி, எம்.கே.பி.நகரில் உள்ள தனியார் பள்ளி அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் நேற்று திடீரென மின்மாற்றி வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
இதேபோல் எருக்கஞ்சேரி பிரதான சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் நேற்று நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோவிலும் தீப்பற்றி சேதம் அடைந்தது.
இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தீப்பற்றி எரிந்த 2 டிரான்ஸ்பார்மர்களையும் சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இதன் பின்னர் மின்விநியோகம் சீராகும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.