என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசுப் பள்ளிகள்"

    • தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 12,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
    • உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பட்டுள்ளன.

    இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

    இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 12,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இது கல்வித் துறையில் தனியார் மயமாக்கல் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுவதும் இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

    அரசுப் பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் நவீனக் கல்வி முறைகளைச் செயல்படுத்துவதில் உள்ள தொய்வு போன்றவை அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

    பாஜக ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தரவுகளில் தெரியவந்துள்ளது.

    கல்வி உரிமைச் சட்டம் (RTE) நடைமுறையில் இருந்தும், ஏழை மாணவர்களுக்கான தரமான கல்வியை தரும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

    • திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம், மிக அதிகரித்துள்ளது
    • உலகத் தரம் வாய்ந்த கல்வியை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை.

    தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளி இடைநிற்றல் அளவு அதிகரித்துள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 

    "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம், மிக அதிகரித்துள்ளது, மத்திய கல்வித்துறை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2021–22 ஆம் ஆண்டிலிருந்து, தற்போது மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், தொடக்கப் பள்ளி வகுப்புகளில் 0% ல் இருந்து 2.7% ஆகவும், நடுநிலை வகுப்புகளில் 0% ல் இருந்து 2.8% ஆகவும், உயர்நிலை வகுப்புகளில் 4.47% ல் இருந்து 8.5% ஆகவும் அதிகரித்துள்ளது.

    கடந்த நான்கரை ஆண்டுகளாக, தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் பணம் சம்பாதிக்க, அரசுப் பள்ளிகளில், வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் என, அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை முழுமையாக சிதைத்ததே, இதற்கு முக்கியக் காரணம்.

    உலகத் தரம் வாய்ந்த கல்வியை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று திமுக அரசு கொண்டு வந்த வினோத கல்விக் கொள்கை, ஒரு தோல்வியடைந்த கல்விக் கொள்கை என்பது நிரூபணமாகியிருக்கிறது.

    ஏழை, எளிய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சம் கூடக் கருத்தில் கொள்ளாமல், கல்வியை வியாபாரமாக்கி, நடுத்தர குடும்பத்தினர் மீது, பெரும் கடன் சுமையைத் திணித்திருக்கிறது திமுக அரசு. வரும் தேர்தல் முடிந்த பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, அரசுப் பள்ளிகள் இழந்த பெருமையை நிச்சயம் மீட்டெடுக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
    • சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதப் போகிறேன் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நாடகம் வேறு.

    அரசு பள்ளிகளில் போதிய கட்டிடங்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை உருவாகியுள்ளதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், மைதானத்தில் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

    பெற்றோர்களின் கடின உழைப்பில், மாணவர்கள் படித்து சாதனை செய்வதில் எல்லாம், தங்கள் ஆட்சியின் ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, உண்மையில் அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை என்பதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

    ஆட்சிக்கு வந்த உடன், 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுப்போம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்த திமுக, ஆட்சி முடியப் போகும் தருணத்திலும் கூட, எந்த மாவட்டத்தில் எத்தனை பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளார்கள் என்பதைக் கூற மறுத்து வருகிறார்கள். இந்த அழகில், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதப் போகிறேன் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நாடகம் வேறு.

    "Out of Contact" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசுப் பள்ளிகளில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • 22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்கான பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    அரசுப் பள்ளிகளில் இணைய வேகத்தை 100 எம்பிபிஎஸ் என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 6223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    6992 நடுநிலைப் பள்ளிகளில் 3267 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மொத்தமுள்ள 24,338 தொடக்கப் பள்ளிகளில் 8,711 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 19,668 அரசுப் பள்ளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இணையதள வசதி வழங்கப்படும்.

    மேலும், அரசுப் பள்ளிகளில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    • கடந்த 20 ஆண்டுகளாக இக்கிராமத்தில் இருந்து ஒருவர் கூட தனியார்ப் பள்ளியில் படிக்கவில்லை.
    • இதுவரை தனியார்ப் பள்ளி வாகனங்கள் எதுவும் இக்கிராமத்திற்கு வந்ததில்லை.

    அரசுப் பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்க்கும் கர்நாடக கிராம மக்களின் முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மாதகவுடனகோப்பலு கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டும் தான் சேர்க்கின்றனர்.

    அரசுப் பள்ளிகளை ஊக்குவிக்கவும் கன்னட மொழியை பாதுகாக்கவும் தனியார் பள்ளிகளை இக்கிராம மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.

    கடந்த 20 ஆண்டுகளாக இக்கிராமத்தில் இருந்து ஒருவர் கூட தனியார்ப் பள்ளியில் படிக்கவில்லை. இதுவரை தனியார்ப் பள்ளி வாகனங்கள் எதுவும் இக்கிராமத்திற்கு வந்ததில்லை.

    தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, இக்கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இக்கிராமத்தில் இருந்து அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பெங்களூரு, மைசூர் போன்ற இடங்களில் பணிபுரிகின்றனர்.

    • மதுரையில் நேற்று இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு.

    தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. மதுரை கீழ அண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

    இந்த நிலையில், சென்னை உள்ளிட அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள  மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

    ×