search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி- தமிழக அரசு
    X

    தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி- தமிழக அரசு

    • அரசுப் பள்ளிகளில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • 22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்கான பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    அரசுப் பள்ளிகளில் இணைய வேகத்தை 100 எம்பிபிஎஸ் என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 6223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    6992 நடுநிலைப் பள்ளிகளில் 3267 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மொத்தமுள்ள 24,338 தொடக்கப் பள்ளிகளில் 8,711 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 19,668 அரசுப் பள்ளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இணையதள வசதி வழங்கப்படும்.

    மேலும், அரசுப் பள்ளிகளில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    Next Story
    ×