அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் காலை உணவு- தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிறது

மதுரையில் நேற்று இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு.
(கோப்பு படம்)
(கோப்பு படம்)
Published on

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. மதுரை கீழ அண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

இந்த நிலையில், சென்னை உள்ளிட அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள  மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com