search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "of printers to 480"

    • அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி டி எப் பைலாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.
    • பிரிண்டரில் இருந்து வினாத்தாள்களை பிரிண்ட் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு, 

    பள்ளிகளில் தேர்வு வினாத்தாள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அச்சகங்களில் அச்சிடப்பட்டு பின்னர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இது போன்ற வினாத்தாள்கள் சில நேரங்களில் முன்கூட்டியே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அந்தப் பள்ளிகளில் பிரிண்டர் வழங்கி அதன் மூலம் மாணவ, மாணவி களுக்கு வினாத்தாள் கொடு க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முதற்கட்டமாக சென்னை, கிருஷ்ணகிரி, ஈரோடு உட்பட 9 மாவட்டங்களில் பிரிண்டர் முறை மூலம் வினாத்தாள்களை எடுத்து மாணவ- மாணவி களுக்கு தேர்வென்று வழங்கும் முறை சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையினர் கூறியதாவது:- தேர்வு தினத்தன்று பள்ளிக்கல்வி த்துறை மூலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி டி எப் பைலாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.

    அவற்றை பிரிண்ட் எடுத்து மாணவ- மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வழங்க வேண்டும். ஏற்கனவே பிரிண்டரில் இருந்து வினாத்தாள்களை பிரிண்ட் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 480 அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு எஸ். எஸ்.எ. மூலம் பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    500-க்கும் மேல் மாணவர்களை கொண்ட பள்ளிகளுக்கு பெரிய பிரிண்டரும், 500க்கும் கீழ் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு மீடியம் சைஸ் பிரிண்டரும் வழங்கப்பட்டுள்ளது. பிரிண்டர்கள் ஜூன் முதல் பயன்பாட்டுக்கு வரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×