என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கலை கல்லூரி"

    • கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக கொண்டு நமது இளைய சமுதாயம் உலகளவில் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உயர்கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதால் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முத்தான திட்டங்களை வழங்கியதுடன் திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக திறன் மேம்பாட்டு துறையின் மூலம் வழங்கி வருகிறார்.

    இதனால் கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனை அறிந்திருந்த நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட ஆணையிட்டு, தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் உயர்கல்வி பயில பெருமளவில் மாண வர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அதேபோல் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15 சதவீதம் இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி, இவ்வாண்டு மேற்படி கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7- ந் தேதி தொடங்கியது.
    • விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7- ந் தேதி தொடங்கியது. 176 கல்லூரிகளில் 159 பிரிவுகளில் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களுக்கு மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 119 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந்தேதி ஆகும்.

    இதேபோல் என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் படுஜோராக நடந்து வருகிறது. கடந்த 7-ந் தேதி தொடங்கிய இந்த விண்ணப்ப பதிவில் நேற்று வரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 898 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

    • ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய் என நிர்ணயம்.
    • விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 24ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் நாளை முதல் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய், பதிவு கட்டணம்- 2 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வாயிலாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×