என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு கலை கல்லூரிகளில் சேர 1.21 லட்சம் பேர் விண்ணப்பம்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7- ந் தேதி தொடங்கியது.
- விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7- ந் தேதி தொடங்கியது. 176 கல்லூரிகளில் 159 பிரிவுகளில் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களுக்கு மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 119 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந்தேதி ஆகும்.
இதேபோல் என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் படுஜோராக நடந்து வருகிறது. கடந்த 7-ந் தேதி தொடங்கிய இந்த விண்ணப்ப பதிவில் நேற்று வரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 898 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
Next Story






