உடுமலை சைனிக் பள்ளி மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு - ஜனவரி மாதம் நடக்கிறது

அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

உடுமலை: 

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

இந்தியா முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வு 2023 ஜனவரி 8ந் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைனில் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி நவம்பா் 30ந் தேதி ஆகும். வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் மேலும் முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com