search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு 2.11 லட்சம் பேர் விண்ணப்பம்- சான்றிதழ் பதிவேற்றத்துக்கு இன்று கடைசிநாள்
    X

    என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு 2.11 லட்சம் பேர் விண்ணப்பம்- சான்றிதழ் பதிவேற்றத்துக்கு இன்று கடைசிநாள்

    • தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பி.இ. படிப்புகளில் சேர 2.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாளாகும்.
    • பி.இ. படிக்க கடந்த 4 ஆண்டுகளைவிட நிகழாண்டு விண்ணப்ப பதிவு அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 20-ந்தேதி தொடங்கியது. சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமானதால் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவை முடிக்காமல் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

    சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு கடந்த 22-ந்தேதி வெளியானது. இதையடுத்து கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. பொறியியல் படிப்புகளில் உள்ள 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்களுக்கு இதுவரை 2,11,905 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    கலை அறிவியல் கல்லூரிகளில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு இதுவரை 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 பேர் விண்ணப்பித்துள்ளனர். பி.இ., கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பப்பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே அறிவித்தபடி கடந்த புதன்கிழமை நிறைவடைந்து விட்டது.

    பி.இ. படிப்புக்கு மட்டும் வெள்ளிக்கிழமை மாலை வரை சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் பணம் செலுத்தலாம். 'நாட்டா' தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை பி.ஆர்க்., படிப்புக்கு தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். பி.இ. படிக்க கடந்த 4 ஆண்டுகளைவிட நிகழாண்டு விண்ணப்ப பதிவு அதிகரித்துள்ளது.

    Next Story
    ×