எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களை மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என அறிவிப்பு.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Published on

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

2025-2026 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 25.06.2025 இன்று முதல் நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, விண்ணப்பங்களை 29.06.2025 மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com