என் மலர்
நீங்கள் தேடியது "BSNL"
- அண்மையில் நாடு தழுவிய அளவில் BSNL நிறுவனத்தில்'4G' சேவை தொடங்கபட்டது.
- தீபாவளியொட்டி சிறப்பு சலுகை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் அண்மையில் நாடு தழுவிய அளவில் '4G' சேவையை தொடங்கியது.
இதனையடுத்து பலரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறினர். இந்நிலையில், தீபாவளியொட்டி சிறப்பு சலுகை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
அதன்படி ரூ.1 செலுத்தி புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கினால், தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால் ப்ளானை பெறலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் ஒரு மாதத்திற்கு இந்த ப்ளான் செல்லுபடியாகும் என்றும் நவம்பர் 15 வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொலைதொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளோம்.
- அதிவேக இணையத்தை இன்னும் சிறப்பாக அனுபவிக்க முடியும்.
இந்தியாவின் அரசு தொலைதொடர்பு நிறுவனமாக பி.எஸ்.என்.எல். உள்ளது. கடந்த மாத இறுதியில் நாடு முழுவதுமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இணையவசதியை பெறுவதற்கான 4ஜி சேவை அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த எட்டு மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து 4ஜி செல்போன் டவர்களும் 5ஜி-யாக மாற்றப்பட உள்ளது. இதுதொடர்பாக தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், "இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொலைதொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளோம். அதன்படி அடுத்த 6 முதல் 8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி செல்போன் டவர்கள் அனைத்தும் 5ஜி-யாக மாற்றப்படும். இதன்மூலம் அதிவேக இணையத்தை இன்னும் சிறப்பாக அனுபவிக்க முடியும்" என்றார்.
- பிஎஸ்என்எல் உடைய வெள்ளி விழா ஆண்டு ஆகும்.
- உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4ஜி சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் வெற்றிகரமாக இன்று முதல் நாடு தழுவிய அளவில் '4G' சேவையை தொடங்கி உள்ளது.
இது பிஎஸ்என்எல் உடைய வெள்ளி விழா ஆண்டு (25 வருடங்கள் நிறைவு) ஆகும்.
ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு 30,000 கிராமங்களில் புதிதாக 97,500 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு வந்தன.
டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து 5வதாக உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
இன்று (செப்டம்பர் 27) பிரதமர் மோடி, ஒடிசாவில் பல்வேறு திட்டங்களுடன் சுதேசி '4G' சேவையையும் காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு '4G' சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.
பிஎஸ்என்எல் வாயிலாக இந்தியா உலகளாவிய தொலைதொடர்பு உற்பத்தி மையமாக மாறும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மக்களை கவரும் விதமாக ரூ.225க்கு 30 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 2.25 ஜிபி '4G' டேட்டா திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தி உள்ளது.
- இதுவரை 254 புதிய 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன.
- மீதமுள்ள டவர்கள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுவப்படும்.
சென்னை:
இந்தியா முழுவதும் 4ஜி சேவை நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. ஒடிசாவில் பிரதமர் மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் மற்றும் சென்னை தொலை பேசி தலைமை பொது மேலாளர் எஸ்.பார்த்திபன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
டிஜிட்டல் பாரத் நிதியத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவைகள் வழங்கப்படும். தமிழகத்தில் 4ஜி சேவை வழங்க 620 கிராமங்கள் கண்டறியப்பட்டன. அதில் 222 கிராமங்களில் புதிய டவர்களும் மற்றும் 35 கிராமங்களில் உள்ள 2ஜி டவர்கள் மேம்படுத்தவும் மொத்தம் 289 கிராமங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் ஒத்துழைப்புடன் 188 வருவாய் கிராமங்களிலும் வனப்பகுதியில் உள்ள 21 கிராமங்களிலும் மொத்தம் 29 இடங்களில் 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 19 கிராமங்களில் உள்ள மொபைல் டவர்கள் 4ஜி சேவை வழங்க தரம் உயர்த்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நீலகிரி, சத்தியமங்கலம், கொல்லிமலை, ஏற்காடு, பச்சமலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, ஜருகுமலை, மார்த்தாண்டம் பில்லிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொலைதூர மலை கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து 4ஜி டவர் உள்ள இடங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மொபைல் சேவை வழங்குவதற்காக சூரிய ஒளி மின்சாரம், பேட்டரி பவர் பிளாண்ட் ஜெனரேட்டர் ஆகிய கருவிகள் நிறுவப்பட இருக்கிறது.
இதுவரை 254 புதிய 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள டவர்கள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுவப்படும்.
நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4ஜி கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் பி.எஸ்.என்.எல். விரைவான முன்னேற்றம் தன்னம்பிக்கை மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு சக்தி வாய்ந்த சான்றாக திகழ்கிறது.
இந்த நெட்வொர்க்கின் வேகம் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் பாதுகாப்பான அதிவேக நம்பகமான மொபைல் சேவையை வழங்குவதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேக்-இன் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி தளங்களை பி.எஸ்.என்.எல். நிறுவி வருகிறது.
- ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு நெட்வொர்க்கை 30 நாட்களுக்கு இலவசமாக சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக சோதித்து பார்க்க வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.1 விலையில் வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.
இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி.) தினமும் 2 ஜி.பி. அதிவேக டேட்டா கிடைக்கும். 100 எஸ்.எம்.எஸ். செய்யலாம். ஒரு பி.எஸ்.என்.எல். சிம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
"ஆத்ம நிர்பார் பாரத்" திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையின் மூலம் இந்தியா தனது சொந்த தொலைத்தொடர்பு கட்டமைப்பை உருவாக்கிய ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருப்பதில் பெருமை அடைகிறது.
பி.எஸ்.என்.எல். சுதந்திர தின திட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு நெட்வொர்க்கை 30 நாட்களுக்கு இலவசமாக சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
மேக்-இன் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி தளங்களை பி.எஸ்.என்.எல். நிறுவி வருகிறது. மேலும் இந்த முயற்சி பாதுகாப்பான, உயர்தர மற்றும் மலிவான மொபைல் இணைப்பின் மூலம் டிஜிட்டல் இந்தியாவிற்கு அதிகாரம் அளிக்கும் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.
பொதுமக்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது மேளா இடங்களுக்கு சென்று இந்த சுதந்திரதின திட்டத்தை பெறலாம் என்று தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். தெரிவித்து உள்ளது.
- 2024-2025 நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் 262 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்தது.
- 4ஆவது காலாண்டில் 280 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்தடுத்த காலாண்டில் நிகர லாபம் ஈட்டியதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டு ஜனவரி- மார்ச் காலாண்டில் (4ஆவது) 849 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருந்தது. இந்த நிலையில் தற்போது 2024-2025 நிதியாண்டியன் 4ஆவது காலாண்டில் 280 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.
2024-2025 நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் 262 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. அப்போது கடந்த 18 ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக லாபம் ஈட்டியிருந்தது. அதன்பின் தற்போது அடுத்தடுத்து காலாண்டில் லாபம் ஈட்டியுள்ளது.
- ஜூன் மாதம் 2024-ல் இருந்து 2025 பிப்ரவரி மாதம் வரை வாடிக்கையார்கள் எண்ணிக்கை 8.55 கோடியில் இருந்து 9.1 கோடியாக அதிகரிப்பு.
- 2023-24 அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் 1,262 கோடி ரூபாய் நஷ்டம்.
18 வருடத்திற்குப் பிறகு அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் 262 கோடி ரூபாய் நிகர லாபம் கண்டுள்ளது என மாநிலங்களவையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் ஜோதிராதித்யா சிந்தியா கூறியதாவது:-
18 வருடங்களுக்குப் பிறகு, பிஎஸ்என்எல் முதன்முறையாக அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் 262 கோடி ரூபாய் நிகர லாபம் என்ற சாதனையை எட்டியுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 18 வருடத்திற்குப் பிறகு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
2023-24 அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் 1,262 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியது. ஆனால் 2024-25 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 232 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இந்த காலாண்டின் செயல்பாடு லாபம் (operating profit) 1500 கோடி ரூபாய் ஆகும்.
ஜூன் மாதம் 2024-ல் இருந்து 2025 பிப்ரவரி மாதம் வரை வாடிக்கையார்கள் எண்ணிக்கை 8.55 கோடியில் இருந்து 9.1 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு ஏழு மாதங்களில் 55 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இணைந்துள்ளனர்.
இவ்வாறு ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
- நிறுவனங்கள், விநியோகஸ்தராக 3 வருட அனுபவம் கொண்டிருப்பதுமுக்கியம்.
- விருப்பமுள்ள நிறுவனங்கள், வரும் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்:
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., சேவைகளை விற்பனை செய்ய விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து கோவை வணிக பொது மேலாளர் பால்வண்ணன் கூறியுள்ளதாவது:-
திருப்பூர், கோவை வர்த்தக பகுதிகளில் சிம் கார்டு, ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் இதர பி.எஸ்.என்.எல்., சேவைகளை விற்பனை செய்வதற்கு, நேரடி விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.டெலிகாம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எப்.எம்.சி.ஜி., (FMCG) எனும் வேகமாக விற்கக் கூடிய, நுகர்வோர் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.நிறுவனங்கள், விநியோகஸ்தராக 3 வருட அனுபவம் கொண்டிருப்பதுமுக்கியம்.
விருப்பமுள்ள நிறுவனங்கள், வரும் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை, http://www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 89034 18128 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
- மத்திய அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இந்தியாவில் எப்போது 4ஜி சேவைகள் வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பிஎஸ்என்எல் தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளது.
பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் 4ஜி வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை கொண்டு 4ஜி சேவைகள் எப்போது வெளியிடப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிட பிஎஸ்என்எல் நிறுவனம் நீண்ட காலமாக போராடி வருகிறது.

எனினும், 4ஜி வெளியீட்டில் பிஎஸ்என்எல் ஏராளமான தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் எப்போது பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் சரியான வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை. எனினும், எப்போது 4ஜி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ட்விட்டர் பயனர் ஒருவர் பிஎஸ்என்எல் இந்தியா-வை ட்விட்டரில் டேக் செய்து பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். இவரது கேள்விக்கு பதில் அளித்த பிஎஸ்என்எல் இந்தியா, "சரியான தேதியை குறிப்பிடுவது கடினமான காரியம். இதற்கு தேவையான தொழில்நுட்ப உபரணங்கள் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் சேவைகள் துவங்கும் என எதிர்பார்க்கலாம்," என்று தெரிவித்து இருக்கிறது.
- பி.எஸ்.என்.எல். நிறுவனம் பேன்சி செல்போன் எண்களை மின்னணு ஏல முறையில் விற்பனை செய்ய உள்ளது.
- ஆர்வம் உள்ள வாடிக்கையாளர்கள் ஏலத்தில் பங்கேற்று பேன்சி எண்களை ஏலம் எடுக்கலாம்.
சென்னை:
பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பி.எஸ்.என்.எல். நிறுவனம் பேன்சி செல்போன் எண்களை மின்னணு ஏல முறையில் விற்பனை செய்ய உள்ளது. ஆர்வம் உள்ள வாடிக்கையாளர்கள் ஏலத்தில் பங்கேற்று பேன்சி எண்களை ஏலம் எடுக்கலாம்.
இதுதொடர்பான மேலும் விவரங்களை www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த ஏலம் நாளை மறுநாள் (7-ந்தேதி) முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிஎஸ்என்எல் நிறுவனம் பிராட்பேண்ட் சேவையில் புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- புது பிஎஸ்என்எல் பைபர் பிராட்பேண்ட் சலுகையின் முதல் மாத கட்டணத்தில் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 499 விலை பிராட்பேண்ட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இது பழைய பெயரில் கிடைக்கும் புது சலுகை ஆகும். ரூ. 499 சலுகை பிஎஸ்என்எல் பைபர் சேவையின் பேசிக் திட்டம் ஆகும். முன்னதாக இந்த சலுகை ரூ. 449 விலையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ. 449 பிஎஸ்என்எல் சலுகை அதே பலன்களுடன் வேறு பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய ரூ. 499 சலுகை தற்போது பிஎஸ்என்எல் பைபர் பேசிக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பழைய ரூ. 449 சலுகை பைபர் பேசிக் நியோ என அழைக்கப்படுகிறது. இரு சலுகைகளும் வழங்கப்படும் பலன்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம். ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 499 விலையில் பிராட்பேண்ட் சலுகையை வழங்கி வந்துள்ளது. எனினும், கடந்த சில காலமாக இந்த சலுகை நீக்கப்பட்டு இருந்தது.

தற்போது பிஎஸ்என்எல் ரூ. 499 சலுகையில் 40Mbps வேகத்தில் 3.3TB வரையிலான டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். இத்துடன் முதல் மாத கட்டணத்தில் 90 சதவீதம் தள்ளுபடி, அதிகபட்சம் ரூ. 500 வரை தள்ளுபடி பெறும் வசதி வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 449 பைபர் பேசிக் நியோ சலுகையில் முன்பை போன்றே 30Mbps வேகத்தில் மாதம் 3.3TB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். இரு சலுகைகள் தவிர பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 775 மற்றும் ரூ. 275 போன்ற சலுகைகளை விரைவில் நீக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு சலுகைகளும் சுதந்திர தினத்தை ஒட்டி விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டவை ஆகும்.
- இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
- ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் நாட்டின் முக்கிய பகுதிகளில் 5ஜி சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றன.
மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் 4ஜி தொழில்நுட்பம் ஐந்து முதல் ஏழு மாதங்களுக்குள் 5ஜி-க்கு அப்கிரேடு செய்யப்பட இருக்கிறது. நாடு முழுக்க பிஎஸ்என்எல் வைத்திருக்கும் 1 லட்சத்து 35 ஆயிரம் டெலிகாம் டவர்களிலும் இதே போன்ற அப்கிரேடு செய்யப்பட இருப்பதாக மத்திய டெலிகாம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார்.
தற்சார்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் டெலிகாம் துறை வளர்ச்சி நிதியை ஆண்டிற்கு ரூ. 500 கோடியில் இருந்து ரூ. 4 ஆயிரம் கோடியாக உயரத்த அரசு திட்டமிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். கோடக் வங்கி தலைமை செயல் அதிகாரி உதய் கோடக், இந்திய டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் பங்கு குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் பதில் அளித்து இருந்தார்.

அதில் பிஎஸ்என்எல் இந்திய டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் உறுதியான நிறுவனமாக மாறழும் என தெரிவித்தார். இதோடு நாடு முழுக்க பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் கிராமபுறங்களில் 1 லட்சத்து 35 ஆயிரம் மொபைல் டவர்களை வைத்திருக்கிறது. இந்த பகுதிகளில் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் முழுமையாக களமிறங்காத நிலையே தொடர்ந்து நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
"டெலிகாம் தொழில்நுட்ப ஸ்டாக் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இது 4ஜி தொழில்நுட்ப ஸ்டாக் ஆகும். அடுத்த ஐந்து முதல் ஆறு மாத காலத்திற்குள் இவை 5ஜி-க்கு அப்கிரேடு செய்யப்பட இருக்கிறது. நாடு முழுக்க உள்ள 1 லட்சத்து 35 ஆயிரம் டெலிகாம் டவர்களிலும் தொழில்நுட்ப ஸ்டாக் வெளியிடப்படும்," என அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.
5ஜி டெஸ்டிங் செய்வதற்கான உபகரணங்களை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ்-இடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவைகளை துவங்க முடியும்.






