என் மலர்tooltip icon

    இந்தியா

    லாபகரமான பாதையில் பிஎஸ்என்எல்: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்
    X

    லாபகரமான பாதையில் பிஎஸ்என்எல்: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

    • ஜூன் மாதம் 2024-ல் இருந்து 2025 பிப்ரவரி மாதம் வரை வாடிக்கையார்கள் எண்ணிக்கை 8.55 கோடியில் இருந்து 9.1 கோடியாக அதிகரிப்பு.
    • 2023-24 அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் 1,262 கோடி ரூபாய் நஷ்டம்.

    18 வருடத்திற்குப் பிறகு அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் 262 கோடி ரூபாய் நிகர லாபம் கண்டுள்ளது என மாநிலங்களவையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மாநிலங்களவையில் ஜோதிராதித்யா சிந்தியா கூறியதாவது:-

    18 வருடங்களுக்குப் பிறகு, பிஎஸ்என்எல் முதன்முறையாக அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் 262 கோடி ரூபாய் நிகர லாபம் என்ற சாதனையை எட்டியுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 18 வருடத்திற்குப் பிறகு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

    2023-24 அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் 1,262 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியது. ஆனால் 2024-25 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 232 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இந்த காலாண்டின் செயல்பாடு லாபம் (operating profit) 1500 கோடி ரூபாய் ஆகும்.

    ஜூன் மாதம் 2024-ல் இருந்து 2025 பிப்ரவரி மாதம் வரை வாடிக்கையார்கள் எண்ணிக்கை 8.55 கோடியில் இருந்து 9.1 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு ஏழு மாதங்களில் 55 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இணைந்துள்ளனர்.

    இவ்வாறு ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×