பி.எஸ்.என்.எல். சிம்கார்டு விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்

நிறுவனங்கள், விநியோகஸ்தராக 3 வருட அனுபவம் கொண்டிருப்பதுமுக்கியம். விருப்பமுள்ள நிறுவனங்கள், வரும் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., சேவைகளை விற்பனை செய்ய விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து கோவை வணிக பொது மேலாளர் பால்வண்ணன் கூறியுள்ளதாவது:-

திருப்பூர், கோவை வர்த்தக பகுதிகளில் சிம் கார்டு, ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் இதர பி.எஸ்.என்.எல்., சேவைகளை விற்பனை செய்வதற்கு, நேரடி விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.டெலிகாம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எப்.எம்.சி.ஜி., (FMCG) எனும் வேகமாக விற்கக் கூடிய, நுகர்வோர் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.நிறுவனங்கள், விநியோகஸ்தராக 3 வருட அனுபவம் கொண்டிருப்பதுமுக்கியம்.

விருப்பமுள்ள நிறுவனங்கள், வரும் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை, http://www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 89034 18128 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com