search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4G Data"

    இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கிய நிறுவனம் மற்றும் முன்னணி நிறுவனங்களின் டேட்டா வேகம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் 4ஜி டேட்டா வேகம் மற்றும் அதிவேக டவுன்லோடு வழங்கிய நிறுவனங்களின் சுவாரஸ்ய தகவல்களை ஓபன்சிக்னல் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

    ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஒட்டுமொத்த டவுன்லோடு வேகம், குறிப்பிட்ட டெலிகாம் நிறுவனத்தின் சராசரி 4ஜி வேகம், 3ஜி வேகம், வெவ்வேறு நெட்வொர்க்களில் சிக்னல் பரப்பளவு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

    கடந்த மூன்று மாதங்களில் நிறுவனங்கள் வழங்கிய சேவைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், ஏர்டெல், ஐடியா, ஜியோ மற்றும் வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஒட்டுமொத்த டேட்டா வேகத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

    அதன்படி செப்டம்பர் 2017 முதல் டவுன்லோடு வேகங்கள் தொடர்ந்து அதிகரித்து இருப்பதோடு ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் சேவை சீராக இருந்ததாக ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் எல்டிஇ நெட்வொர்க் பரப்பளவை அதிகரித்து வருகின்றன, ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களின் டேட்டா வேகம் அதிகரித்த நிலையில், வாடிக்கையாளர்கள் வேகமான எல்டிஇ வசதியை பயன்படுத்த முடிந்தது.

    மே 2017 - பிப்ரவரி 2018 வரையிலான காலக்கட்டத்தில் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் அதிகபட்சம் 1MBPS வரை தங்களது டேட்டா வேகத்தை அதிகரித்து இருக்கின்றன. இது ஒட்டுமொத்த டேட்டா வேகம் டிசம்பர் மாத வாக்கில் ஏர்டெல் நிறுவனத்தை முதலிடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. ஏற்கனவே முதலிடத்தில் இருந்த ஜியோ இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

    ரிலையன்ஸ் ஜியோவை பொருத்த வரை பயனர்களால் முன்பை விட 96% வரை சீரான எல்டிஇ சிக்னல்களை பெற முடிந்தது. எனினும் ஜியோவின் 4ஜி வேகம் டேட்டா கொள்ளளவு பிரச்சனைகளால் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மே, ஜூன் மற்றும் ஜூலை மாத வாக்கில் ஜியோ டேட்டா வேகம் அதிகரித்து, முதலிடத்தில் இருந்தது.

    வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகளவு டேட்டா பயன்படுத்த துவங்கியிருப்பதால் ஜியோவின் ஒட்டுமொத்த டேட்டா வேகம் குறைய ஆரம்பித்துள்ளது. டேட்டா வேகம் தொடர்ந்து குறைந்ததால் ஜியோ டேட்டா வேகம் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
    ×