என் மலர்
நீங்கள் தேடியது "முன்னாள் அமைச்சர்"
- விண்ணப்பங்களை கொடுக்காமலேயே தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர்.
- விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 50 சதவீதம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நிறைய வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார்.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் இதுவரை 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவத்தை வழங்குவோம் என்று கூறினார்கள், மூன்று முறை வீட்டு கதவை தட்டுவோம் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சரியான பயிற்சி இல்லை. இதன் காரணமாக வாக்காளர்களுக்குரிய விண்ணப்பபடிவங்கள் அவர்களை சென்று சேரவில்லை. மேலும், விண்ணப்ப படிவங்களை பெற்றவர்கள் குறைந்த அளவிலேயே, அதாவது 40 சதவீதத்திற்கு உள்ளேயே தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். இந்த நிலையில் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுக்குரிய வாக்காளர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விண்ணப்பங்களை கொடுக்காமலேயே இப்படி தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் பெரிய மோசடி நடந்துள்ளதாக கருதுகிறோம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம்.
ஆனால் கலெக்டர் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம் அப்படி ஏதாவது விடுபட்டவர்கள் இருந்தால் அடுத்த மாதம் 4-ந்தேதிக்கு மேல் அதற்குரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்கிறார். அது எப்படி முடியும் அது முடிகிற காரியமா? எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆளும் கட்சியான தி.மு.க. இந்த வாக்காளர் விண்ணப்ப படிவத்தை அதிகளவில் பெற்றுள்ளனர். அவர்களுடைய தலைவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். அப்போது அந்த நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொடுத்து வருகிறோம் என்று கூறுகிறார். அப்படி என்றால் அந்த விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
எனவே தேர்தல் அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு அனைத்து வாக்காளர்களிடம் அவர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற முடியும். இல்லாவிட்டால் அதில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனையும் மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிதிஷ் குமார் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
- மோடி அமைச்சரவையில் மத்திய மின்சார துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
பீகார் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டு பாஜகவின் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி பெரு வெற்றி பெற்றது.
இந்நிலையில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பீகாரைச் சேர்ந்த மூத்த தலைவருமான ஆர்.கே.சிங் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமை மற்றும் பீகாரில் நிதிஷ் குமார் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆர்.கே.சிங் செய்திகளில் இடம் பெற்று வருகிறார்.
இந்தச் சூழலில் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி பாஜக உயர்மட்ட குழு அவரை இடைநீக்கம் செய்துள்ளது.
முன்னதாக 2,400 மெகாவாட் பாகல்பூர் மின் திட்டத்தை அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துக்கு பிகார் அரசு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ரூ. 60,000 கோடி முதல் ரூ. 62,000 கோடி ஊழல் நடந்ததாக ஆர்.கே.சிங் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் பீகார் தேர்தலில் குற்றப்பிண்ணனி கொண்ட தலைவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று ஜனதா தளத்தின் ஆனந்த் சிங் மற்றும் பிகார் துணை முதல்வரான பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பதிவு வெளியிட்டிருந்தார்.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தூதராகவும், மத்திய உள்துறை செயலாளராகவும் பணியாற்றிய ஆர்.கே.சிங், 2013 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பீகாரில் உள்ள அவுரா தொகுதியில் இருந்து மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றார்.
2017 ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில் மத்திய மின்சார துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.
- ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் ராஜா கைது செய்யப்பட்டார்.
- ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டு கவுன்சிலராகவும் எதிர்கட்சி தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
- நான் என்னுடய X வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன்.
ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் என்றும் வணங்குபவன் அவர்களின் தியாகத்தை வணங்குபவன் .
என்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க.வின் பேரணி குறித்து கேட்டபோது அது நாடகம் அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகம் போடுகிறார்கள் என்று சொல்லியதை தி.மு.க தொலைக்காட்சிகள் என்னுடைய பேச்சை திரித்து போட்டுவிட்டார்கள் .
நான் என்னுடய எக்ஸ் வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன்.
ஆனாலும் இராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்கு மேயானால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய குடும்பம் முன்னால் இன்னால் இராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!!!!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
- பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகள்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்," பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது.
பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்" என்றார்.
இந்நிலையில், சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேசுயுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் எனது தலைமையில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளனர்" என்றார்.
- பயங்கரவாதத்துடனான தொடர்பின் காரணமாகவே பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு.
பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், சமீபத்தில் அளித்த பேட்டியில் பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருந்தது என்றும், நிதி உதவி அளித்ததையும் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சரும், பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாகிஸ்தான் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது என்பதில் ரகசியம் எதுவும் கிடையாது. அந்த தொடர்பின் காரணமாகவே பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அப்படி பாதிக்கப்பட்டதால் நாங்கள் பாடங்களை கற்றுக் கொண்டோம். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண சீர்திருத்தமும் செய்தோம். பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து ரத்து.
- அமைச்சர் ஜெயக்குமார் கைதின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவரது மகன் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றதத்தில் நீதிபதிகள் முன் நடைபெற்றது.
அப்போது, காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்போது, "காவல்துறைக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்காமல் முடித்து வைத்தது தவறு" என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.
- நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன் என்றார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.
இந்நிலையில் விஜய்யின் உரைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை பதிலடி கொடுத்துள்ளார்.
அப்போது அவர்," திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே போட்டி என்பது விஜயின் பேராசை" என்றார்.
- மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இல்ல திருமண வரவேற்பில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
- முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் பொன்னா டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன்.இவர் அ.திமு.க. மாவட்ட பேரவை துணைச் செயலாள ராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவரது மகள் ஹரிப்பிரியாவுக்கும், மணமகன் ஜெயக்கு மாருக்கும் கடந்த பிப்ரவரி 12-ந் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து தனது சொந்த கிராமத்தில் பிப்ரவரி 26-ந் தேதி நடந்த வரவேற்பு விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச் சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் நடந்ததால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி குன்னத்தூரில் உள்ள ஓ.வி.எம். கார்டனில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பந்தலில் மாவட்ட குழு சேர்மன் முன்னிலையில் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, பாஸ்கரன், விஜய பாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள் உறுப்பி னர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மண மக்களை வாழ்த்திய எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.
- மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் கள்ளிக்குடியில் நடந்தது.
- இந்த முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார்.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், கள்ளிக்குடியில், அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் கள்ளிக்குடியில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கடந்த 2ஆண்டுகளில் தி.மு.க. மக்களுக்காக எந்த திட்டங்களிலும் கவனம் செலுத்தவில்லை. தற்போது 90 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் 2கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று கூறினீர்களே? அதை செய்யவில்லை.
திருமங்கலம் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ. வேலு பச்சை பொய் கூறியுள்ளார். திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் அமைக்க தி.மு.க. மாவட்ட செயலாளர் கோரிக்கை வித்துள்ளார். அந்த பணிகள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த ெரயில்வே மேம்பாலம் பணிக்காக ஜெயலலிதா 110விதியின் கீழ் திட்டத்தை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து ெரயில்வே துறையிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்த பின்பு, எடப்பாடி பழனிசாமி 5.2.2021 அன்று அரசாணை எண் 24-யை வெளியிட்டு, ரூ. 17கோடியே 10லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, 2 ஆண்டுகளாக இந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.
தற்போது மாவட்ட செயலாளர் தான் கேட்டார் என்று முழு பூசணிக்காயை சோற்றில் அமைச்சர் மறைக்கிறார். மக்கள் இதை நம்ப தயாராக இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
- எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
திருப்பூர் :
அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் காங்கயம் சட்டமன்ற தொகுதி, திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் காங்கயம், திருப்பூர் அங்கேரிப்பாளையம், திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். திருப்பூரில் நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கொங்கு மண்டல பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசியதாவது: அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களைத்தான், தற்போது தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது கடும் அதி–ருப்–தி–யில் உள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கள்ளச்சாராயம் குடித்து பலியாகி வருகிறார்கள். இதுதான் திராவிட மாடல் அரசு. இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர்.
வருகிற நாடாளுமன்ற தொகுதியில் திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி தொகுதி மட்டுமல்ல 40 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும். வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்-அமைச்சராவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, சு.குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன்,மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் திருப்பதி, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி, திருப்பூர் மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, இணை செயலாளர் விவேகானந்தன், வக்கீல் அணி செயலாளர் முருகேசன், இணை செயலாளர் பா.சு.மணிவண்ணன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், காங்கயம் நகர செயலாளர் வெங்கு மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- மாநகர நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கட்சியினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர்,
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வருகிற 20-ஆம் தேதி எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், மதுரை மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக, முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி, கட்சி தொண்டர்களுடன், ஆட்டோக்களில் மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர் மற்றும் பேனர்களை ஒட்டினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஊக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர். வாசுதேவன், ராஜி, மஞ்சுநாத், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கட்சியினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






