search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை - முன்னாள் அமைச்சர் பேச்சு
    X

    திருப்பூர் அங்கேரிப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய காட்சி.  

    மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை - முன்னாள் அமைச்சர் பேச்சு

    • மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
    • எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் காங்கயம் சட்டமன்ற தொகுதி, திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் காங்கயம், திருப்பூர் அங்கேரிப்பாளையம், திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். திருப்பூரில் நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கொங்கு மண்டல பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசியதாவது: அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களைத்தான், தற்போது தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது கடும் அதி–ருப்–தி–யில் உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கள்ளச்சாராயம் குடித்து பலியாகி வருகிறார்கள். இதுதான் திராவிட மாடல் அரசு. இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர்.

    வருகிற நாடாளுமன்ற தொகுதியில் திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி தொகுதி மட்டுமல்ல 40 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும். வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்-அமைச்சராவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, சு.குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன்,மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் திருப்பதி, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி, திருப்பூர் மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, இணை செயலாளர் விவேகானந்தன், வக்கீல் அணி செயலாளர் முருகேசன், இணை செயலாளர் பா.சு.மணிவண்ணன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், காங்கயம் நகர செயலாளர் வெங்கு மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×