என் மலர்
நீங்கள் தேடியது "மக்கள்"
- இது கனடாவின் யதார்த்தம். நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால் கனடாவுக்கு வாருங்கள்.
- இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும் என வீடியோவில் தெரிவித்துள்ளார்.
ஒட்டாவா:
கனடாவில் சாதாரண வேலைக்கு கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் வீடியோவை அங்குள்ள இந்திய பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோ கனடாவில் வேலை நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையை எடுத்துக்காட்டுகிறது. அந்த வீடியோவில் அந்தப் பெண் கூறியிருப்பதாவது:
வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். ஆனால் சில நேரங்களில் அது இப்படி வெறும் நீண்ட வரிசையாகக்கூட இருக்கும்.
இது சர்வதேச மாணவர்களிடையே வேலைவாய்ப்புக்கான கடுமையான போட்டியை எடுத்துக்காட்டுகிறது. வெளிநாடுகள் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் சிறந்த வாழ்க்கை முறையையும் உத்தரவாதம் அளிக்கின்றன என்று இந்தியர் பலர் பொதுவான நினைக்கிறார்கள்.
இங்குள்ள நிலைமையை பார்த்தால் உங்களுக்கே புரியும், வெளிநாடு சென்றுள்ளவர்கள் வேலைக்கு எப்படி காத்திருக்கிறார்கள் என்று தெரியும்.
இது கனடாவின் யதார்த்தம். நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால், கனடாவுக்கு வாருங்கள் ,இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும் என தெரிவித்துள்ளார்.
கனடாவின் பல நகரங்களிலும் இதே நிலைமை இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
- பலத்த சூறாவளி வீசியதால் 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.
- உடல் எடை 50 கிலோவுக்கு குறைவான நபர்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
பீஜிங்:
சீன தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாளாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.
இதையடுத்து, பீஜிங்கில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. ரெயில், பஸ் சேவை பாதிக்கப்பட்டன.
பீஜிங்கில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. வாகனங்கள், கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் துாக்கி வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.
உடல் எடை 50 கிலோவுக்கும் குறைவான நபர்கள் சூறாவளி காற்றால் தூக்கி வீசப்படக் கூடும் என்பதால் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியது.
- குடிநீர் கிடைக்காமல் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
- மக்கள் கட்டணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குடகு:
குடகு மாவட்டம் குஷால்நகர் டவுன் பகுதியில் கடும் குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. மழை பெய்யாததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக குஷால்நகர் டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் கிடைக்காமல் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் குஷால்நகர் டவுன் பஞ்சாயத்து சார்பில் டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி குஷால்நகர் பகுதி மக்களுக்கு டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மக்கள் கட்டணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள மக்கள், குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருவதாகவும், குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
- கலெக்டர் அரவிந்த் பேச்சு
- மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்தது
நாகர்கோவில்:
குழித்துறை நகராட்சிக்கு ட்பட்ட பம்மம் பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி இன்று நடைபெற்றது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்ததாவது:-
தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனம ழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க ப்பட்டதை நேரில் பார்வையிட்டது.
இன்னுயிர் காப்போம்,– நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம்,
காணி பழங்குடியினர்க ளுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது,
முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது, காலை உணவுத்திட்டம்,
புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்க ப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாய்க்காலில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
- போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்
கரூர்:
கரூரில் இருந்து கோவை மற்றும் ஈரோடு செல்லும் சாலையில் திருக்காம் மியூர் பிரதான வாய்க்கால் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. இதில் அதிகளவு கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவு நீர் தேக்கத்தால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் பல்வேறு தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
- மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது.
- பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக அமைந்துள்ள மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் மணிக்கூண்டு மற்றும் பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.
ஆய்வின் போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- ஏற்காட்டில் கடந்த 2 தினங்களாக இடைவிடாத சாரல் மழையும், கடுமையான பனிப் பொழிவும் நிலவி வருகிறது.
- இந்த சாரல் மழை காரணமாக காப்பி பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஏற்காடு:
வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் நிலையில் ஏற்காட்டில் கடந்த 2 தினங்களாக இடைவிடாத சாரல் மழையும், கடுமையான பனிப் பொழிவும் நிலவி வருகிறது.
ஏற்காட்டில் அதிகப்படி யாக காப்பி விவசாயம் செய்யப்படுகிறது. இந்த சாரல் மழை காரணமாக காப்பி பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் காப்பி விவ சாயிகள் வேத னையடைந்து உள்ளனர். மேலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் காப்பி தோட்ட பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுவதால், முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்கள் இயக்கப்படுகிறது.
மேலும் கடுமையான குளிரும் காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் கூட ஸ்வட்டர், ஜர்க்கின் உள்ளிட்டவை அணியாமல் வெளியில் வரமுடியாது நிலை உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடர் மழையால், இப்பகுதியில் ஏராளமானோர் சளி, காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஏற்காட்டில் இடைவிடாத சாரல் மழை, கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- கடன் நிலுவை வசூல் என்ற பேரில் மிரட்டி அதிரடி வசூல்.
- வீடுகளை பூட்டி மழைக்காலத்தில் மக்களுக்கு இழைக்கும் அராஜகம்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பைனான்ஸ்
நிறுவனங்களால் நடக்கக்கூடிய ஒரு சில நிறுவனங்கள் கடன் நிலுவை வசூல் என்ற அடிப்படையில் மிரட்டி அதிரடி வசூலில் ஈடுபடுகின்றனர்.
இதனால் ஏழைமற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தை குறிவைத்து கோர்ட் உத்தரவுகளை பெற்று வீடுகளை பூட்டி மழைக்கா லத்தில் மக்களுக்கு இழைக்கும் அராஜக போக்கை கண்டித்து ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஏ.எம்.மோகன் தலைமையில் ஒத்தக்கடை என்ற பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத அறப்போ ராட்டத்தை தொட ங்கினார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.
- ஆற்றில் இணைப்பு எற்படுத்தி அடைப்புகளை சரிசெய்து மழை நீரை வடிகட்டினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஒன்றியம், பட்டமங்கலம் ஊராட்சி, சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் மழைநீர் சூழ்ந்து கொண்டது.
இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இதையடுத்து தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி பொக்லைன் கொண்டு தண்ணீரை பள்ளவன் ஆற்றில் இணைப்பு எற்படுத்தி அடைப்புகளை சரிசெய்து மழை நீரை வடிகட்டினார்.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், கிராம அலுவலர் நெப்போலியன், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மழை நீரை வடிகட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்
- தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்தாலும்
திருச்சி:
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். எவ்வளவு மழை பெய்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது.
சென்னையில் இரண்டு இடங்களில் மட்டுமே பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதுவும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கால்வாய்கள் வெட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் நடவுப் பணிகள் முடியும் தருவாயில் யூரியா தட்டுப்பாடு இருப்பதாக சொன்னார்கள்.
இது தொடர்பாக துறை அமைச்சரிடம் பேசி இருக்கின்றேன். விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு கடன் தர கூட்டுறவுத்துறை அமைச்சரிடமும் பேசி இருக்கின்றேன். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சம்மட்டி வைத்து அடித்து விட்டதால் காவிரி பாலத்தின் பேரிங் உட்கார்ந்து விட்டது.
அதனை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த மாதிரியான தொழில்நுட்ப பணிகளை வேகமாக முன்னெடுக்க இயலாது. அதனால் தான் தாமதம் ஏற்படுகிறது. இன்னும் இரண்டு மாத காலத்தில் காவிரி பாலத்தில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி அடிப்படை பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் எடுப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதற்கு எதிர்ப்புகள் வந்துள்ளதால் பழைய முறைப்படி பணி நியமனம் செய்ய தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார் அவர் கூறினார்.
- மகா ப்ரத்யங்கிரா ஹோமம் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
- 12 ராசி 27 நட்சத்திர ஹோமம் நடக்கிறது.
தாராபுரம் :
ஆல் இந்தியா தமிழ் அன்னை அறக்கட்டளை சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் நஞ்சியம்பாளையம் கிராமத்தில் உலக மக்கள் நலன் வேண்டியும் அனைத்து ஜீவராசிகளின் நலம் வேண்டியும் மகா அதர்வண பத்ரகாளி, மகா ப்ரத்யங்கிரா ஹோமம் நாளை 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
இதையொட்டி நாளை 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6மணிக்கு மங்கள இசை, மகா கணபதி பூஜை, அனுக்ஞை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், வாஞ்சாகல்ப மகா கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை , கோ பூஜை நடக்கிறது. காலை 10-30மணிக்கு மகா ப்ரத்யங்கிரா ஹோமம், சூலினி துர்கா ஹோமம், 12 ராசி 27 நட்சத்திர ஹோமம் நடக்கிறது.
மாலை 5மணிக்கு சதுஷ்டி யோகினி பலி பூஜை, பைரவ பலி, சரபேஷ்வர ஹோமம், 27 நட்சத்திர ஹோமம், 12 ராசி ேஹாமம், மகா சனீஸ்வர ஹோமம், மகா ப்ரத்யங்கிரா ஹோமம், ஆயுள் தேவதா ஹோமம், சித்ரகுப்த ஹோமம், சூலினி துர்காஹோமம், இரவு 9மணிக்கு மகா பூர்ணாஹூதி , தீபாராதனை நடக்கிறது.
22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7மணிக்கு கணபதி பூஜை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், கோபூஜை , காலை 10மணிக்கு காரிய சித்தி கணபதி ஹோமம், மகா ப்ரத்யங்கிரா ஹோமம், சூலினி துர்கா ஹோமம், மகா சனீஸ்வர ேஹாமம், ஆயுள் தேவதா ஹோமம், யமதர்மராஜா ஹோமம், சித்ர குப்த ஹோமம், 12ராசி 27 நட்சத்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
மாலை 5மணிக்கு ஸ்ரீகணபதி பூஜை, புண்யாஹவாசனம், வேதிகா அர்ச்சனை, கணபதி ஹோமம், மகா ப்ரத்யங்கிரா ஹோமம், சூலினி துர்கா ஹோமம், மகா சனீஸ்வர ஹோமம், ஆயுள் தேவதா ஹோமம், எமதர்மராஜா ஹோமம், சித்ரகுப்த ஹோமம், சரபேஸ்வர ஹோமம், 12 ராசி, 27 நட்சத்திரங்கள் ஹோமம் நடக்கிறது. இரவு 9மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
23-ந்தேதி (புதன்கிழமை) காலை 6மணிக்கு மங்கள இசை, 7மணிக்கு கணபதி பூஜை, வருண பூஜை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், கோ பூஜை , வேதிகா அர்ச்சனை நடக்கிறது. 10மணிக்கு சங்கடஹர மகா கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், 12 ராசி 27 நட்சத்திரங்கள் ஹோமம், அஷ்ட பைரவ ஹோமம், மகா ப்ரத்யங்கிரா ஹோமம், சரபேஸ்வர ஹோமம், சூலினி துர்கா ஹோமம், மகா சனீஸ்வர ஹோமம், எமதர்மராஜ ஹோமம், சித்ரகுப்த ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், சுதர்சன ஹோமம், குபேர மகாலட்சுமி ஹோமம், வஸோர்தாரா ஹோமம், இரவு 9மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
- 68 மனுக்கள் வரப்பெற்றதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
- உதவித்தொகையான மாதம் ரூ. 1000க்கான உத்தரவு நகலை வழங்கினார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தொங்குட்டி பாளையம் ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பிரியா நடராஜன் வரவேற்றார். பொங்கலூர் ஒன்றிய குழுத் தலைவர் வக்கீல் எஸ். குமார், துணைத் தலைவர் அபிராமி அசோகன், ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம்68 மனுக்கள் வரப்பெற்றதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதம் 42 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. நிகழ்ச்சியின் போது விபத்தில் காயம் அடைந்த தொங்குட்டி பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் (வயது 61) என்பவர் ஆட்டோவில் இருந்து இறங்கி வர முடியாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். இதனை அறிந்த சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் நேரடியாக ஆட்டோவின் அருகில் சென்று அவருக்கு விபத்து உதவித்தொகையான மாதம் ரூ. 1000க்கான உத்தரவு நகலை வழங்கினார். தொடர்ந்து அவர் முகாமில் கலந்து கொண்டு பேசும்போது, கல்வியின் அவசியம் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தெரிவிப்பதுடன் அவர்களை தினசரி கண்காணித்து ஊக்கப்படுத்த வேண்டும். குப்பை இல்லாத ஊராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த மக்கள் தொடர்பு முகாமில் ஒன்றிய கவுன்சிலர் பாலுசாமி, ஊராட்சி துணைத் தலைவர் பத்மா ஆனந்தன், பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், தனி தாசில்தார் (ஊட்டச்சத்து) கோவிந்தராஜ், (சமூக பாதுகாப்பு திட்டம்) பாபு, வருவாய் ஆய்வாளர் மா.கருணாநிதி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், ஊராட்சி செயலர் ஆனந்த் மற்றும் கால்நடை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






