என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் தட்டுப்பாடு"

    • கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பல இடங்களில் தற்போதே மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் மற்றும் பேரூராட்சி பகுதிக்கும் அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மழை போதிய அளவு பெய்யாத காரணத்தால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் முறையாக ஆங்காங்கே பழுது ஏற்படும் குழாய்களை சரி செய்யாததால் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்லும் சம்பவமும் நடந்து வருகிறது.

    இதனை சரி செய்வதற்கு அதிகாரிகளும், பணியாளர்களும் கடுமையாக முயன்றாலும் மற்றொரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இது போன்ற காரணங்களால் கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படும் பகுதிகளை ஆராய்ந்து அதனை சரி செய்ய ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். பல இடங்களில் தற்போதே மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி வருகின்றனர். பழுதடைந்த சாலைகளில் குழாய் உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வீணாவதோடு சாலைகளும் சேதமடைகிறது. மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முறையான ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 5 ஊராட்சிகளில் உள்ள 1866 குடியிருப்புகளுக்கு தினசரி வடிவமைக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • 1766 குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க இயலாது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1766 குடியிருப்புகளுக்கு நாளை (9ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஓசூர் திட்ட பராமரிப்பு கோட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திட்டப் பராமரிப்பு கோட்டம் ஓசூரின் கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மற்றும் புளோரோஸிஸ் பாதிப்பு குறைப்பு திட்டம் மூலமாக ஓசூர் மாநராட்சி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, கெலமங்கலம் பேரூராட்சி, கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகள், தளி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகள், ஓசூர் ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகள், சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகள், வேப்பனபள்ளி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகள், தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள 5 ஊராட்சிகளில் உள்ள 1866 குடியிருப்புகளுக்கு தினசரி வடிவமைக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 844 சாலையில், கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை அருகே சாலை பணியின் போது புதியதாக பதிக்கப்பட்ட 850 எம்.எல்.ஏ., குடிநீர் குழாய்கள் ஏற்கனவே குடிநீழ் வழங்கும் குழாயில் ஒன்றோடு ஒன்று இணைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் வருகிற 9ம் தேதி (நாளை) முதல் வருகிற 11ம் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டும் ஓசூர் மாநகராட்சி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சிகள், கெலமங்கலம், தளி, ஓசூர், சூளகிரி, வேப்பனபள்ளி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 1766 குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க இயலாது.

    எனவே, மேற்கண்ட பகுதிகளில் இம்மூன்று நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்தி கொள்ளவும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் தமிழ்நாடு குடிநீழ் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • வைகை அணைக்கு செல்லும் தண்ணீர் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
    • கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கிராமங்களில் நீரின் தேவை இருமடங்காக உயரும்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல வைகை ஆற்றை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து வைகை அணைக்கு செல்லும் தண்ணீர் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால், வைகை ஆற்றில் நீர்வரத்து மிகக் குறைந்து காணப்படுகிறது. விரைவில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், ஆறு முழுமையாக வறண்டு போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கிராமங்களில் நீரின் தேவை இருமடங்காக உயரும். அதே சமயம் வெயில் தாக்கம் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உறைகிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறையும் என்பதால் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.

    எனவே அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் கிராமங்களில் சேதம் அடைந்து குடிநீர் வீணாகி வரும் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 45.60 அடியாக உள்ளது. அணைக்க 277 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை சேடப்பட்டி, திருமங்கலம் குடிநீருக்காக 69 கன அடி மற்றும் பாசனத்துக்காக 300 கன அடி என மொத்தம் 369 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1468 மி.கன அடியாக உள்ளது.

    • காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும்.
    • முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித் துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை முத்திரைப்பாளையம் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு இந்திரா நகர் அரசு ஆரம்ப பள்ளி அருகில் பூத்துறை ரோட்டில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை பொதுப் பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித் துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.

    புதுவை, வில்லியனூர் குடிநீர் பிரிவு, நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மடுகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
    • மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித் துறை சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வில்லியனூர் குடிநீர் பிரிவு மடுகரை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிமுதல் 2 மணிவரை மடுகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப் பணித்துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

    புதுவை எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை ராகவேந்திரா நகர், மாரியம்மன் நகர், பூமியான்பேட்டை, கோடிசாமி நகர், நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 76, 77, 85, 89 ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
    • லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி மேலக்கால் மெயின் ரோடு ராஜா கார்டன் பகுதியில் உள்ள குடிநீர் வால்வு, ஹெச்.எம்.எஸ்.காலனி மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் பணிகள், டி.பி.மெயின் ரோடு பகுதியில் குடிநீர் குழாய்கள் மற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மற்றும் நாளை மறுநாள் (26, 27) ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    வைகை தென்கரை மற்றும் வடகரை பகுதிகளான வார்டு எண். 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 மற்றும் 76, 77, 85, 89 ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும், மேலும் அத்தியாவசியமான வார்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாவில் துளசாபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சாக்கை, துளசாபுரம், மகாராஜபுரம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இங்கு 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இங்குள்ள மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து துளசாபுரம் சட்ரஸ் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டாக போதிய அளவு குடிநீர் வராததால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

    குறைவான அளவே குழாய்களில் குடிநீர் வருவதால் பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது.

    அதுவும் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் இங்குள்ள குழாய்களில் இருந்துதான் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

    இதனால் அவர்களால் பள்ளி, கல்லூரிக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியவில்லை.

    அவர்கள் வீட்டிற்கும், நீர்த்தேக்க தொட்டி இருக்கும் இடத்திற்கும் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் அவர்கள் அவதியடைகின்றனர். மேலும் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை.

    எனவே தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கக்கேரியும், வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதற்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை திடீரென துளசாபுரம் சட்ரஸ் அருகே பொதுமக்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கரியாபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உடனடியாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
    • போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த நாகமரை மேல்காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வருவதில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 50-க்கும் மேற்பட்டோர் நாகமரை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த ஏரியூர் போலீஸ் சப்-இன்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
    • உழவர்கரை, பசும்பொன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை எம்.ஜி.ஆர். நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இதனால் நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணி வரையில், மூலக்குளம், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ஜான்குமார் நகர், தட்சணாமூர்த்தி நகர், பாலாஜி நகர், அண்ணா வீதி, ஜெயாநகர், ரெட்டியார்பாளையம்,

    புதுநகர், வழுதாவூர் ரோடு, சண்முகாபுரம், சீனிவாசபுரம், ரங்கா நகர், சிவசக்தி நகர், சக்தி நகர், மோதிலால் நகர், குண்டுசாலை, உழவர்கரை, பசும்பொன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும் என பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு தெரிவித்துள்ளது.

    ×