என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டையில் அடிக்கடி குடிநீர் குழாய்கள் உடைவதால் வீணாகி செல்லும் தண்ணீர்
    X

    நிலக்கோட்டையில் அடிக்கடி குடிநீர் குழாய்கள் உடைவதால் வீணாகி செல்லும் தண்ணீர்

    • கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பல இடங்களில் தற்போதே மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் மற்றும் பேரூராட்சி பகுதிக்கும் அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மழை போதிய அளவு பெய்யாத காரணத்தால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் முறையாக ஆங்காங்கே பழுது ஏற்படும் குழாய்களை சரி செய்யாததால் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்லும் சம்பவமும் நடந்து வருகிறது.

    இதனை சரி செய்வதற்கு அதிகாரிகளும், பணியாளர்களும் கடுமையாக முயன்றாலும் மற்றொரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இது போன்ற காரணங்களால் கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படும் பகுதிகளை ஆராய்ந்து அதனை சரி செய்ய ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். பல இடங்களில் தற்போதே மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி வருகின்றனர். பழுதடைந்த சாலைகளில் குழாய் உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வீணாவதோடு சாலைகளும் சேதமடைகிறது. மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முறையான ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×