என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் விநியோகம் நிறுத்தம்"

    • காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும்.
    • முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித் துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை முத்திரைப்பாளையம் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு இந்திரா நகர் அரசு ஆரம்ப பள்ளி அருகில் பூத்துறை ரோட்டில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை பொதுப் பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித் துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.

    புதுவை, வில்லியனூர் குடிநீர் பிரிவு, நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மடுகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
    • மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித் துறை சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வில்லியனூர் குடிநீர் பிரிவு மடுகரை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிமுதல் 2 மணிவரை மடுகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப் பணித்துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

    புதுவை எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை ராகவேந்திரா நகர், மாரியம்மன் நகர், பூமியான்பேட்டை, கோடிசாமி நகர், நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எஸ்.எஸ் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை சுகாதாரகோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வில்லியனுார் எஸ்.எஸ் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை (வியாழக்கிழமை) மதியம் 12 முதல் 2 மணி அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதுபோல் 10-ந் தேதி ஆரியப்பாளையம், 11-ந் தேதி கூடப்பாக்கம், 13-ந் தேதி கூடப்பாக்கம் பேட், ஆகிய பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த பகுதிகளில் மேற்கண்ட தேதியில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
    • உழவர்கரை, பசும்பொன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை எம்.ஜி.ஆர். நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இதனால் நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணி வரையில், மூலக்குளம், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ஜான்குமார் நகர், தட்சணாமூர்த்தி நகர், பாலாஜி நகர், அண்ணா வீதி, ஜெயாநகர், ரெட்டியார்பாளையம்,

    புதுநகர், வழுதாவூர் ரோடு, சண்முகாபுரம், சீனிவாசபுரம், ரங்கா நகர், சிவசக்தி நகர், சக்தி நகர், மோதிலால் நகர், குண்டுசாலை, உழவர்கரை, பசும்பொன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும் என பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு தெரிவித்துள்ளது.

    • விஸ்வநாதன் நகர் பகுதி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
    • எம்.ஜி. ரோடு மேற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை குடிநீர் உட்கோட்டம், வடக்கு பிரிவுக்குட்பட்ட விஸ்வநாதன் நகர் பகுதி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.

    இதனையொட்டி வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மாணிக்க முதலியார்தோட்டம், தெபேசான்பேட், விஸ்வநாதன் நகர், லூர்து நகர், எம்.ஜி. ரோடு மேற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • இரண்டாவது குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது முற்றிலும் தடைபடும் என தெரிவித்துள்ளனர்.
    • சனிக்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர் பகுதிகளில்மாநகராட்சி சார்பில் குடிநீர்விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, குடிநீர் விநியோகம் செய்யப்படும் தலைமை நீரேற்று நிலையம் மேட்டுப்பாளையத்தில் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்கு புதிய மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின் வாரியத்தினரால் மின் பணிகள் இரு தினங்கள் மேற்க்கொள்ளப்பட உள்ளதால் குடிநீர் இறைப்பு பணிகள் தடைபடும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் இரு தினங்கள் இரண்டாவது குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது முற்றிலும் தடைபடும் என தெரிவித்துள்ளனர்.

    எனவே, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1-க்குட்பட்ட வார்டு 1, 13, 14 மண்டலம் 3-க்குட்பட்ட வார்டு 44, 45, 46, 47, 48, 49, 50, 51 & 56 மற்றும் மண்டலம் 4-க்குட்பட்ட வார்டு 52, 55 ஆகிய பகுதிகளில் 15.12.2022 மற்றும் 16.12.2022 (வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை) ஆகிய இரு தினங்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.மேலும் 17.12.2022 சனிக்கிழமை முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சூளைமேடு நீர் பகிர்மான நிலையம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள புதிய நீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள அஞ்சலகம் அருகில் குடிநீர்க்குழாய் இணைப்பு பணிகள் நாளை, நாளை மறுநாள் நடைபெறவுள்ளதால் சூளைமேடு நீர் பகிர்மான நிலையம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள புதிய நீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 7 மணி வரை அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

    தேனாம்பேட்டை மண்டலத்தில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோபாலபுரம், தியாகராய நகர், தேனாம்பேட்டை கோடம்பாக்கம் மண்டலத்தில் கோயம்பேடு, சின்மயா நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, ரங்கராஜபுரம், தியாகராய நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், சி.ஐ.டி. நகர்.

    வளசரவாக்கம் மண்டலத்தில் தாய்சா அடுக்குமாடி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேலும் அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர்த் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் வழக்கம்போல் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×