search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking water supply stop"

    • இரண்டாவது குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது முற்றிலும் தடைபடும் என தெரிவித்துள்ளனர்.
    • சனிக்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர் பகுதிகளில்மாநகராட்சி சார்பில் குடிநீர்விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, குடிநீர் விநியோகம் செய்யப்படும் தலைமை நீரேற்று நிலையம் மேட்டுப்பாளையத்தில் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்கு புதிய மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின் வாரியத்தினரால் மின் பணிகள் இரு தினங்கள் மேற்க்கொள்ளப்பட உள்ளதால் குடிநீர் இறைப்பு பணிகள் தடைபடும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் இரு தினங்கள் இரண்டாவது குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது முற்றிலும் தடைபடும் என தெரிவித்துள்ளனர்.

    எனவே, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1-க்குட்பட்ட வார்டு 1, 13, 14 மண்டலம் 3-க்குட்பட்ட வார்டு 44, 45, 46, 47, 48, 49, 50, 51 & 56 மற்றும் மண்டலம் 4-க்குட்பட்ட வார்டு 52, 55 ஆகிய பகுதிகளில் 15.12.2022 மற்றும் 16.12.2022 (வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை) ஆகிய இரு தினங்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.மேலும் 17.12.2022 சனிக்கிழமை முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    குழாய் உடைப்புகளை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்கவும், உடைந்த பழைய குழாய்களை மாற்றி அமைத்து இரும்பு குழாய்கள் பதித்து இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 6-ந்தேதி அன்று ஒரு நாள் மட்டும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    மதுரை:

    மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி வைகை குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் 2-ம் வைகை குடிநீர் திட்டத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயில் ஆரப்பாளையம் அம்மா பாலம் அருகில் வைகை ஆற்றின் தென்கரையில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பு மற்றும் சுந்தரராஜபுரம் மேல்நிலைத் தொட்டி அருகில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்புகளை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்கவும், உடைந்த பழைய குழாய்களை மாற்றி அமைத்து இரும்பு குழாய்கள் பதித்து இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 6-ந் தேதி (சனிக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் கீழ்க்கண்ட பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    வடகரை பகுதியிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் வார்டு எண்.6 முதல் 9, 27 மற்றும் 33 முதல் 47 வரை அதாவது அருள்தாஸ்புரம், தத்தனேரி, செல்லூர், மீனாட்சிபுரம், குலமங்கலம் ரோடு, கோரிப்பாளையம், ரேஸ்கோர்ஸ் காலனி, டி.ஆர்.ஓ. காலனி, பி அண்டு டி காலனி, பீ.பீ. குளம், நரிமேடு, புதூர், அண்ணா நகர், கே.கே.நகர், மதிச்சியம், கரும்பாலை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் சப்ளை இருக்காது.

    தென்கரை பகுதியில் வார்டு எண்.19, 28, 63, 64, 77 மற்றும் 88 முதல் 93 வரையிலுள்ள பகுதிகளுக்கும் அதாவது எச்.எம்.எஸ். காலனி, விராட்டிப்பத்து, பொன்மேனி, சம்மட்டிபுரம், சுந்தரராஜபுரம், ஜெய்ஹிந்து புரம், டி.வி.எஸ்.நகர், முத்துப்பட்டி, அழகப்பன் நகர், கீரைத்துறை, வில்லாபுரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் சப்ளை இருக்காது.

    எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அத்தியாவசியமான வார்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சேலத்தில் 10-ந்தேதி ஒரு நாள் மட்டும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கமி‌ஷனர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாநகராட்சிக்கு தனிக்குடிநீர் திட்டத்தின் கீழ் மேட்டூரில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் தொட்டில்பட்டியில் நாளை மறுநாள் (10-ந்தேதி) தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 10-ந்தேதி ஒரு நாள் மட்டும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×