நெட்டப்பாக்கம் பகுதியில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
நெட்டப்பாக்கம் பகுதியில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்
Published on

புதுச்சேரி:

புதுவை பொதுப்பணித் துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.

புதுவை, வில்லியனூர் குடிநீர் பிரிவு, நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com