புகைப்பட கண்காட்சி மூலம் அரசின் திட்டங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

கலெக்டர் அரவிந்த் பேச்சுமாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்தது
புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்த காட்சி.
புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்த காட்சி.
Published on

நாகர்கோவில்:

குழித்துறை நகராட்சிக்கு ட்பட்ட பம்மம் பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி இன்று நடைபெற்றது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனம ழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க ப்பட்டதை நேரில் பார்வையிட்டது.

இன்னுயிர் காப்போம்,– நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம்,

காணி பழங்குடியினர்க ளுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது,

முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது, காலை உணவுத்திட்டம்,

புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்க ப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com